என் மலர்
நீங்கள் தேடியது "பா.ஜ.க. கவுன்சிலர் சுட்டுக்கொலை"
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. கவுன்சிலரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJPcouncillor
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் கேசரி (40) நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கேசரியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கேசரியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேசரி துணை முதல்-மந்திரி கேஷவ் பிரசாத் மற்றும் பா.ஜ.க. தலைவர் நந்கோபால் நந்திக்கு நெருங்கிய நண்பர் என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேசரி குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை முன் பகையின் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கேசரி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியின் பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPcouncillor