என் மலர்
நீங்கள் தேடியது "பெண்ணிடம் நிலம் மோசடி"
பெண்ணிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் தென்றல் நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி ராதா (வயது 44). இவர்கள் நிலம் வாங்கமுடிவு செய்தனர். அதற்காக நிலத்தரகர்கள் திருச்சி சிந்தாமணியை சேர்ந்த சத்தியமூர்த்தி, சரவணன், முருகன் ஆகியோரிடம் கூறினர். அவர்கள் திருவெறும்பூர் கல்லனை சாலையில் வேங்கூர் என்ற ஊரில் ஒரு நிலத்தை காட்டினர். அந்த நிலத்தை வாங்க ராதா முன்பணமாக ரூ.10 லட்சத்தை சத்தியமூர்த்தியிடம் கொடுத்தார். ஆனால் நிலத்தை சத்தியமூர்த்தி ராதாவுக்கு வாங்கி கொடுக்க வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ராதா நிலத்தை குறித்து விசாரித்து போது அது அங்கிகாரம் இல்லாத நிலம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராதா,சத்தியமூர்த்தியிடம் தான் கொடுத்த ரூ. 10 லட்சத்தை கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி, முருகன், சரவணன் ஆகிய 3 பேரும் ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து ராதா திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட்டின் உத்தரவுபடி திருச்சி குற்ற பிரிவு போலீசார் நிலமோசடி செய்த சத்தியமூர்த்தி, முருகன், சரவணன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.