search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசிக்"

    • பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
    • சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் ஆலயத்தில் சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோவில் இதுமட்டும் தான்.

    ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வெகுண்டெழுந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையை கொய்தார். இந்த செயலால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவது அலைந்து திரிந்தார்.

    ஒருநாள் சோமேஸ்வரர் என்ற இடத்திற்கு சிவபெருமான் வந்தபோது பசு ஒன்று தன் கன்றுடன் பேசுவதைக் கண்டார். பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளான கன்றுக்கு தாய் பசு பரிகாரம் சொல்லிக்கொண்டு இருந்தது.

    பஞ்சவதி அருகே வந்ததும், கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்மஹத்தி பாவத்தில் இருந்து விடுபட்டு பழைய நிலைக்கு திரும்பியது. அதேஇடத்தில் சிவபெருமானும் நீராடி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். பின்னர் அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடிகொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவபெருமான் ஒப்புக்கொள்ளவில்லை.

    தன்னை பிரம்மஹத்தில் பாவத்தில் இருந்து விடுவித்ததால் நீ எனக்கு குருவுக்கு சமமானவர் என்றும் அதனால் என் முன்னால் அமரவேண்டாம் என்றும் நந்தியை கேட்டுக்கொண்டார் சிவபெருமான். ஆனால் நந்தியோ சிவபெருமான் மீது கொண்ட அளவுகடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெறியேற மறுத்து தன்னை அனுமதிக்குமாறு சிவபெருமானிடம் மன்றாடியது. இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொன்னதால் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது நந்தி என்று புராணவரலாறு கூறுகிறது. எனவே பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் கோவிலில் நீங்கள் நந்தி இல்லாத சிவபெருமானை தான் தரிசிக்க முடியும்.


    கேட்டதை விட ஐந்து மடங்கு அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம்.மை பொதுமக்கள் முற்றுகையிட போலீசாருக்கு விஷயம் தெரிந்து வருவதற்குள் 2 லட்சம் ரூபாய் காலியாகியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள விஜய் நகர் பகுதியில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று ஒருவர் 1000 ரூபாய் எடுக்க சென்று இயந்திரத்தில் என்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஐந்து மடங்கு அதிகமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. சிறிது அதிர்ச்சியடைந்தாலும் அவர் தனது நண்பர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து, அப்பகுதியில் இந்த செய்தி பரவ அனைவரும் ஏ.டி.எம் கார்டுடன் ஏ.டி.எம்.மை முற்றுகையிட்டனர். ஆயிரம் கேட்டவருக்கு 5 ஆயிரம், 4 ஆயிரம் கேட்டவருக்கு 20 ஆயிரம் என ஐந்து மடங்கு அதிகமாக பணத்தை அள்ளி கொடுத்துள்ளது இயந்திரம்.

    தகவல் அறிந்து போலீசார் அங்கு வருவதற்குள்ளாக இயந்திரத்தில் இருந்த 2 லட்சம் ரூபாயும் காலியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். அறையை பூட்டினர். சாப்ட்வேர் கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. சிசிடிவி மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்டு தகவல்களை அடிப்படையாக கொண்டு யார் பணம் எடுத்துள்ளனர் என்ற விபரங்களை சேகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் லாரி மீது மினி பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சந்த்வட் பகுதியில் இன்று அதிகாலை லாரி மீது மினி பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.

    லாரி டயர் பஞ்சர் ஆனதால் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பஸ்சானது மத்தியப்பிரதேசம் மாநிலம் தானே மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×