search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 207112"

    அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தை தொடர்ந்து கேங்காக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். #CVKumar
    அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

    தயாரிப்பாளரான சி.வி.குமார், ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்‌ஷரா கவுடா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். 



    திரில்லர் கதையாக உருவான இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். இவர் அடுத்ததாக ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’  என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
    ×