என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எம்.டபிள்யூ கார்"

    • இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது.
    • இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு கடைக்கு வெளியே வைத்திருந்த பூந்தொட்டியை பி.எம்.டபிள்யூ. காரில் வந்த பெண் ஒருவர் திருடும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    பி.எம்.டபிள்யூ. காரில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டியை திருடி காருக்குள் வைக்கிறார். இதனை பார்த்த சிலர் அப்பெண்ணின் காரை வழிமறித்து இதுகுறித்து கேட்டபோது தினமும் ஒரு பூந்தொட்டியை எடுத்து செல்வேன் என்று அவள் கூறியுள்ளார்.

    இந்த பெண் ஏற்கனவே அக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இரண்டு பூந்தொட்டிகளை திருடிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    எனினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசாரிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

    தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் மரணமடைந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார்.
    நைஜர்:

    நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தை சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். மரணமடைந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார்.

    சமீபத்தில் அவர் தந்தை மரணமடைய, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக புதிதாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதில் தனது தந்தையை வைத்து அடக்கம் செய்துள்ளார் அஷுபுய்க். இந்த செய்தி உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியானதை அடுத்து பலர் இந்த சம்பவத்தை கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சில வாரங்களுக்கு முன்னர் சீனாவில் ஒரு வாலிபர் தனது ஆசை காரை தனது மரணத்திற்கு பின்னர் தன்னுடனே புதைக்க வேண்டும் என கூற்றின் படி, அவர் மரணமடைந்த பின்னர் காரில் வைத்து புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    ×