search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஜ்"

    கொழும்பு டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி ஒரே இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார் மகாராஜ். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை 338 ரன்கள் குவித்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் அசத்தினார். அவர் 9 விக்கெட்டுக்களை அள்ளினார். 5-வது விக்கெட்டாக வீழ்ந்த ரோஷன் சில்வாவை மட்டும் ரபடா வீசினார்.

    ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடம்பிடித்ததுடன், 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் ஹக் டெய்பீல்டு 1957-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் 9 விக்கெட் வீழ்த்திருந்தார். அதன்பின் 61 ஆண்டுகள் கழித்து மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் பட்டியலில் முதல் இடத்தை டெய்பீல்டு உடன் பகிர்ந்துள்ளார்.



    இங்கிலாந்தின் ஜிம் லேக்கர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளனார். ஜிம் லேக்கர் அதேபோட்டியில் மற்றொரு இன்னிங்சில் 9 விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்து வீச்சில் சிக்கி 124 ரன்னில் சுருண்டது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் நேர்த்தியாக பந்து வீசி 8 விக்கெட் வீழ்த்தவும், அதேநேரத்தில் இலங்கையின் குணதிலகா (57), கருணாரத்னே (53), டி சில்வா (60) ஆகியோர் அரைசதம் அடிக்கவும் இலங்கை நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா 16 ரன்களுடனும், ஹெராத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெராத், தனஞ்ஜெயா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெராத் 35 ரன்னில் அவுட் ஆக, தனஞ்ஜெயா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 9 விக்கெட் வீழத்தி அசத்தினார்.



    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. தனஞ்ஜெயா, தில்ருவான் பெரேரா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். கேப்டன் டு பிளிசிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் டி காக் 32 ரன்கள் சேர்க்க 34.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 126 ரன்னிலும், 73 ரன்னிலும் தென்ஆப்பிரக்கா சுருண்டது. தற்போது 124 ரன்னில் சுருண்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 272 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கருணாரத்னேயின் (158 அவுட்இல்லை) அபார சதத்தால் 287 ரன்கள் குவித்தது. பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்து.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    குணதிலகா, கருணாரத்னே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலகா 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த டி சில்வா 9 ரன்னிலும், மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் ஏஆர்எஸ் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-ம் நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.



    மேத்யூஸ் 14 ரன்னுடனும் சில்வா 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இலங்கை 272 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் இலங்கை அணி முடிந்த அளவிற்கு விளையாடிவிட்டு, தென்ஆப்பிரிக்காவை சேஸிங் செய்ய வைக்கும்.

    காலே மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இயலாத காரியம். இதனால் இலங்கையின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
    ×