என் மலர்
நீங்கள் தேடியது "நஜீப் ரசாக்"
- 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.
- இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோலாலம்பூர் :
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.
அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் 1எம்.டி.பி. ஊழல் தொடர்பான முதல் வழக்கில் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே 1எம்.டி.பி. ஊழல் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை மாற்றியமைக்க நஜீப் ரசாக், பிரதமர் மற்றும் நிதிமந்திரியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நஜீப் ரசாக் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதரங்கள் இல்லை என கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
மேலும் நஜீப்புக்கு உடந்தையாக இருந்ததாக கூட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியாக ஆஜரான 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அருள் கந்தசாமியும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மலேசியா பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தற்போதய பிரதமர் மகாதீர் முகமதுவிடம் தோல்வியடைந்தார். தேர்தலின் போதே நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் நடத்தினர். அதில், பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள், 567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும்.
இதன் காரணமாக, நஜீப் ரசாக் மீது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் பண மோசடி உள்பட 7 வழக்குகள் பதியப்பட்டு அவர் கடந்த ஜூலை மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நஜீப் ரசாக் மீது பதியப்பட்ட ஊழல் வழக்குகள் மீதான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி முதல் நடபெறும் என நீதிபதி முகமது நஸ்லான் முகமது கசாலி இன்று அறிவித்துள்ளார்.
இதில், நஜிப் ரசாக் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஆண்டு கணக்கில் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #NajibRazak
மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார். தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அதேபோல, கடந்த இரு மாதங்களில் நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள், 567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும்.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்தாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், நேற்று அவர் பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் ரசாக் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது நம்பிக்கை மோசடி என்ற பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை நஜீப் மறுத்தார். மேலும், அவரது தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவரது மனுவை பரிசீலித்த நீதிமன்றம் நஜீப்புக்கு ஜாமீன் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 லட்சத்து 57 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் 1 கோடி 75 லட்சம்) பிணைத் தொகை கட்ட வேண்டும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. #Malaysia #NajibRazak
மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார்.
தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இப்போது இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாக பிரதமர் மகாதீர் முகமது கூறி இருக்கிறார். மேலும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமர் மகாதீர் முகமது கூறினார்.
எனவே, ஊழல் குற்றச்சாட்டில் நஜீப் ரசாக் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மலேசியாவில் நிலவுகிறது.
222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
அனல் பறந்த பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். தற்போது வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மலேசியாவின் உள்நாட்டு நேரமாக இன்றிரவு பத்துமணி நிலவரப்படி, மகாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் என கோலாலம்பூரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவருமே தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், நஜீப் ரசாக் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங், சுகாதாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் நஜீப்பின் பி.என்.கட்சி நூறுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணியும் அதிக இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MalaysiaElection #rulingcoalitionlead