என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடகா சட்டசபை தேர்தல்"
- காங்கிரஸ் கட்சியினரும் சூறாவளியைபோல் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.
- காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா சார்பில் டிக்கெட் பெற அக்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும், மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆயத்தமாகி வருகின்றன.
மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க.வினர் இப்போதே பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ஏற்றார்போல் பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி கர்நாடகம் வந்த வண்ணம் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியினரும் சூறாவளியைபோல் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா சார்பில் டிக்கெட் பெற அக்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கட்சிகளின் மீது அதிருப்தி கொண்டவர்கள் மாற்று கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தலைவர்கள் தொடங்கி உள்ளனர். அதன்படி, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத், பிரசாரக்குழு தலைவர் எம்.பி.பட்டீல் உள்பட தேர்தல் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது 130 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சி அமைக்கலாம் என்பதால், அந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் குறித்து தலைவர்கள் முதலில் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அதே நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் 150 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டியலை காங்கிரஸ் மேலிட தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைத்து, ஒப்புதல் பெற தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனதாளதளம் (எஸ்) கட்சி சார்பில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பஞ்சரத்னா யாத்திரை நடைபெற்று வருகிறது.
குமாரசாமி செல்லும் பகுதியெல்லாம், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பஞ்சரத்னா யாத்திரை நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயாரிப்பது குறித்து பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாநில தலைவர் சி.எம். இப்ராகிம், குமாரசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்து 2-ம் கட்ட பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- ஆட்சியை கைப்பற்ற ஆளும் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே மீண்டும் பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே மீண்டும் பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கார்கே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
- முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 24ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.
அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 கட்சிகளும் யாத்திரை பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது.
கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சி மேலிடம் அமைத்துள்ள தேர்வு குழு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 9 கட்டங்களாக நடந்தது. இதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக மாவட்ட கட்சி நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் சிபாரிசு செய்திருந்த பெயர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளி்ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, அதை கட்சி மேலிட வேட்பாளர் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
இதில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வருணா தொகுதியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தேவனஹள்ளியில் முனியப்பா, பெங்களூரு ராஜாஜிநகரில் புட்டண்ணா, ஆர்.ஆர். நகர் குசுமா, பெல்காம் ஊரகத் தொகுதியில் லட்சுமி ஹெப்பால்கர், தாவாங்கேரே தெற்குத் தொகுதியில் சாமனூர் சிவசங்கரப்பா, எம். பி பாட்டீலுக்கு பாபலேஷ்வர் சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.
- மண்டியா மாவட்டம் பேவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- டி.கே.சிவக்குமார் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி பணத்தை வீசி எறிந்தார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா், தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை வீசி எறிந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மண்டியா மாவட்டம் பேவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திறந்த வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். அந்த சமயத்தில், டி.கே.சிவக்குமார் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி பணத்தை வீசி எறிந்தார். அந்த பணத்தை மக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நிதி மோசடி வழக்கில் சிக்கி நாட்டைவிட்டு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோர் குறித்து பேசிய ராகுல் காந்தி, எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருக்கிறது? என்றார்.
இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. ராகுல் காந்தி அடுத்த மாதம் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில் அடுத்த மாதம் 5ம் தேதி ராகுல் காந்தியின் முதல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. எனவே, இந்த முறை ராகுல் காந்தி என்ன பேசப்போகிறார்? ஆளுங்கட்சிக்கு எதிரான அவரது அஸ்திரம் என்ன? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ம் ஆண்டு தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் ஓராண்டில் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு பாஜகவே காரணம் என காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், சோதனைக்குப் பிறகு முதலல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- சட்டசபை தேர்தல் பிரசாரம், கோலாருக்கு ராகுல் காந்தி வருகை, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து 2 பேரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
- 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் பாக்கி உள்ள 100 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் இடையே பலத்த போட்டியிட்டுள்ளது. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-க்கும் அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வருகின்றனர்.
இதனால் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள, அவரது வீட்டில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது 2 பேரும், சட்டசபை தேர்தல் பிரசாரம், வருகிற 9-ந் தேதி கோலாருக்கு ராகுல் காந்தி வருகை, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பா.ஜ.கவின் கொள்கை- கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜ.கவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
- பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கட்சி தாவல்கள் நடைபெற்று வருகின்றன. பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜ.கவில் இணையும் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பிற கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.
இதில் நளின்குமார் கட்டீல் பேசியதாவது:-
இன்று (நேற்று) முன்னாள் எம்.எல்.ஏ. நந்திஹள்ளி ஹாலப்பா, ஒக்கலிகர் சங்க முன்னாள் தலைவர் அப்பாஜி கவுடா போன்றவர்கள் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
பா.ஜ.கவின் கொள்கை- கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜ.கவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பா.ஜ.க தான் நம்பிக்கையான கட்சி என்று மக்கள் கருதுகிறார்கள்.
அவரவர் தகுதிக்கு ஏற்ப கட்சியில் பொறுப்பு வழங்கப்படும். அனைவரும் கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதி.
பா.ஜ.கவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாங்கள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.
- கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் அதிகாரிகளும் வாகன தணிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- போலீசார் 66 கிலோ வெள்ளிப் பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹெப்பால் சுங்கச்சாவடி அருகே பெங்களூரு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் அதிகாரிகளும் வாகன தணிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அந்த வழியாக மராட்டிய பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் குவியல், குவியலாக வெள்ளிப் பொருட்கள் இருந்தன. அதாவது வெள்ளி ஆபரணங்கள், வெள்ளி கிண்ணங்கள், கரண்டிகள், வெள்ளி தட்டுகள் என்று மொத்தம் 66 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தன.
இதுபற்றி கார் டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த ஒருவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் கார் டிரைவர் சுல்தான் கான் என்பதும், மற்றொருவரின் பெயர் ஹரிசிங் என்பதும் தெரியவந்தது. அந்த வெள்ளி பொருட்கள் மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதைத்தொடர்ந்து போலீசார், 66 கிலோ வெள்ளிப் பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். வெள்ளிப்பொருட்களின் மதிப்பு ரூ.39 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வெள்ளி பொருட்களுடன் சிக்கிய கார், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பைவியூ புராஜெக்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ளது என்பதும், சென்னையில் இருந்து அந்த காரில் வெள்ளி பொருட்களை மும்பைக்கு கொண்டுபோவதும் தெரியவந்தது. அதுபற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
- வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைன் மற்றும் நேரிலும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள்.
வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் ஆன்லைனிலேயே நிரப்பி அதன் அச்சு பிரதி எடுத்து, அதில் நோட்டரி வக்கீலின் கையெழுத்து பெற்று தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைன் மற்றும் நேரிலும் டெபாசிட் தொகையை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மனுதாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
- 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுகங்களை களமிறக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் பாஜக தேர்தல் குழு சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்தது. இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். மேலும், 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது. இதைத்தவிர இன்னும் 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
இரண்டாவது பட்டியலில் ஹூப்பள்ளி தொகுதி இடம்பெறவில்லை. 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலில் வென்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
புதுடெல்லி:
மொத்தம் 224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஆட்சி அமைக்க பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே, 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் வெளியிட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மூன்றாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல் மந்திரி லட்சுமண் சவதி அடானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வா கும்தா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுவரை மொத்தம் 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
லட்சுமண் சவதி மூன்று முறை பெலகாவி மாவட்டம் அடானி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.