என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி விபத்து"
- விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.
- அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் விஷ்ணு (15). அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த விஷ்ணு கடந்த 15-ந்தேதி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாணாபுரம் புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஷ்ணுவின் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகிய 2 பேர் மீதும் பகண்டை கூட்டுச்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சங்கரன்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பழனிச்சாமி மீது மோதியது.
- திருநாவலூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உளுந்தூர்பேட்டை:
சென்னை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53). இவர் தனது குடும்பத்துடன் மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு மீண்டும் தனியார் பஸ்சில் சென்னைக்கு திரும்பினார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்தி நகர் பகுதியில் உள்ள டீக்கடையில் அனைவரும் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது.
அப்போது பழனிச்சாமி சிறுநீர் கழிப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது சங்கரன்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பழனிச்சாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிச்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை- திருச்சி 4 வழிச்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்சில் பயணம் செய்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
- விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.கூட்ரோட்டில் மினி லாரி ஒன்று இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூருக்கு இன்று அதிகாலை சென்றது.
இந்த மினிலாரியை வரஞ்சரம் அருகேயுள்ள இய்யனூர் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 47) ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (40), மருதை (28) ஆகியோரும் வந்தனர்.
மினிலாரி சின்னசேலம் அருகே வி.கிருஷ்ணப்புரம் அருகே இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த போது, வேளாங்கண்ணியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு சென்ற தனியார் சொகுசு பஸ் மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி நொறுங்கி, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. சொகுசு பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது.
பஸ்சில் பயணம் செய்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியின் டிரைவர் குமார், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தனர். மேலும், அதிலிருந்த மருதை படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்தார்.
மேலும், சொகுசு பஸ்சின் டிரைவர் நாகை மாவட்டம் அரும்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த ஜெயசீலன் (33), பெங்களூருவை சேர்ந்த பானு (48), தேவி (68), அருண் (8), சரண் (5) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தினால் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் அன்சர் பாஷா (வயது 24). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை நாமக்கல்லில் இருந்து மினி லாரியில் சுமார் 45 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆற்காடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது கள்ளக்குறிச்சி அருகே வடதொரசலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது லேசான சாரல் மழை பெய்தபடி இருந்தது. அப்போது மினிலாரி அந்த பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த மினி லாரி தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து. இந்த விபத்தில் மினிலாரியில் இருந்த 45 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் மினிலாரியை நோக்கி வந்தனர். தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு திரண்டுவந்த மக்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இதனைத் தொடர்ந்து மக்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் மினிலாரியை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தினர்.
இந்த விபத்தில் டிரைவர் அன்சர் பாஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சங்கராபுரம் அருகே பெரிய பகண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(72) விவசாயி. இவர் பெரிய பகண்டை கிராமத்தில் இருந்து பகண்டை கூட்டுரோடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ரங்கநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரங்கநாதனின் மகன் ரஜினி கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை பாகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25), இவரது நண்பர்கள் பாபு (வயது 25), சங்கர் (வயது 27) இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இன்று சேலம் ஏற்காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இன்று காலை 7 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே உலககாத்தான் பகுதியில் செல்லும் போது அங்கிருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தினேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். பாபு, சங்கர் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்து கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து வருவாய் ஆய்வாளர் ராஜா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாகன விபத்தில் பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.