என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருகிராம்"

    • என்ன நடக்கிறது என்பதை தன்னால் உணர முடிந்தது என்றும் ஆனால் அசையவோ, குரல் எழுப்பவோ முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    • அந்த நேரத்தில் இரண்டு பெண் செவிலியர்கள் அங்கு இருந்ததாகவும், அவர்கள் நடந்ததை தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் 46 வயது பெண், பயிற்சிக்காக அண்மையில் குருகிராமிற்கு வந்திருந்தார், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். ஹோட்டல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது மூழ்கிய அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆரம்பத்தில் அவர் ஒரு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி, மேதாந்தா என்ற ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    அப்பெண் அளித்த புகாரின்படி, ஏப்ரல் 6 ஆம் தேதி, மருத்துவமனையில் அரை மயக்க நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சையில் தான் வைக்கப்பட்டு, மருத்துவமனை படுக்கையில் அசையாமல் படுத்திருந்தபோது, மருத்துவமனை ஆண் ஊழியர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், என்ன நடக்கிறது என்பதை தன்னால் உணர முடிந்தது என்றும் ஆனால் அசையவோ, குரல் எழுப்பவோ முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி , அந்த நேரத்தில் இரண்டு பெண் செவிலியர்கள் அங்கு இருந்ததாகவும், அவர்கள் நடந்ததை தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தனது கணவரிடம் தனக்கு ஏற்பட்ட துயரத்தை அவர் விவரித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மேதாந்தா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ பார்த்த காவல் துறையினர், காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர்.
    • வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை காவல் துறை பறிமுதல் செய்தது.

    ஓடும் காரின் மீது மர்ம நபர் ஒருவர் புஷ்அப் எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவில் உள்ள நபர் எவ்வித தயக்கமும், பயமும் இன்றி சர்வசாதாரணமாக ஓடும் காரின் மீது புஷ்அப் எடுக்கிறார்.

    அதே காரில் இவருடன் பயணம் செய்தவர்கள் கார் ஜன்னலின் வெளியே தங்களது தலையை நீட்டுவது போன்ற காட்சிகளும் வைரல் வீடியோவில் இடம்பெற்று இருந்தன. வைரல் வீடியோவினை டுவிட்டரில் பகிர்ந்த பயனர் ஒருவர், அதனை குருகிராம் போக்குவரத்து காவல் துறை, குருகிராம் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் குருகிராம் காவல் துறையினரை டேக் செய்தார்.

    இவரது செய்கை புஷ்அப் எடுத்த நபருக்கு வினையாக அமைந்து இருக்கிறது. வைரல் வீடியோவை பார்த்த காவல் துறையினர், அதில் உள்ள காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர். பொது இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நபருக்கு போக்குவரத்து காவல் துறையினர் ரூ. 6 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், அடுத்தவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் குருகிராம் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது.
    • காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.

    அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு கார் ஒன்று மின்கம்பத்தில் ஏறி அதில் சிக்கிக் கொண்டது. பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதால் விபத்து நடந்துள்ளது.

    மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் எஸ்யூவி மின்கம்பத்தில் ஏறி, சாய்ந்த நிலையில் அதில் சிக்கியது.

    உள்ளூர் மக்களின் உதவியால் காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார். மின்கம்பத்தில் ஏறிய காரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    விபத்து ஏற்படுத்திய ஹோண்டா அமேஸ் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுவிட்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த குருகிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைநகர் டெல்லி அருகே உள்ள குருகிராமில் பைக்கில் வந்த தனக்கு வழிவிடாததால் ஏற்பட்ட தகராற்றில் ஆட்டோ டிரைவரை குறிவைத்து பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி அருகே உள்ள குருகிராம் பகுதில் இருக்கும் பவானி என்கிளேவ் பகுதியில் உள்ள சந்து ஒன்றில் இன்று காலை ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். பைக்கில் அங்கு வந்த சப்னா என்ற 35 வயது பெண் வழிவிடக்கோரி டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

    வாக்குவாதம் முற்றி கைக்கலப்பு உருவாகிய சூழ்நிலையில், அங்குள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். சிறிது நேரத்திற்கு பிறகு தனது வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண், ஆவேசமாக டிரைவரை குறிவைத்து சுட்டுள்ளார்.

    மயிரிழையில் டிரைவர் குண்டடி படாமல் தப்பிக்க, மீண்டும் துப்பாக்கியில் குண்டை நிரப்பியுள்ளார். அதற்குள், அங்குள்ளவர்கள் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கியை அந்த பெண்ணிடம் இருந்து பறித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×