என் மலர்
நீங்கள் தேடியது "ஓ. பன்னீர் செல்வம்"
உத்தமபாளையம்:
தேனி அருகே உத்தமபாளையம் அடுத்த சுருளி அருவியில் சாரல் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அந்த சமயத்தில் சீர்மரபினர் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும். நல வாரிய திட்டங்களை செயல்படுத்தக் கோரி அந்த அமைப்பின் மாநில பொறுப்பாளர் தவமணி அம்மாள் தலைமையில் துணை முதல்வரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் போலீசார் 3 பேருக்கு மட்டுமே மனு வழங்க அனுமதி கொடுத்தனர். இதனால் சீர் மரபினர் ஆத்திரமடைந்தனர்.
விழா முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் கார்கள் புறப்பட்டது. உடனே சீர்மரபினர் ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டனர். அதோடு நடு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.
எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோஷம் போட்டனர். உஷாரான போலீசார் சீர்மரபினரை சமரசப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #opanneerselvam
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. துண்டிக்கப்பட்ட இணையதள சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் துணை முதல்வர் அங்கு நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். #ThoothukudiFiring #SterliteProtest #OPSMeetsProtestors