search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காலே டெஸ்ட்- 2-ம்நாள் ஆட்ட முடிவில் 272 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இலங்கை
    X

    காலே டெஸ்ட்- 2-ம்நாள் ஆட்ட முடிவில் 272 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இலங்கை

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 272 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கருணாரத்னேயின் (158 அவுட்இல்லை) அபார சதத்தால் 287 ரன்கள் குவித்தது. பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்து.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    குணதிலகா, கருணாரத்னே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலகா 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த டி சில்வா 9 ரன்னிலும், மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் ஏஆர்எஸ் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-ம் நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.



    மேத்யூஸ் 14 ரன்னுடனும் சில்வா 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இலங்கை 272 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் இலங்கை அணி முடிந்த அளவிற்கு விளையாடிவிட்டு, தென்ஆப்பிரிக்காவை சேஸிங் செய்ய வைக்கும்.

    காலே மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இயலாத காரியம். இதனால் இலங்கையின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×