என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 212035
நீங்கள் தேடியது "பெண் பலி"
ஊத்துக்கோட்டை அருகே வயலில் தாழ்வான மின்கம்பி உரசியதில் பெண் பலியானார். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் தனது வயலில் நாற்று நடவு பணிகளுக்காக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள கண்ணாவரம் பகுதியில் இருந்து 25 பெண் தொழிலாளர்களை அழைத்து வந்து இருந்தார்.
உப்பரபாளையம் பகுதியில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்ததில் மின் வயர்கள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தெரியப்படுத்தியும் மின் கம்பம் சரி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் வயலில் நாற்று நடவு பணியில் ஈடுபட்டிருந்த முனியம்மாள் (வயது 50) மீது தாழ்வாக தொங்கிய மின் வயர் உரசியது.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பெண் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பென்னாலூர்பேட்டை போலீசார் முனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால் முனியம்மாள் பலியாகி உள்ளார். இது தொடர்பாக ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர், போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர், லைன்மேன், உதவியாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

×

X