என் மலர்
முகப்பு » slug 210529
நீங்கள் தேடியது "இறுதிபோட்டி"
இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பையில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி சாதனையை சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. #SunilChhetri #Messi
மும்பை:
கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
இந்த போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்று காண்டினெண்டல் கால்பந்து கோப்பையை வென்றது.
கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த 2 கோல்களுடன் சேர்ந்து சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அர்ஜெண்டினாவுக்காக ஆடிய மெஸ்சியின் 64 கோல்கள் என்ற மைல்கல்லை சமன் செய்துள்ளார்.
போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SunilChhetri #Messi
இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
மும்பை:
கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன.
இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 8வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, 29-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி 2வது கோலையும் அடித்தார். இதையடுத்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன்பின், தொடர்ந்து ஆடிய கென்யா அணி இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
×
X