search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனீ"

    • சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
    • அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.

    அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வரும் ஆஸ்லே மாசிஸ் கிளாஸ் என்ற பெண்ணுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

    முதலில் பெற்றோர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திரைப்படங்களை பார்ப்பதால் சிறுமி கற்பனையாக கருதி இருக்கலாம் என நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.

    இதனால் சிறுமியின் பெற்றோர் அந்த வீட்டில் வெப் கேமரா பொருத்தி ஆய்வு செய்தனர். அப்போது தான் சிறுமியின் படுக்கை அறையில் ஒரு பெரிய தேன் கூடு இருப்பதை கண்டனர். இதுகுறித்து பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு தெரிவித்தனர். அதன்படி வீட்டிற்கு வந்த தேனீ வளர்ப்பாளர், சிறுமியின் படுக்கை அறையில் இருந்து சுமார் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் தேனீக்கள் கொண்ட 45 கிலோ எடை உடைய தேன் கூட்டை அகற்றி உள்ளார்.

    • வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
    • காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. அங்கு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

    அவ்வாறு புகும் வன விலங்குகள் மனிதர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை கொன்றுவிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகின்றன. வயநாடு மாவட்டம் வானந்தவாடி பகுதியில் கடந்த மாதம் அஜி என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

    வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு புகுந்த காட்டு யானை, அஜியை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வயநாடு மாவட்டத்தில் குர்வா தீவு அருகே வனத்துறை வழிகாட்டி பால் என்பவரும் காட்டு யானை தாக்கி பலியானார். வயநாடு மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் காட்டு யானை தாக்கி 3 பேர் பலியாகி விட்டனர்.

    இதற்கிடையே வயநாடு மாவட்டத்தில் சில இடங்களில் புலி மற்றும் சிறுத்தையும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதிக்கு உள்ளாகினர். வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மனித மற்றும் வனவிலங்கு மோதலை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

    வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க, யானைகள் புகும் பகுதிகளில் சிறப்பு தேனீக்களை வளர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

    இது குறித்து கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-

    மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறை தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 36 வனப்பிரிவுகளில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும்.

    காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும். இந்த தேனீக்கள் கரடிகளை ஈர்ப்பதால், அவை கரடி இல்லாத பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

    வனவிலங்குகள் தாக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை செய்ய ஊராட்சி அளவில் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்படும். மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் 900 தற்காலிக கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதற்காக வயநாடு வனப்பகுதியில் 341 குளங்களும், இடுக்கியில் 249 குளங்களும் பராமரிக்கப்படுகின்றன. தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணியும் பரிசீலனையில் உள்ளது.

    வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13.70 கோடியில் ரூ.6.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7.26 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.

    இவ்வாறு முதல்- மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

    • விவசாயி உயிரிழப்பு எதிரொலியாக மலைத்தேனீக்கள் அகற்றப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து மலை தேனீக்களை அகற்றினர்

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூர் பகுதியில் இருந்த ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்களை மலை தேனீக்கள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் கவுண்டன் புதூர் பகுதியைசேர்ந்த விவசாயியான ராமசாமி (63) என்பவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது அந்த தேனீக்கள் கடித்ததில் ராமசாமி உயிரிழந்தார்.

    இதனை தொடர்ந்து முனி நாதபுரம் பகுதி ரங்கசாமி (55) என்பவர் கொடுத்த கோரிக்கை புகாரின் பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து மலை தேனீக்களை அகற்றினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • மரத்தில் இருந்த தேன்கூட்டை சிலர் கல்லால் தாக்கி கலைத்ததாக தெரிகிறது.
    • வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர், வீரன் நகர், ஜெகனி கோட்டை தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது35). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.

    இவர் மனைவி நளினி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெரியபாளையம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆட்டோவில் வந்தார். பின்னர் அவர்கள் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டு இருந்தனர். அப்போது வெங்கல் அணைக்கட்டு பகுதிக்கு சென்ற அவர்கள் ஒரு மரத்தின் கீழ் சமைத்து சாப்பிட்டனர். அந்த நேரத்தில் அருகே உள்ள மரத்தில் இருந்த தேன்கூட்டை சிலர் கல்லால் தாக்கி கலைத்ததாக தெரிகிறது.

    இதனால் பறந்து வந்த தேனீக்கள் மொத்தமாக சரவணன், அவரது மனைவி நளினி மற்றும் அவர்களது குழந்தைகளையும் விரட்டி, விரட்டி கொட்டியது. இதில் ஏராளமான தேனீக்கள் கொட்டியதால் சரவணனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன.
    • பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.

    குடிமங்கலம் :

    காய்கறி மற்றும் பழத்தோட்டங்களில் தேனீ வளர்த்தால் 30 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலை த்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது :- மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன. இந்த விபரம் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை.தேனீக்கள் காய்கறி செடிகள் மற்றும் பழச்செடிகளில் உள்ள பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.

    பல்வேறு மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை சேகரிக்கும் போது மகரந்த கலப்பு ஏற்பட்டு நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதனால் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் தேனீ பெட்டி வைத்து தேனீ வளர்ப்பது நல்லது.இதன் மூலம் தோட்டப்பயிர்களின் மகசூல் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்தோடு தேன் மூலமும் வருமானம் கிடைக்கும்.தோட்டக்கலை துறை சார்பில் தேனீ வளர்க்கும் பெட்டி, மானிய விலையில் வழங்கப்படு கிறது. தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு 1000 தேனீ பெட்டிகள் வழங்கப்ப ட்டன. இந்த ஆண்டு இரண்டாயிரம் தேனீ பெட்டிகள், தேன் பூச்சியுடன் வழங்கப்படுகிறது. தேனை பிரித்து எடுக்கும் கருவியும் மானியத்தில் பெறலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். தேவையான உதவியும், ஆலோசனையும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • உதவி வேளாண்மை அலுவலர் சின்னராஜ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு சிறப்புரை ஆற்றினார்.

    அவிநாசி :

    அவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் ஊராட்சி, வெள்ளாண்டிபாளையத்தில் வேளாண்மைத்துறை சார்பில், 2022-23ம் ஆண்டிற்கான அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் தோட்டத்தில் தேன் பூச்சி பெட்டி வைத்து வளர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

    உதவி வேளாண்மை அலுவலர் சின்னராஜ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு சிறப்புரை ஆற்றினார். தேனீ வளர்ப்பாளர் சதீஷ்குமார் செயல் விளக்கம் காண்பித்தார். மேலும் தேனீ வளர்ப்பினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் வினேத்குமார், வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் சுஜி ஆகியோர் பேசினர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். இப்பயிற்சியில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    • இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தேனீக்கள் கொட்டியது.
    • இதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 5 ஆசிரியர்களும் தேனீக்கள் கொட்டியதில் காயடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர்.

    அங்குள்ள புதிய கட்டிடத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தேனீக்கள் கொட்டியது.

    இதில் மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். தேனீக்கள் விரட்டி சென்று அவர்களை கொட்டியது. இதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 5 ஆசிரியர்களும் தேனீக்கள் கொட்டியதில் காயடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

    ×