என் மலர்
நீங்கள் தேடியது "சவாரி"
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் முகமது நசீர் (வயது 26). இவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியில் ஜெயகாந்தன் என்பவரும் வேன் ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் ஜெயகாந்தனுக்கு வந்த ஒரு சவாரியை முகமதுநசீர் குறைந்த கட்டணத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முகமதுநசீர் திரும்பி வந்ததும், ஜெயகாந்தன் மற்றும் 15 பேர் கும்பல் முகமதுநசீரை தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள மெடிக்கலுக்குள் முகமதுநசீர் சென்றுள்ளார். அங்கும் சென்று அவரை தாக்கியதுடன், மெடிக்கலில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுப்பட்ட கமாலுதீன், மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஜெயகாந்தன், அம்பிகாபதி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.