search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயனாவரம்"

    • சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
    • மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்தநிலையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

    அதில், "முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

    இதில் கர்ப்பமான எனக்கு, சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார். கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் அந்த பெண் கூறி இருந்தார்.

    அதன்பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள் என சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. #ChennaiHorror
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி, அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஊழியர்கள், காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என பலரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

    ஏழு மாத காலமாக நீடித்த இந்த கொடுமை சமீபத்தில் தெரியவந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தி 17 பேரை கைது செய்தனர். 

    அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். 

    கோர்ட் வளாகத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் போலீசார் அழைத்து வரும் போது, ஆத்திரமடைந்த பல வழக்கறிஞர்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    இதற்கிடையே, கைதான 17 பேர் சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள் என சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. யாரும் ஆஜராகும் பட்சத்தில் அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 17 பேரையும் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். #SaveGirlChildren

    ×