என் மலர்
நீங்கள் தேடியது "பல்கலைக்கழக மானியக்குழு"
- பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.) கட்டுப்பட்டவையாகும்.
- தமிழக அரசின் உயர் கல்வித்துறை கொண்டு வரும் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அமல்படுத்துவது தொடர்பாக தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஒரு சில கல்லூரிகளின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தன்னாட்சிக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் உயர் கல்வித்துறையானது கலை, அறிவியல் கல்லூரிகள் அனைத்து பொது பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலிந்து நிர்ப்பந்திப்பது தொடர்பாக பல்வேறு கல்வியாளர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர் தங்கள் கவலையை எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதாவது, மாநில அரசின் பொது பாடத்திட்டம் கொண்டு வரப்படும்போது கல்விச் சுதந்திரம் பாதிக்கப்படும். இது கல்வியின் தரத்தைக் குறைக்கும். தேசிய அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், அகில இந்திய அளவில் ஆரோக்கியமான போட்டிச் சூழலுடன், கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இடம் பெறுவதையும் இது பாதிக்கும்.
இதுபோன்ற நியாயமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் கல்வி என்பது மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டு மத்திய அரசின் பொதுப்பட்டியலில் உள்ளது. அதாவது, கல்லூரிகளின் பாடத்திட்டத்தைக் கண்காணிக்கும் அமைப்பாக பல்கலைக்கழக மானியக் குழுவே உள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டு யு.ஜி.சி.க்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.) கட்டுப்பட்டவையாகும். அதன் ஆளுமைக்கு உட்பட்டே பாடத் திட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. குறித்த கால இடைவெளியில் பாடத் திட்டங்கள் தொடர்பாக கல்வி கவுன்சில் மற்றும் நிர்வாக கவுன்சில் ஒப்புதல் பெற்று முடிவெடுக்கும் அதிகாரம் படைத்ததாக யு.ஜி.சி.யே உள்ளது.
எனவே, தமிழக அரசின் பொது பாடத்திட்டம் என்பது எந்த யு.ஜி.சி.யின் வரம்புக்குட்பட்டது இல்லை. எனவே, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்திலேயே பாடங்களை நடத்தலாம்.
தமிழக அரசின் உயர் கல்வித்துறை கொண்டு வரும் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு.
- சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
யு.ஜி.சி. என்ற பல்கலைக்கழக மானியக் குழு மூலம் மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வருகிறது. யு.ஜி.சி.க்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வரைவு சட்ட மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கான காலஅவகாசத்தை ஜூலை 20-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கலை, அறிவியல் கல்விக்கான உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வரைவு சட்டமசோதாவைப் பற்றியும், அதில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த வரைவு சட்டத்தை ஏற்கக்கூடாது என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-
கடந்த 1956-ம் ஆண்டு முதல் யு.ஜி.சி. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு தேவையற்றது.
கல்வி சார்ந்த பணிகளை மட்டும் இந்த அமைப்பு கவனிக்கும் என்பதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
யு.ஜி.சி.தான் தொடரவேண்டும் என்பது தமிழக அரசின் கருத்து. இந்தக் கருத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உடனே அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுவதும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயல்பட்டு வருகிறது. 1953-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கல்விசார்ந்த விஷயங்களில் மட்டுமின்றி, தகுதியுள்ள கல்லூரிகளுக்கு நிதி உதவி வழங்குவதும் இதன் பணியாகும். இதனால், கல்வித்தரம் மீது முழுக்கவனம் செலுத்த முடியாததால், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அமைச்சகத்தின் இணையதளத்தில் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றி கல்வியாளர்கள், பொதுமக்கள் ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு, கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தும். மானிய விவகாரங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கவனித்துக் கொள்ளும். #UGC #HigherEducationCommission