என் மலர்
நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்"
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அமைதி பேரணி நடத்திய பொதுமக்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக காவல்துறையின் இந்த செயலை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் சேலம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும் மக்களை காக்க வேண்டிய அரசுகள் கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், உடனடியாக குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு நீதி விசாரணை நடத்தி, இதில், தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார், எதற்காக உத்தரவிட்டனர் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.