என் மலர்
நீங்கள் தேடியது "புழுதிப் புயல்"
- மரங்கள் முறிந்து வாகனங்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
- கடும் சிரமத்திற்கு உள்ளான பயணிகள் தங்களது அனுபவங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இந்தியாவின் தலைநகரமான டெல்லி சமீப காலமாக காற்று மாசு, கடும் குளிர் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியது.
இதில் மரங்கள் முறிந்து வாகனங்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் புழுதிப் புயலின் போது, மதுவிகார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே புழுதிப் புயல் காரணமாக விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 12மணி நேர விமான தாமதத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்னர். மேலும் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளான பயணிகள் தங்களது அனுபவங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாயகர நிலைக்கு சென்றுள்ளது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசிவருகிறது. இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 8 மடங்கு மாசு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இன்னும் சில நாட்களுக்கு மாசு நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு நிலவுவதால் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.