என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூண்டி விபத்து"

    பூண்டி அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பூண்டி அருகே உள்ள வேள்ளாத்துகோட்டை ரெட்டி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இவரது உறவினர் மகன் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதையடுத்து வெங்கல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்க அவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    சீத்தஞ்சேரி - வெங்கல் நெடுஞ்சாலையில் கல்பட்டு கிராமம் திம்ஸ்மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெங்கல் கிராமத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×