என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழில்முனைவோர்"
- சிவகங்கை அருகே தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
- சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லா கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்புவனம் சமயபுரத்தாள் சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார். சிவகங்கை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் தேவராஜ், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து விளக்கினார். சிவகங்கை, மகளிர் திட்ட உதவி மேலாளர் ராஜ்குமார், பொருட்களை சந்தைப்படுத்துதல் உத்தி குறித்து பேசினார். இதில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 75 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பழைய மாணவர்-தொழில்முனைவோர் ராமர் நன்றி கூறினார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி நடந்தது.
- இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வெற்றிகரமான தொழில்முனைவோர்" என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் அமர்வை ஏற்பாடு செய்தது. மதுரை ஜனஜா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஜான்லாரன்ஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வணிக உலகில் மாறுபட்ட மற்றும் பரந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர்களை கதையின் மூலம் ஊக்கப்படுத்தினார்.
தொழில்முனைவோரால் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார்.
உறுப்பினர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.தொழில் தொடக்க செயல் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரி நன்றி கூறினார்.
இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- தொழில்முனைவோர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பேசினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்க நிறுவனம் (எம்.எஸ்.எம்.இ.) மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கம், மாவட்ட தொழில்மையம் சார்பில் தொழில்முனைவோர்களுக்கான பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு குறித்த பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கில் எம்.எஸ்.எம்.இ. சென்னை உதவி இயக்குனர் சி.பி.ரெட்டி அறிமுக உரையாற்றினார். இந்த பயிலரங்கை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தொடங்கி வைத்து பேசுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள புதிய உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு சான்றிதழ்களை பெறுவதின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கூடுதல் மானியங்களை பெறலாம். தொழில் நிறுவனங்கள் இச்சான்றிதழ்பெற www.zed.msme.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறினார். இந்த கூட்டத்தில் எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குனர் சுரேஷ் பாபுஜி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி இயக்குனர் கிரண்தேவ் சட்லூரி நன்றி கூறினார்."
- தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் நடந்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர், ஏற்றுமதி, பொருளாதாரம் போன்றவற்றிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் திட்டமாக தீட்டப்பட்டது. இந்த திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழில்முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக நமது முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் பெறும் சொத்து பிணயம் இல்லாத வங்கி கடனுக்கு 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதத்தை தமிழக அரசு ஏற்கும். இந்தியாவிலேயே 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் வழங்க உள்ள மாநிலம் தமிழகம் தான். சிறு, குறு நிறுவனங்களின் மூலதன சிக்கலை தீர்க்கும் விதமாக வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குவார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, தொழிலை மீண்டும் அமைக்கவும், தொடங்கவும் இந்த திட்டம் உதவும்.
மேலும் ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிலை அதிகரிக்கவும் முதலீட்டு மானியத்தில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. விரைவில் இவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக ஏற்படும் காலதாமதத்திற்கு தீர்வு காண சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 252 நிறுவனங்களுக்கு ரூ.50 கோடியே 12 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் மூலமாக நீட்ஸ் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த குறுகிய காலகட்டத்தில் ரூ.310 கோடியே 33 லட்சம் மானியத்துடன் ரூ.1253 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு, இதுவரை 10 ஆயிரத்து 216 படித்த இளைஞர்கள் புதிய தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.28 கோடியே 38 லட்சம் மானியத்தில், ரூ.113 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 322 பேர் புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதுபோல் ஈரோடு, கோவை மாவட்டத்தில் ரூ.248 கோடியே 59 லட்சம் மானியத்தில், ரூ.996 கோடியே 34 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 906 புதிய தொழில்முனைவேர்களை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு கருத்தரங்கம் நடந்தது.
- திட்ட ஒருங்கி ணைப்பாளர் நாசர் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யில் தமிழக அரசின் தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கான கடன் வசதிகள் குறித்த கருத்தரங்கை நடத்தியது.
திட்ட ஒருங்கி ணைப்பாளர் நாசர் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக சருகனி, இதயா கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கி ணைப்பாளர் ஜெயந்தி மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறு, குறு தொழில் முனைவோருக்கு அரசு மற்றும் தனியார் கடன் உதவி நிறுவனங்கள் குறித்து பேசினர்.
120 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் ஆடுகள் வழங்கப்பட்டது.
- பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை சிபியோ பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்படுகிறது.
பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் இந்த திட்டத்தின் கீழ் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்100 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆடுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ரகுராமன் எம்.எல்.ஏ. சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிசந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடந்தது.
- உணவுபதப்படுத்துதல் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மதுரை
வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை மூலம் தொழில்முனைவோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரைமாவட்டகுறுமற்றும்சிறிய அளவிலான தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
வேளாண்மை விற்பனைமற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், உணவுபதப்படுத்துதல்தொழில்முனைவோருக்குவழங்கப்படும்திட்டங்கள்மற்றும்சலுகைகள்குறித்துஎடுத்துரைத்தார்.
வேளாண்விளைபொருட்கள்ஏற்றுமதிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில்உள்ளகட்டமைப்புகளைதொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் உணவுப்பூங்கா, முருங்கை ஏற்றுமதிமண்டலம்குறித்தும் விளக்கினார்.
இதில் சங்கபிரதிநிதிகள், உறுப்பினர்கள், வேளாண்மைவிற்பனைமற்றும் வேளாண்வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர்ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்