என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்தா"

    • ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றச் சொல்லி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது.
    • பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றச் சொல்லி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ஃபர்ஹீன். அவரின் தாயார் ஃபர்ஹானா உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடன் பெற்றவர்களிடம் இருந்து மாத தவணையை வசூலிக்கும் பொறுப்பில் அவர் உள்ளார்.

    இந்நிலையில், சுஜாது கிராமத்தில் வசிக்கும் ஷாமா என்பவரிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க தனது நிறுவனத்தில் உடன் வேலை செய்யும் சச்சின் என்ற நபருடன் தனது மகள் ஃபர்ஹீனை அனுப்பியுள்ளார்.

    ஃபர்ஹீனும் சச்சினும் ஒரு பைக்கில் அந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 10 ஆண்கள் அவர்களை வலுக்கட்டாயாமாக தடுத்து, இருவரையும் தாக்கியுள்ளனர். குறிப்பாக ஃபர்ஹீனின் பர்தாவை கழட்ட சொல்லி தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பர்தா அணிந்த நபர் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • அந்த வீடியோவில், 2 நபர்கள் பைக்கில் அமர்ந்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பர்தா அணிந்தபடி ஒருவர் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அந்த வீடியோவில், 2 நபர்கள் பைக்கில் அமர்ந்துள்ளனர். அதில் பர்தா அணிந்த நபர் பைக்கை ஓட்டுகிறார். பர்தா அணிந்தவர் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவதை சுற்றி உள்ளவர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

    இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பர்தா அணிந்து பைக் ஒட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பைக்கின் பின்னர் உட்கார்ந்து வந்த இளைஞர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


    ×