என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சல்மான்கான்"

    • இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இதைத் தொடர்ந்து அட்லீ, சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    அட்லீ

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தன் அடுத்த படத்தில் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியுள்ளதாகவும் கதை பிடித்துப்போகவே சல்மான் கான் அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான்.
    • இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

    பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இந்தியில் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வரவே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.


    சல்மான்கான் - ஜானி மாஸ்டர்

    இதையடுத்து சல்மான் கானை தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சல்மானுடன் ஜானி மாஸ்டர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஜானி மாஸ்டர் சமீபத்தில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சல்மான்கானின் உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது.
    • ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவரது தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர்.


    சல்மான்கான்

    இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் கொடுத்த புகாரின் பேரில் பந்த்ரா போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி யான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் சல்மான்கானின் அலுவலகத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
    • கொலை மிரட்டல் விடுத்ததாக லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார், ரோகித் கார்க் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு கடந்த வாரம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்தார்.


    சல்மான்கான்

    போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சல்மானுக்கு ஒய்.பிளஸ். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சல்மான்கானுக்கு இங்கிலாந்தில் இருந்து மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இமெயில் ஐ.டி. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த எண் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • அஜித் நடித்த ‘வீரம்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
    • இதில் நடிகர் சல்மான்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


    என்டம்மா பாடல் -கிஸி கி பாய், கிஸி கி ஜான்

    இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் 'என்டம்மா'என்ற பாடல் வெளியானது. இதில், வேட்டி கட்டிக்கொண்டு சல்மான்கான் ஆடும் நடன அசைவுகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த பாடலில் தென்னிந்திய கலாசார உடை இழிவுப்படுத்தப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய கலாசாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் இந்த பாடல் உள்ளது. அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாசார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்தப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.

    • பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான்கான்.
    • சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு சமீபத்தில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

    சல்மான்கான்

    இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதாவது, நேற்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

    • சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’.
    • இப்படம் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்காகும்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்'என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


    கிசி கா பாய் கிசி கி ஜான்

    இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    • நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

    நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மனிஷ் சர்மா இயக்கத்தில் கத்ரினா கைப், இம்ரான் ஹாஸ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது சல்மான் கானுக்கு கையில் அடிபட்டு வலியால் துடித்திருக்கிறார்.


    காயமடைந்த சல்மான்கான்

    இந்த நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் வந்து சல்மான்கானை பரிசோதித்து முதலுதவி அளித்தனர். அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்து அதற்கான சிகிச்சை அளித்தனர். தோள்பட்டையில் பேண்டேஜ் ஒட்டி தசைநார்ப் பிடிப்பைச் சரி செய்தனர். சல்மான்கான் இந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    • இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள்.
    • அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான் கானும் இப்போது ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.

    இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான்கானும் இப்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.


    சல்மான்கான்

    மும்பையில் கடற்கரையை யொட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் கட்டபோவதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமைய இருக்கிறது. இதில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. இந்த ஓட்டல் நடிகர் சல்மான்கானின் தாயார் சல்மா பெயரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • நடிகர் சல்மான்கானுக்கு சில மாதங்களாக தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
    • இவருக்கு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான்கான் தொடர்ந்து கொலை மிரட்டலை சந்தித்து வருகிறார். அண்மையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்ததையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


    கோல்டி பிரார்- சல்மான்கான்

    இந்த நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி பிரார் தற்போது நடிகர் சல்மான்கானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் சல்மான்கானை நிச்சயமாக கொல்வோம். லாரன்ஸ் பாய் தான் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார். நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று கூறினார்.

    • நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர், பார்வதி நாயர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.


    அஜித்தின் கதாபாத்திரத்தை இயக்குனர் கவுதம் மேனன் மெருகேற்றி இருப்பார். மழை வரப்போகுதே.. அதாரு அதாரு போன்ற பாடல்கள் கொண்டாடப்பட்டன. இப்படத்தில் அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார்.


    இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் நடிகர் சல்மான்கான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 'வீரம்' படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைகர் 3'.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.


    இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான ஒரே நாளில் ரூ.40 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


    பட்டாசு வெடித்த ரசிகர்கள்

    இந்நிலையில், 'டைகர் 3' படத்தில் நடிகர் சல்மான் கானின் எண்ட்ரியை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் திரையரங்கில் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    ×