என் மலர்
நீங்கள் தேடியது "பிரெஞ்ச் ஓபன்"
- கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
- கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு. 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான அவர், இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபனில் இருந்து கையில் காயத்துடன் வெளியேறி இருந்தார். காயம் காரணமாக அவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.
என்னை ஆதரித்த என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
- ரூத் வெற்றிக்காக இரண்டரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது
- நிஷியோகா மூன்றரை மணி நேரம் போராடி வெற்றி பெற்றார்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இன்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு போட்டியில் சீனாவில் ஜாங்- நார்வேயின் ரூத் பலப்பரீட்சை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ரூத் 4-6, 6-4, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷியோகா பிரேசில் வீரர் வைல்டை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்தது. இதில் நிஷியோகா 3-6, 7(10)-6(8), 2-6, 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனை ரூனே, சொரிபெஸ் டொர்மோ ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்
- பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான இடம். இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
- எங்களுக்கு 2-வது சொந்த இடம் போன்றது. ஒலிம்பிக் போட்டிக்கான டெஸ்ட் இடம். ஆனால், இன்னும் சில மாதங்கள் உள்ளன.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி- சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி தைவானின் பி.ஹெச். யாங்- ஜே.எச். லீ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 21-11 என எளிதாக கைப்பற்றியது இந்திய ஜோடி. ஆனால் 2-வது செட்டில் தைவான் ஜோடி கடும் சவால் விடுத்து அடுத்தடுத்து புள்ளிகள் கைப்பற்றியது என்றாலும், இந்திய ஜோடி 2-வது செட்டிடையும் 21-17 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றது சிறப்பான தருணம். இந்த இடத்தில் விளையாடிய போட்டிகளில் சிறந்த போட்டிகளில் ஒன்று என சிராக் ஷெட்டி தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக சிராக் ஷெட்டி கூறுகையில் "கடந்த சில வாரங்களாக தைவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறந்த எதிர் ஜோடியை எதிர்கொண்டு அவர்களை வீழ்த்தியது. அவர்களை எளிதாக எடுத்து கொள்ளக் கூடாது என்பது எங்களுக்கு தெரியும்.
அவர்களுடைய தரவரிசையில் உயர்ந்ததாக இல்லை. ஆனால் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் செட்டை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. 2-வது செட்டின் தொடக்கத்தில் சற்று நடுக்கம் இருந்தது. அதன்பின் சுதாரித்துக் கொண்டு கைப்பற்றி விட்டோம்.
இந்த வெற்றியை மிகவும் மகிழ்ச்சியானதாக உணர்கிறேன். பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான இடம். இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு 2-வது சொந்த இடம் போன்றது. ஒலிம்பிக் போட்டிக்கான டெஸ்ட் இடம். ஆனால், இன்னும் சில மாதங்கள் உள்ளன.
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் சந்தோசத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறினர். அது பொய்யாக இருக்கும். நாங்கள் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த வாரம் இன்னொரு தொடர் உள்ளது. இதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்" என்றார்.