என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரான்"

    • ஈராக்கைச் சேர்ந்த சல்வான் மோமிகா முஸ்லிம்களின் புனித நூலை எரித்தார்.
    • இத்தகைய செயலுக்கு இஸ்லாமிய நாடுகள் ஸ்வீடனை கடுமையாக விமர்சித்தன.

    ஸ்டாக்ஹோம்:

    ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 2023-ம் ஆண்டில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஒரு எதிர்ப்பாளர் குரானை எரித்துள்ளார். இத்தகைய செயலை அனுமதித்ததற்காக ஸ்வீடனை பல இஸ்லாமிய நாடுகள் கடுமையாக விமர்சித்தன.

    ஈராக்கில் பிறந்த அகதியான சல்வான் மோமிகா என்பவர் முஸ்லிம்களின் புனித நூலை எரித்தார். இந்தச் செயலைத் தொடர்ந்து ஒரு இனம் அல்லது தேசியக் குழுவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், ஸ்வீடனில் மீண்டும் மீண்டும் குரானை எரித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். முந்தைய நாள் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

    பல போராட்டங்களில் குரான்களை எரித்த ஈராக்கிய கிறிஸ்தவரான சல்வான் மோமிகா இன வெறுப்பைத் தூண்டும் குற்றவாளியா என்பதை ஸ்டாக்ஹோம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. ஆனால் சல்வான் மோமிகா இறந்துவிட்டதால் கூடுதல் அவகாசம் தேவை எனக்கூறி தீர்ப்பை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பாரம்பரிய முறை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு காலத்தில் அதிகாலை நேரத்தில் உணவு உண்ட பின்னர், அன்றைய நோன்பை தொடங்குவார்கள். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நோன்பு வைப்பவர்களை அதிகாலையில் எழுப்புவதற்காக குரான் வரிகளை கூறிகொண்டு ஒரு குழு வீதி வீதியாக செல்வார்கள்.

    இந்த பாரம்பரிய முறை கடந்த 25 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் நிலவிய பயங்கரவாத செயல்பாடுகள் காரணமாக இந்த பாரம்பரிய முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை குரான் வரிகளை மைக்கில் கூறிக்கொண்டே குழு ஒன்று வீதி வீதியாக சென்று நோன்பு கடைப்பிடிப்பவர்களை எழுப்பியுள்ளது. ரமலான் மாதத்தில் காஷ்மீரில் ராணுவம் தனது வழக்கமான சோதனை மற்றும் சிறப்பு ஆபரேஷன்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×