search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகங்கை"

    • பொது விநியோக குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் நாளை (14-ந் தேதி) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திருப்பத்தூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற து.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், வருகிற மக்களவை தேர்த லில் 2 லட்சம் ஒட்டு வித்தி யாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும், கட்சி தொண்டர்கள் சோர்வின்றி பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பின்னர் ஏழை மாணவர் கள் 3 பேருக்கு கல்வி நிதி ரூ.15 ஆயிரம் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் முன் னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாநில பேச்சாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், வட்டார தலை வர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், பேரூராட்சி உறுப்பினர் சீனிவாசன், வட்டார செயலாளர் ஜெயராஜ், இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, முகேஷ், தங்கராஜ், அருள்பிரகாஷ், செல்வம், ஹக்கீம், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ரூ.1,216 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான தொழில் கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளி களுக்கு ரூ.1216.63 கோடி மதிப்பிலான வங்கி கடன் அனுமதி மற்றும் வங்கி கடன் பட்டுவாடாவுக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதா வது:-

    தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்த விளங்க வேண்டும் என்ற அடிப்படை யில் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திடும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2022-2023 முதல் 143 பயனாளிகளுக்கு 13.10 கோடி அளவில் வங்கி மூலம் கடனுதவி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டிற்கு (2023-24) 210 பயனாளி களுக்கு 20.13 கோடி கடனுதவி செய்து தருவ தற்கும் இலக்கு நிர்ண யிக்கப்பட்டது.

    இதுதவிர மேற்காணும் திட்டங்களில் வியாபார தொழில்கள், உற்பத்தித் தொழில்கள் மற்றும் சேவை தொழில்கள் செய்வதற்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து வங்கி கடனுதவிகள், அரசின் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்று சிறு-குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அர சால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ் வாதாரத்தினை மேம் படுத்தி்க் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜுனு மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.
    • பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பிறகே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

    இங்கு பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

    இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும். வகையில் இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.

    தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பிறகு பைரவர் உற்சவர் பிரகார உலா செல்கிறார்.

    சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோவிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிவாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம்.

    பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரிடம் அணிந்துள்ளது. முதல்பூஜை சூரியனுக்கு. தினமும் இக்கோவிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு யூஜை செய்யப்பட்டு அதன்பிறகே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்

    சூரியனால் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இருந்ததாலும் சூரியக்குடி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் சூரக்குடி என மருவியது.

    நடராஜர், தெற்கு நோக்கி இருக்கிறார். சுவாமி சன்னதி எதிரில் நந்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் உள்ளது. பைரவர் சன்னதியின் பின்புறம் பிரகாரத்தில் மற்றொரு பைரவர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்..

    பார்வதிதேவியின் தந்தை தட்சன். ஒரு யாகம் நடத்தினான் ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம் (பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார் அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார்.

    சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோச்சனம் தந்தார். இதன் அடிப்படையில் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

    பொதுவாக பைரவர் கையில் சூலத்துடன் காட்சி தருவார் ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.

    பரிகாரம்

    குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருக, மனகுழப்பம் நீங்கி அமைதி நிலவ இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி பைரவருக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

    திறக்கும் நேரம் காலை 4 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணிவரை.

    விழாக்கள்

    பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி உத்திர திருவிழா, மார்கழி ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குருபூஜை

    • சிவகங்கையில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் கருணா நிதி 5-ம் ஆண்டு நினைவு தினம் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. தி.மு.க. நகர செயலாளரு மான துரைஆனந்த் தலை மையில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையில் சிவகங்கை கோர்ட் வாசலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கருணா நிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது.

    அதனை தொடர்ந்து சிவகங்கை அரண்மனை வாசலில் நகர்மன்ற உறுப்பி னர் அயூப்கான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருணா நிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பனங்காடி சாலையில் உள்ள மாற்றுதிறனாளி களுக்கான தாய் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள்.

    இந்நிகழ்ச்சியில்நகர மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், ராமதாஸ், விஜய குமார் பாக்கியலட்சுமி, சேது நாச்சியார் வீரகாளை, துபாய் கார்த்தி, கீதா கார்த்திகேயன், ராஜபாண்டி மற்றும் நகர்மன்ற துணை தலைவா கார். கண்ணன், இளைஞர் அணி ஹரிஹரன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழா

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இந்த மாட்டுவண்டி பந்தயம் காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 28 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 52 ஜோடிகள் என மொத்தம் 91 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 52 வண்டிகள் கலந்து கொண்ட தால் 27 மற்றும் 25 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    அதேபோன்று மாடு ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு 4 காளைகள் இணைந்து 2 வண்டிகள் ஒன்றாய் சென்றதால் சாலையில் நின்று மாட்டு வண்டியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் சிதறி அடித்து ஓடினர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சிவகங்கையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே திருப்பத்தூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங் களை எழுப்பினர்.

    இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் நாக ராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், பாசறை மாவட்ட செயலா ளர் பிரபு, ஒன்றிய செய லாளர்கள் சேவியர்தாஸ், கருணாகரன், பழனிச்சாமி, செல்வமணி, அருள்ஸ்டிபன், கோபி, பாரதிராஜன், ஜெக தீஸ்வரன், மகளிரணி வெண்ணிலா சசிகுமார், பாசறை மாவட்ட துணை செயலாளர் பிரபு, மாவட்ட கலை பிரிவு செயலாளர் செந்தில்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொரு ளாளர் சரவணன், பாசறை இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், முடிகரைகருப்பையா, மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ம.தி.மு.க.உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க.வின் செயலாளராக பதவியேற்க அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ம.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலான 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் மகாலில் துணை பொது செயலாளரான ராஜேந்திரன் தேர்தல் ஆணையாளராகவும், பொன்முடி, செல்வராஜ் துணை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரனும், அவைத்தலைவராக திருப்பத்தூர் கருப்பூரை சேர்ந்த சந்திரன், பொருளாளராக காளையார்கோவிலை சேர்ந்த சார்லஸ் மற்றும் துணை செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 17 பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. நிதியில் அமைக்கப்பட்ட சாலை திறப்புவிழா நடந்தது.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சீகூரணி கிராமத்தில் சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த பகுதியில் சாலை வசதி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியில் சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி அந்தப் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதனை செந்தில் நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டிபன்அருள்சாமி, காளையார்கோவில் ஒன்றிய தலைவர் கோவிந்தன், மறவமங்கலம் ஊராட்சி தலைவர் அன்பழகன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட பாசறை துணை செயலாளர் சதிஷ், வழக்கறிஞர்கள் நக்கீரன், நவநீதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    • மாவட்ட ஊசு போட்டிகள் நடந்தது.
    • பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், மாவட்ட ஊசு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில்

    100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தவுல் பாடம், சான்சு பாடம் போன்ற போட்டிகளில் சப்-ஜூனியர், ஜூனியர், யூத் சீனியர் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

    இதற்கு சென்னை காளிங்கன், திருவண்ணாமலை பெரியசாமி, சிவகங்கை லதா நடுவராக பணியாற்றினர். இந்த போட்டியில் முதலிடத்தை பெற்ற வீரர்கள் ஜூலை மாதம் வந்தவாசியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • புதிய ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சிவகங்கை

    தென்னக ரெயில்ேவ கமிட்டி கூட்டத்தில், மதுரை மண்டல ரெயில்வே கமிட்டி உறுப்பினர் சையது இப்ராகிம் பேசியதாவது:-

    பல்லவன் விரைவு ரெயிலை மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய கடந்த 3 வருடங்களாக கோரிக்கை வைத்தோம். ஆனால் ரெயில்வே நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. மானாமதுரையில் அதற்கு தேவையான புதிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து பல்லவன் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாரம் ஒருமுறை இயங்கும் ராமேசுவரம் - கோவை ரெயிலை ராமேசுவரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும், கோவையில் இருந்து வெள்ளிக்கிழமையும் இரவு நேர சேவையாக வழங்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், நாட்டரசன் கோட்டை ரெயில் நிலையத்திற்கு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு ஆகும் மதிப்பீட்டை இதுவரை வழங்கவில்லை. உடனே அதனை வழங்க வேண்டும்.

    செட்டிநாடு ரெயில் நிலையத்தில் மீண்டும் ரெயில்கள் நிற்பதற்கு பலமுறை கோரிக்கை வைத்தோம். எப்பொழுது ரயில் அங்கு நிற்கும் ?. 2019-ம் ஆண்டில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கோரிக்கையின் அடிப் டையில் செங்கோட்டை எழும்பூர் ரெயில் சேவை தொடங்கியது. பின்னர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு அந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மானாமதுரை மற்றும் சிவகங்கை ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிவகங்கை, காரைக்குடி வழியாக புதிய ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பாம்பன் ரெயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்க வலியுறுத்தி உள்ளோம்.

    எங்களை போன்ற உறுப்பினர்கள் அவசரகால பயண இட ஒதுக்கீடு பெற வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் முகவரியை வழங்கிட வேண்டும். மேலும் 2019-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே கோட்டயம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, நாகப்பட்டினம் வழியாக விரைவு தொடர்வண்டி சேவையை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது.
    • ராமநாதபுரம் சரக துணைத்தலைவர் துரை தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் ராமநாதபுரம் சரக காவல்துறை துணைதலைவர் துரை தலைமையில் நடைபெற்றது.

    இம்முகாமில் புதிதாக கொடுக்கப்பட்ட 32 மனுக்களுக்கும், மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, மாவட்ட ஆட்சித் தலைவரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெறப்பட்ட மனுக்கள் என நிலுவையில் இருந்த 7 மனுக்கள் என மொத்தம் 39 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    ×