search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்ணிகிருஷ்ணன்"

    மலையாள சின்னத்திரை நடிகை நிஷா சாரங்க்கு பாலியல் தொல்லை கொடுத்த டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் மீது மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. #NishaSarangh
    மலையாள டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘உப்பும் மிளகும்’ என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை நிஷா சாரங்.

    இவர் இந்த தொடரின் டைரக்டர் உண்ணி கிருஷ்ணன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்கும் போது அவர் தன்னை கையைப்பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார். மேலும் தன்னை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை டி.வி. தொடரில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    நடிகர் திலீப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் அவர் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மலையாள சினிமாவை தொடர்ந்து மலையாள சின்னத்திரையிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகை நிஷாசாரங் டைரக்டர் உண்ணி கிருஷ்ணன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியது கேரள மாநில மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது. இதைதொடர்ந்து மகளிர் ஆணையம் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தவும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #NishaSarangh
    ×