search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்னம்"

    காதல் திருமணம் செய்த பெண் தற் கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. இது தொடர்பாக கணவர்-மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் சுபலட்சுமி (வயது 19). இவர் என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார். சுபலட்சுமியும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான தர்மலிங்கம் மகன் தர்மதுரை (25) என்பவரும் காதலித்து வந்தனர். தர்மதுரை சென்னையில் கூலி வேலை செய்து வரு கிறார். இந்த காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தர்மதுரையும்-சுபலட்சுமியும் தங்களது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பெரம்பலூர் அருகே உள்ளலாடபுரம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தர்மதுரையையும், சுபலட்சுமியும் அவர்களது பெற்றோர் தங்களது குடும்பத்தில் சேர்த்து கொண்டனர். இதையடுத்து குன்னத்தில் உள்ள தர்மதுரையின் பெற்றோர் வீட்டில் சுபலட்சுமி வசித்து வந்தார். அப்போது தர்ம துரையின் தாய் கலைசெல்வி வரதட்சணை கேட்டு சுபலட்சுமியிடம் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து சுபலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து தர்மதுரை தனது மனைவி சுபலட்சுமியிடம் கோபித்து கொண்டு பேசுவதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தர்மதுரை மது அருந்தி விட்டு, மாமனார் வீட்டுக்கு சென்று சுபலட்சுமியிடம் தகராறு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் தர்மதுரை மது அருந்தி விட்டு சுபலட்சுமி வீட்டிற்கு சென்று அவரையும், அவரது தந்தை ராஜாங்கம், தாய் வள்ளியம்மை ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி விட்டு சென்றார்.

    இதனால் மனமுடைந்த சுபலட்சுமி நேற்று அதிகாலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுபலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சுபலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில், தனது சாவுக்கு காரணம் மாமியார் கலைசெல்வி, கணவர் தர்மதுரை, அவரது தம்பி இளையராஜா ஆகியோர் தான் எனவும், மேலும் பல உருக்கமான தகவலை எழுதி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்த சுபலட்சுமிக்கு திருமண மாகி 1½ ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் கோட்டாட் சியர் விஸ்வநாதன் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சுபலட்சுமியின் தந்தை ராஜாங்கம் குன்னம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மதுரை, அவரது தாய் கலைசெல்வி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×