search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சியோமி"

    • 90W வயர் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் உடன் 5500mAh பேட்டரி.
    • 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ். 6.36 இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே.

    சியோமி ஸ்மார்ட்போனின் 15 சீரிஸ் மாடல்கள் விரைவில் சீனாவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பும்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சியோமி 15 ப்ரோ மற்றும் 15 அல்ட்ரா மாடல்கள் வெளியாக உள்ளது. இது 2023-ல் வெளியான சியோமி 14-ன் தொடர்ச்சியாக இருக்கும்.

    சியோமி 15 ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டதாகவும், 6.36 இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.5K resolution மற்றும் refresh rate of 120Hz கொண்ட டிஸ்பிளே. OmniVision OV50H sensor உடன் 50 மெகா பிக்சல் கேமரா வசதி, 50-megapixel ultra-wide angle lens மற்றும் 50-megapixel 3.2x telephoto வசதி உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

    ஹைப்பர் ஓ.எஸ். 2.0 அடிப்படையிலான அண்ட்ராய்டு 15 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியதாகும். 90W வயர் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் உடன் 5500mAh பேட்டரி கொண்டது. 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட போனாக இருக்கும். கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.

    • ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
    • சீன வெர்ஷனில் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் 50MP கேமரா கொண்டிருந்தது.

    சியோமி நிறுவனம் சீன சந்தையில் தனது ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    இது குறித்து சியோமிடைம் வெளியிட்டுள்ள தகவல்களில் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் சாம்சங்கின் ISOCELL HP3 கேமரா சென்சார் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களில் உள்ள 50MP பிரைமரி கேமரா சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிகிறது.

    சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் 200MP சாம்சங் ISOCELL HP3 கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் சீன வெர்ஷனில் 50MP கேமரா தான் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும்.
    • சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது.

    சுதந்திர தினம் அன்று (ஆகஸ்ட் 15) ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற பல ஆன்லைன் வலைதளங்கள் பெரிய விற்பனை நிகழ்வை நடத்தும். அதேபோல் சியோமி தனது அதிகாரப்பூர்வ Mi.com இணையதளத்தில் இதேபோன்ற விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது.

    மேலும் இந்த தளத்தில் கிடைக்கும் சலுகைகள் மற்ற ஆன்லைன் தளங்களிலும் (அமேசான் போன்றவை) வழங்கப்படும். சுதந்திர தின விற்பனை இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கும் சியோமி என்று அறிவித்துள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும். இதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி மாடல் ரூ.27,999 விற்பனையாகிறது.

    அதேசமயம் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படும். 512ஜிபி வேரியண்ட் வாங்க விரும்புவோர் ரூ.31,999 செலவழிக்க வேண்டும்.

    உங்கள் பட்ஜெட் ரூ. 15,000க்கு குறைவாக இருந்தால், சியோமி அதன் பட்ஜெட் ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை வழங்குகிறது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.14,499 என்றும் மாறி இருக்கிறது.

    கூகுள் டிவி மூலம் இயங்கும் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் சிறப்பு சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. சியோமி 55X ஜிடிவி 55 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.34,999-க்கு விற்பனையாகிறது.

    சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது. இந்த டிவிக்களில் 4K ரெசல்யூஷன், டால்பி விஷன், HDR10 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    அமேசானில் ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி 12 5ஜி, நோட்13 ப்ரோ+, சியோமி 14 மற்றும் பல அமேசான் சுதந்திர தின (Amazon Great Freedom Festival) விற்பனையின்போது தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • லிமிட்டெட் எடிஷன் மாடல் இருவித நிறங்களில் கிடைக்கும் என தகவல்.
    • சியோமி 14 சிவி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    சியோமி நிறுவனம் தனது சியோமி 14 ஸ்மார்ட்போனினை லெய்கா பிராண்டு கேமரா சென்சார்களுடன் குரூயிஸ் புளூ டூயல் ஸ்லைஸ் எடிஷன், மேட்சா கிரீன் நானோ-டெக் வீகன் லெதர் எடிஷன் மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் போன்ற வெர்ஷன்களில் விற்பனை செய்து வருகிறது. இவை கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    இந்த நிலையில், சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் பான்டா டிசைன் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பேட் SE 4ஜி மற்றும் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் மிரர் கிளாஸ் மற்றும் வீகன் லெதர் வெர்ஷன் கொண்டிருக்கும். இத்துடன் பின்க், மோனோக்ரோம் மற்றும் புளூ எடிஷன்களும் விற்பனைக்கு கிடைக்கும். சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் தொடர்பாக அந்நிறுவனம் டீசர்களை வெளியிட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் மாடல் ப்ளிப்கார்ட், Mi வலைதளங்கள் தவிர Mi ஹோம் ஸ்டோர் மற்றும் இதர விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. 

    • இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
    • வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

    ஸியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதித்து 10வது ஆண்டை கொண்டாடுவதன் நினைவாக, தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்தது.

    இந்தியாவில் தனது முதல் மின்சார கார் ஆன ஸியோமி SU7 காரை இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது.

    இந்த கார் அதிகபட்சமாக 673 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டார்க் திறன் 838 ஆகும்.

    இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரால் மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதுதவிர, வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

    இந்த கார் சிறப்பான பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் பிரேக் பிடித்தால் வெறும் 33.3 மீட்டர் தூரத்திலேயே நின்று விடும்.

    இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

    • மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி பேட் ப்ரோ 5ஜி வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் ப்ரோ வைபை வெர்ஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பிறகு மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த வரிசையில், புதிய டேப்லெட்-இன் 5ஜி மாடல் அறிமுகமாக இருக்கிறது. புதிய வெர்ஷன் வெளியீடு குறித்து சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் அறிவித்தார். இதோடு, புதிய டேப்லெட் கொண்டு சியோமி மற்றும் ரெட்மி போன் பயன்படுத்துவோர் அவற்றின் ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர்களில் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உடன் பாதுகாப்பு கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. 5ஜி சப்போர்ட் தவிர இந்த டேப்லெட்-இன் டிசைன், இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

    ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த டேப்லெட் ரெட்மி K70 அல்ட்ரா மாடலுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 499 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

     


    தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலுக்கு ரூ. 1250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்து 749 என மாறி இருக்கிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 750 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என மாறிவிடும். இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் சில்வர், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

    • சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக்.
    • ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ப்ளிப் போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான். அந்த வரிசையில் சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

    இதில் ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும், இதே ஸ்மார்ட்போன் 3C சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     


    சீன வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் பேக் பேனலில் கவர் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் இரட்டை கேமரா மாட்யுல், இரு எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும், லெக்யா லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    புதிய மிக்ஸ் ப்ளிப் போன் கோல்டன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் கீழ்புறத்தில் சியோமி லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2405CPX3DC மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, ஆம்னிவிஷன் OV60A 1/2.8 இன்ச் சென்சார், 2x ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த மாடலில் 32MP செல்ஃபி கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம்.
    • சீன சந்தையில் கடந்த மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சியோமி நிறுவனம் இந்த ஆண்டு சியோமி 14 மற்றும் சியோமி 14 அல்ட்ரா என இரண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில், சியோமி நிறுவனம் மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 14 SE பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது சியோமி நிறுவனத்தின் சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று டிப்ஸ்டரான அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு தவிர இதன் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

     


    சியோமி 14 SE மாடல் ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீன சந்தையில் கடந்த மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி சிவி 4 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் இரண்டு 32MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. சியோமி சிவி 4 ப்ரோ மாடலில் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் வயர்டு சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலையை பொருத்தவரை புதிய சியோமி 14 SE மாடல் சியோமி 14 மற்றும் சியோமி 14 அல்ட்ரா மாடல்களை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய சியோமி 14 SE பற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் புது வெர்ஷன் அறிமுகம்.
    • ரெட்மி நோட் 13 சீரிசில் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மூன்று மாடல்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் வொர்ல்டு சாம்பியன்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புது வெர்ஷனுடன் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்களின் விலை குறைக்கப்படுவதாக சியோமி தெரிவித்து இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 15 ஆயிரத்து 499 என்று மாறியுள்ளது.

    ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 25 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 21 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 31 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 27 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டு மூலம் பணம் செலுத்தும் போது வழங்கப்படும் ரூ. 3 ஆயிரம் வங்கி தள்ளுபடியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    • பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.
    • IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    சியோமி நிறுவனம் இரண்டு புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சியோமி சவுண்ட் பாக்கெட் மற்றும் சியோமி சவுண்ட் அவுட்-டோர் என இவை அழைக்கப்படுகின்றன.

    இரு மாடல்களில் சியோமி சவுண்ட் அவுட்டோர் மாடல் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. பெரும்பாலான பைகளில் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்த ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரப்பர் மற்றும் ஸ்டிராப் இதை கைகளிலேயே சுலபமாக எடுத்து செல்ல வைக்கிறது.

     


    அளவில் சிறியதாக இருந்தாலும், இந்த ஸ்பீக்கர் அதிகபட்சம் 30 வாட் திறனில் ஆடியோவை வெளிப்படுத்துகிறது. இதற்காக இந்த மாடலில் பில்ட்-இன் சப்-வூஃபர், இரண்டு பேசிவ் ரேடியேட்டர்கள் மற்றும் டுவீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    ப்ளூடூத் 5.4 தொழில்நுட்பம் கொண்டிருக்கும் இந்த ஸ்பீக்கர் 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்து 50 சதவீத சத்தம் வைத்து கேட்கும் படச்சத்தில் இது 12 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

     


    சியோமி சவுண்ட் பாக்கெட் மாடல் அளவில் மிகச் சிறியதாகவும், பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது. 5 வாட் திறனில் ஆடியோவை வெளிப்படுத்தும் இந்த ஸ்பீக்கரிலும் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. இதை 40 சதவீத சத்தத்தில் கேட்கும் போது பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

    • சியோமி SU7 மாடல் மே மாதம் விற்பனைக்கு வருகிறது.
    • 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.

    சியோமி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம் - SU7 மாடலை அறிமுகம் செய்தது. ஆன்லைன் நேரலையில் சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிவித்தார். அறிமுகத்தின் போது புதிய SU7 மாடலை டெஸ்லா மாடல் 3 காருடன் நேரடியாக ஒப்பிட்டார். இதோடு, சியோமி SU7 மாடல் சீன சந்தையில் மே மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

    புதிய சியோமி SU7 மாடலில் டூயல் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இணைந்து 637 ஹெச்.பி. பவர், 838 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. பயனர்கள் தேர்வு செய்யும் வேரியண்டிற்கு ஏற்ப சியோமி SU7 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

     


    இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஐந்து மீட்டர்கள் நீளமாக உள்ள சியோமி SU7 2 மீட்டர்கள் அகலம், 3 மீட்டர்கள் வீல்பஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கும்.

    புதிய எலெக்ட்ரிக் கார் அம்சங்களில் - வாட்டர் டிராப் ஹெட்லைட்கள், ஹாலோ டெயில் லைட்கள், ஆக்டிவ் ரியர் ஸ்பாயிலர், ஃபுளோயிங் கர்வ், மறைக்கப்பட்ட நிலையில் கதவுகளின் கைப்பிடிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் சியோமியின் ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

    இதை கொண்டு பயனர்கள் தங்களது சியோமி ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களை காருடன் இணைத்துக் கொள்ள முடியும். இந்த காரில் ராப்-அரவுண்ட் காக்பிட், பல்வேறு ஸ்கிரீன்கள், டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    சியோமி SU7 பேஸ் மாடலில் 73.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். இதன் விலை சீன சந்தையில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சத்து 90 ஆயிரத்து 413 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரின் டாப் என்ட் வேரியண்டில் 101 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதை முழு சார்ஜ் செய்தால் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இதன் விலை 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 34 லட்சத்து 59 ஆயிரத்து 356 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×