என் மலர்
முகப்பு » slug 200848
நீங்கள் தேடியது "ஆறுமுகசாமி"
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது, அறைக்கு வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். #JayalalithaaDeathProbe
சென்னை:
அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இன்று வரை நீடித்தவண்ணம் இருக்கின்றன. அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று எழுந்த புகாரை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவுடன் தொடர்புடைய அனைவரையும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அதன்படி, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தன்னிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட இரவு, சிகிச்சைக்குப் பின் கண்விழித்தபோது, அறைக்கு வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாகவும் ஜெயானந்த் தெரிவித்தார். #JayalalithaaDeathProbe

×
X