என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரங்கிமலை"

    • 2008 ஆம் ஆண்டு 495 கோடி ருபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது
    • பறக்கும் ரெயில் சேவையானது தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது.

    வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் விரிவாக்க திட்டம் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2025, மார்ச் முதல் இந்த தடத்தில் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2008 ஆம் ஆண்டு 495 கோடி ருபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்தின் செலவு தற்போது ரூ.734 கோடியாக உயர்ந்துள்ளது. பறக்கும் ரெயில் சேவையானது தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது.

    இந்நிலையத்தில் விரிவாக்க திட்டம் நிலம் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக இடையில் முடங்கியது. நீதிமன்ற தலையீட்டின்பின் 2022 இல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மேம்பாலம் இணைப்பு பணிகள் முடிந்து ரெயில் பாதை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் மார்ச் 2025 மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சேவை தொடங்கும்பட்சத்தில் சென்னையில் சுமார் 5 லட்சம் மக்கள் பயனடைவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

    • 2022-ம் ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு மாணவி சத்ய பிரியா தள்ளிவிட்டு கொல்லப்பட்டார்.
    • சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் 30-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

    சென்னை:

    2022-ம் ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு மாணவி சத்ய பிரியா தள்ளிவிட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, சதீஷும், சத்யாவும் காதலித்து வந்ததாகவும் பிறகு சதீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு பிரிய துவங்கியிருக்கிறார் சத்யா. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ், அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

    எனினும் சத்யப்ரியா சதீஷின் காதலை ஏற்கவேயில்லை. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இதனை தொடர்ந்து கைதான சதீஷ் பல முறை ஜாமினுக்கு முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து சதீஷ் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டதாகவும், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 27ஆம் தேதி அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

    இதையடுத்து கடந்த 27 தேதிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார். சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் 30-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை பரங்கிமலையில் விபத்து நடந்த இடத்தில் மின்சார ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. மின்சார ரெயில் படிக்கட்டில் அதிகாரிகள் தொங்கிச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த கோர விபத்துக்கு பரங்கிமலை 4-வது நடைமேடையில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவர் தான் காரணமாக கூறப்படுகிறது. இந்த சுவரை அகற்றவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தாலும், ‘சுவர் அகற்றுவதற்கு வாய்ப்பில்லை’ என்று ரெயில்வே அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் மாற்றுவழி கையாளும் வகையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குறிப்பிட்ட அந்த கான்கிரீட் சுவர் - தண்டவாளம் இடையேயான தூரம் அளவிடப்பட்டது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்கப்பட்டு, படிக்கட்டில் ரெயில்வே அதிகாரிகள் ஏறிக்கொண்டனர்.

    கான்கிரீட் தடுப்பு சுவர் அருகே ரெயிலை மெதுவாக இயக்கி, ரெயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகள் முதுகில் அணிந்திருந்த ‘பேக்’, அந்த தடுப்பு சுவரில் உரசுவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கொஞ்சம் வேகமாக மின்சார ரெயிலை இயக்கி சோதனை செய்து பார்த்தனர். ரெயிலில் இருந்தபடியே தடுப்பு சுவரை பிடித்தும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக்காக விபத்து நடந்த குறிப்பிட்ட அந்த மின்சார ரெயிலே கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. இந்த ஆய்வில் அதே வழித்தடத்தில் உள்ள இரும்புத்தூண் ஒன்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து ஆய்வு விவரங்கள் அறிக்கையாக உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதேவேளையில் 5-வது நடைமேடையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.  #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident 
    ×