என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிக்ஸ்"

    • அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தோனேசியா.
    • 2009 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.

    பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இந்தோனேசியா இணைந்ததாக பிரேசில் அறிவித்து இருக்கிறது. தெற்கு ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருக்கிறது.

    இது தொடர்பாக பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு ஆசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு உலகளாவிய நிர்வாகத்தின் நிறுவனங்களை சீர்திருத்தும் விருப்பத்தை மற்ற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், உலகளாவிய தெற்கிற்குள் ஒத்துழைப்பை வழங்கவும் சாதகமாக பங்களிக்கிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2025 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை ஏற்றுள்ள பிரேசில், இந்தோனேசியாவை அமைப்பில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கியதாக தெரிவித்தது.

    2009 ஆம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முழு உறுப்பினர்களாக இணைந்தன.

    • டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.
    • அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும்

    அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை மீண்டும் எச்சரித்துள்ளார். இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.

    அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும். இந்நாடுகளுக்கு பொதுவான நாணயம் இல்லை.

    இதற்கிடையே உக்ரைனில் நடந்துவரும் போரின் காரணமாக ரஷியா பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது. இதனைத்தொடர்ந்து டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.

    பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்தியேக நாணயம் உருவாக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதை சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ள டிரம்ப்,

    பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. இதை நாம் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது.

    இந்த விரோத நாடுகளிடமிருந்து ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ, வலிமைமிக்க அமெரிக்க டாலரை மாற்ற வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ மாட்டோம் என உத்தரவாதம் வந்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் 100% வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.

    மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும். அவர்களின் உத்தரவாதத்தை நாங்கள் கோரப் போகிறோம்.

    அவர்கள் மற்றொரு முட்டாள் நாட்டைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் சர்வதேச வர்த்தகத்திலோ அல்லது வேறு எங்கும் பிரிக்ஸ் அமெரிக்க டாலரை மாற்றும் வாய்ப்பு இல்லை. அவ்வாறு முயற்சிக்கும் எந்த நாடும் வரிகளை எதிர்நோக்க சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நட்பை இழக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   

    • பிரிக்ஸ் அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
    • பிரிக்ஸில் இணைய சவுதி அரேபியாவுக்கு அழைப்பு.

    அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.

    மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது. பிறகு, 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.

    கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது. சவுதி அரேபியாவும் இந்த அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

    • இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
    • பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

    வரிவிதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா, ரஷியாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.

    இந்தியாவில் நடந்த தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது, இந்தியா வரலாற்று ரீதியாக ரஷியாவிடமிருந்து தனது இராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை வாங்கியுள்ளது.  

    ரஷியாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் - அமெரிக்கா கொடுத்த ஆஃபர்

    மேலும் டாலருக்கு மாற்றாக உலகளாவிய நாணயத்தை உருவாக்க பிரிக்ஸ் முயற்சிக்கிறது. இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா உள்ளது.

    இது அமெரிக்க-இந்திய உறவுகளை பலவீனப்படுத்துகிறது. இந்த வகையான விஷயங்கள் அமெரிக்கா - இந்தியா இடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவதில்லை.

    இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கான வரியை பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷியா, சீனா, அங்கோலா, அர்ஜெண்டினா ஆகிய நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். #PMModi #BRICS #IndiaatBRICS
    ஜோகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    மேலும், மாநாட்டில் பார்வையாளராக அங்கோலா, அர்ஜெண்டினா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களிடம் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.



    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அங்கோலா ஜாவோ, அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்னாப்பிரிக்க அதிபர் உடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


    ×