என் மலர்
நீங்கள் தேடியது "கிரீஸ்"
- குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் அந்நாட்டின் முக்கிய ரெயில்வே நிறுவனமான ஹெலெனிக் டிரெயின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே திடீரென்று குண்டுவெடித்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பரபரப்பான அப்பகுதியில் குண்டுவெடித்ததால் பீதி நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு வேறு குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, சின்க்ரூ அவென்யூவில் உள்ள ஹெலெனிக் டிரெயின் நிறுவனத்தின் கட்டிடத்திற்கு அருகில் வெடிக்கும் சாதனம் கொண்ட ஒரு பை வைக்கப்பட்டிருந்தது என்றனர்.
இதற்கிடையே குண்டுவெடிப்புக்கு சற்று நேரத்திற்கு முன்பு ஒரு செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் பேசிய நபர், ரெயில்வே நிறுவன அலுவலகங்களுக்கு வெளியே குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 40 நிமிடங்களுக்குள் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளன.
- இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.
கிரீஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள துறைமுக நகரமான வோலோஸ் [Volos] நகரத்தில் உள்ள கடற்கரை மற்றும் நீர் நிலைகளிலிருந்து மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து மிதப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.
சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன. காலநிலை மாற்றம் காரணிகளால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான மீன்களின் உயிரிழப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அழுகிய மீன்களால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
உயிரிழந்த மீன்களை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த நிலையில் மீன்கள் கரை ஒதுங்கி குமிந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சரக்கு கப்பல்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
- அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்
கிரீஸ் நாட்டின் கடற்பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிரீஸ் நாட்டில் உள்ளதற்குத் தீவான கவ்டோஸ் பகுதியில் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] இரவு அகதிகளை ஏற்றி கொண்டுவந்த மரப் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கிரீஸ் கடலோர காவல்படை நேற்று [சனிக்கிழமை] தெரிவித்துள்ளது.
சரக்கு கப்பல்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்டவர்களில் 29 பெண்கள் அடங்குவர். அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியாததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கிரீஸ் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதில் திடீர் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் காட்டு தீ மரங்கள் இருக்கும் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
இதனால், விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.
வனப்பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தில் அவ்வழியாக கார்களில் சென்ற பயணிகள் பலர் சிக்கினர். இதில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 56-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும் கிரீஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை காரணமாக மேற்கு ஏதென்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை அனைக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் ஐரோப்பிய நாடுகளின் உதவியை கிரீஸ் அரசு நாடியுள்ளது.