search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணாச்சலப்பிரதேசம்"

    • ரஞ்சி கோப்பையில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா அணிகள் மோதின
    • முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30.3 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா அணிகள் மோதின

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30.3 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ரஞ்சி கோப்பையில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட் கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனையடுத்து பேட்டிங் செய்த கோவா அணி 54 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்களை குவித்துள்ளது.

    • 6 முதல் 14 வயதுடைய 15 மாணவிகளை யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்

    அருணாச்சலப்பிரதேசத்தில் 21 பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டன் யும்கென் பக்ராவிற்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

    விடுதி வார்டனுக்கு உதவி செய்த முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் இந்தி ஆசிரியர் மார்போம் நகோம்டிர் ஆகியோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளியில் படிக்கும் தனது 12 வயதான இரட்டை மகள்களை வார்டன் யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை ஒருவர் புகார் அளித்தார்.

    இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. அப்போது தான் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு வார்டன் போதைப்பொருட்கள் கொடுத்துள்ளார் என்றும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார். வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    விடுதி வார்டனின் அத்துமீறல் குறித்து பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதால் மாணவர்களை அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

    அருணாச்சலப்பிரதேசத்தின் தேஸு பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
    இடாநகர்:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் வட கிழக்கு பகுதியான லோஹித் மாவட்டத்தில் உள்ள தேஸு என்ற பகுதியில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். 5.2 ரிக்டர் என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனினும், இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
    ×