search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் இந்தியில் ரீமேக்காகும் அஜித் படம்.. ஹீரோ யார் தெரியுமா?
    X

    மீண்டும் இந்தியில் ரீமேக்காகும் அஜித் படம்.. ஹீரோ யார் தெரியுமா?

    • நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர், பார்வதி நாயர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.


    அஜித்தின் கதாபாத்திரத்தை இயக்குனர் கவுதம் மேனன் மெருகேற்றி இருப்பார். மழை வரப்போகுதே.. அதாரு அதாரு போன்ற பாடல்கள் கொண்டாடப்பட்டன. இப்படத்தில் அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார்.


    இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் நடிகர் சல்மான்கான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 'வீரம்' படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×