என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாருதி சுசுகி"

    • மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் இன்று கூறியதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.
    • மீதமுள்ள 88 சதவீத குடும்பங்களுக்கு சிறிய கார்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நாட்டின் உயர்மட்ட 12 சதவீத குடும்பங்களால் மட்டுமே கார் வாங்க முடியும் என்றும் இந்த பொருளாதார மந்தநிலைக்கு மூல காரணம் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களின் வருமான தேக்கநிலை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    இந்தியாவில் கார்களை வாங்குவது 12 சதவீத குடும்பங்கள் மட்டுமே என்று சமீபத்தில் மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி. பார்கவா  பேசியிருந்தார்.

    இதை மேற்கோள் காட்டி எக்ஸ் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "முழு தேசமும் இன்னும் மிகுந்த வேதனையிலும் அதிர்ச்சியிலும் உள்ளது. பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியள்ளது.

    அப்படியிருந்தும், இந்நேரத்தில், மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் இன்று கூறியதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்தியாவில் கார்களை வாங்குவது பெரும்பாலும் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே. மீதமுள்ள 88 சதவீத குடும்பங்களுக்கு சிறிய கார்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றின் விற்பனை சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளது.

    2023-2024 மற்றும் 2024-25 க்கு இடையில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி 2 சதவீதம் மட்டுமே என்றும் பார்கவா சுட்டிக்காட்டினார். வரவிருக்கும் ஆண்டிற்கான வளர்ச்சியும் 1-2 சதவீதம் மட்டுமே இருக்கும்.

    இந்த மந்தநிலைக்கு மூல காரணம், இந்தியாவின் பெரும்பான்மையினரின் பரவலான உண்மையான வருமான தேக்கநிலைதான்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.  

    • பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாகும்.
    • சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது

    இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டில் டீசல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி கார்களையே மக்கள் அதிகம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த நிதியாண்டில் 7,87,724 சிஎன்ஜி கார்களும், 7,36,508 டீசல் கார்களும் விற்பனையாகியுள்ளன.

    கடந்த நிதியாண்டில் பயணிகள் கார் விற்பனையில் 15 சதவீதமாக இருந்த சிஎன்ஜி கார் விற்பனை இப்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக உள்ளதால் பலரும் சிஎன்ஜி கார்களை விரும்புகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

    மொத்த சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மாடல்களை பொறுத்து, ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.62 ஆயிரம்வரை உயருகிறது.
    • பல நிறுவனங்களும் இந்த மாதம் தங்கள் கார்களின் விலையை மாற்ற உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பல்வேறு மாடல் கார்களின் விலை வருகிற 8-ந்தேதி முதல் உயருகிறது. மாடல்களை பொறுத்து, ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.62 ஆயிரம்வரை உயருகிறது.

    மூலப்பொருட்கள் விலை உயர்வு, நிறுவன செலவுகள் ஆகியவையே விலை உயர்வுக்கு காரணம் என்று மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கிராண்ட் விட்டாராரூ. 62,000 வரை விலை உயரும். அதைத் தொடர்ந்து ஈகோ ரூ. 22,500, வேகன் ஆர், எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் ஃபிராங்க்ஸ் ஆகியவை முறையே ரூ. 14,000, ரூ. 12,500, ரூ. 12,500 மற்றும் ரூ. 2,500 வரை விலை உயர்வு பெறும். மாருதியை தவிர, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, கியா, நிசான் மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்களும் இந்த மாதம் தங்கள் கார்களின் விலையை மாற்ற உள்ளன.

    • மாருதி சுசுகி 4 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
    • தற்போது டாடா மோட்டார்ஸ் 2 சதவீதம் வரை விலையை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு.

    இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மாருதி சுசுகி சில தினங்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வாகனங்கள் விலைகளை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. மாடல்களுக்கு ஏற்ப அதை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவித்திருந்து. உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவினம் காரணமாக விலை உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வாகனங்கள் விலையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

    கடந்த ஜனவரியில் 3 சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களில் மேலும் கணிசமாக உயர்த்த உள்ளது. 2 சதவீதம் விலை விலை உயர்வு இருக்கும். இது பயணிகள் முதல் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

    • கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் பல்வேறு மாடல்களுக்கு 32500 ரூபாய் வலை உயர்த்தப்படும் எனத் தெரிவிந்தது.
    • இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 4 சதவீதம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்ளில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் பல்வேறு நோக்கத்திற்காக வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது.

    தற்போது உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான 4 சதவீதம் வரை வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.

    கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து பல்வேறு மாடல்களுக்கு 32,500 ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் ஒரு பங்கு 11578.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று பங்கின் விலை 0.61 சதவீதம் உயர்ந்தது.

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரின் புது வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய பிரெஸ்ஸா எஸ்யுவி மாடல் இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கிட் கொண்ட கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பிரெஸ்ஸா எஸ்யுவி மாடலின் CNG வேரியண்டை மாருதி சுசுகி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், மாருதி சுசுகி பிரெஸ்ஸா எஸ்யுவி-யின் CNG வெர்ஷனின் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் பற்றிய தகவல்கள் அந்நிறுவன வலைதளத்தில் இருந்தே லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது.

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட முதல் CNG எஸ்யுவி என்ற பெருமையை மாருதி சுசுகி பிரெஸ்ஸா பெறும். இத்துடன் நாட்டின் முதல் ஆட்டோமேடிக் CNG பயணிகள் கார் என்ற பெருமையையும் பெறும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் CNG வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பதை அடுத்து ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் வாகன விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய பிரெஸ்ஸா மாடலிலும் 1.5 லிட்டர் NA என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களில் CNG கிட் வசதியை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • மாருதி கார்களை தொடர்ந்து நெக்சா பிராண்டு மாடல்களிலும் தற்போது CNG கிட் வழங்கப்பட உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மற்றும் XL6 கார்களில் CNG கிட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நெக்சா பிராண்டு மாடல்களில் CNG வசதி பெறும் முதல் கார் மாடல்களாக இவை இருக்கும். பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மற்றும் XL6 எம்பிவி மாடல்கள் ஒரே மாதிரியான பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.

    மேலும் அதிக கார்களில் CNG வசதியை வழங்கும் நோக்கில், மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் பலேனோ மற்றும் XL6 CNG மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் அதிக மைலேஜ் வழங்கும் திறன் இருப்பதே அதிக வாடிக்கையாளர்களை ஈட்ட முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுவரை மாருதி சுசுகி நிறுவனம் ஒன்பது கார்களில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது.

    இந்த வரிசையில் தற்போது பலேனோ மற்றும் 6-சீட்டர் எம்பிவி மாடலான XL6 இணைய இருக்கிறது. CNG பிரிவில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் CNG கிட் வசதியை வழங்கி வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தேர்வாக CNG விளங்குகிறது.

    இவை மட்டுமின்றி CNG கிட் பொருத்தப்பட்ட கார்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் மாடல்களை விட அதிக மைலேஜ் வழங்கி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கார்களில் CNG கிட் வழங்கி வருவதை அடுத்து பலேனோ மற்றும் XL6 மாடல்களில் CNG கிட் வழங்குவது ஆச்சரியமாக பார்க்கப்படவில்லை.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது CNG மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
    • மாருதி சுசுகி செலரியோ, வேகன் ஆர் மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேகன்ஆர், செலரியோ, இக்னிஸ் கார்களின் 9 ஆயிரத்து 925 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஆகஸ்ட் 3, 2022 முதல் செப்டம்பர் 1, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

    ரிகால் செய்யப்படும் கார்களின் ரியர் பிரேக் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசெம்ப்லி பின் உடைந்து, வித்தியாசமான சத்தம் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். வேகன்ஆர் மற்றும் செலரியோ மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்கள் ஆகும். இக்னிஸ் மாடல் மட்டும் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது.

    "ரியர் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தவறும் பட்சத்தில் அசெம்ப்லி பின் உடைந்து வித்தியாசமான சத்தம் எழ வாய்ப்புகள் உண்டு. நாளடைவில் காரின் பிரேக்கிங் திறன் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். வாடிக்கையாளர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட யூனிட்களை ரிகால் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பாதிக்கப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்பட்டு இலவசமாக சரி செய்யப்படும்," என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ரிகால் செய்யப்படும் கார்களில் புதிதாக வழங்க மாற்று பாகங்கள் தயாராகி வருகின்றன. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் சார்பில் பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். அதன் பின் கார் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பிரச்சினைகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக சரி செய்யப்படும்.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • முதல் முறையாக நெக்சா பிராண்டிங் காரிலும் CNG கிட் வசதியை மாருதி சுசுகி நிறுவனம் வழங்கி இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய பலேனோ மாடலில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடல் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பலேனோ CNG மாடலை மாதாந்திர சந்தா முறையில் வாங்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பலேனோ மாடலுடன் XL6 CNG காரும் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய பலேனோ CNG மாடலில் 1197சிசி, NA, நான்கு சிலண்டர்கள் கொண்ட டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    மாருதி சுசுகி பலனோ CNG மாடல் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. புதிய பலேனோ CNG செயல்திறனும் ஸ்விப்ட் CNG மாடலின் செயல்திறனும் ஒரே அளவில் உள்ளன. பலேனோ CNG மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ, எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 40-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6 ஏர்பேக், ரியர்வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டிஎப்டி டிஸ்ப்ளே, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், ரியர் டி-ஃபாகர், யுஎஸ்பி டைப் ஏ மற்றும் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு நவம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • பெட்ரோல், டீசல் மாடல்கள் மட்டுமின்றி மாருதி சுசுகி CNG கார்களுக்கும் இந்த முறை சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது அரினா மாடல்களுக்கு ரூ. 57 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த முறை ஆல்டோ K10, ஆல்டோ 800, செலரியோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், டிசையர் மற்றும் ஸ்விப்ட் போன்ற மாடல்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலை வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஆல்டோ K10 AMT வேரியண்ட்களுக்கு ரூ. 7 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி செலரியோ மாடலின் VXi மேனுவல் வேரியண்டிற்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. மேனுவல் வேரியண்ட்களான LXi, ZXi மற்றும் ZXi+ வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 41 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் CNG வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    புதிய எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மேனுவல் வேரியண்ட்களுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இதன் AMT வேரியண்ட்களுக்கு ரூ. 46 ஆயிரமும், CNG வேரியண்ட்களுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி வேகன்ஆர் மாடல் மேனுவல் வேரியண்ட்களுக்கு ரூ. 41 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் AMT மாடலுக்கு ரூ. 21 ஆயிரமும், CNG வெர்ஷனுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. ஆல்டோ 800 வாங்குவோருக்கு ரூ. 36 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி டிசையர் AMT மாடலை வாங்குவோருக்கு ரூ. 32 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 17 ஆயிரத்திற்கான சலுகைகள் வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விப்ட் ஹேச்பேக் காரை வாங்கும் போது ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    • மாருதி சுசுகி நிறுவனம் அதிக மைலேஜ் கொண்ட கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய ஸ்விப்ட் மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 35 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஹைப்ரிட் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்தியாவில் தனது முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் கார் - கிராண்ட் விட்டாரா மாடலை தொடர்ந்து ஸ்விப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இரு கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில், மாருதி சுசுகி ஹைப்ரிட் வேரியண்ட்களையும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஹைப்ரிட் வேரியண்ட்கள் அதிக மைலேஜ் கொண்ட ஹேச்பேக் மற்றும் செடான் மாடல்கள் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.

    ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் வெளியீடு 2024 முதல் காலாண்டு வாக்கில் நடைபெறும் என தெரிகிறது. புதிய ஹைப்ரிட் வெர்ஷனில் முற்றிலும் புதிய என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Z12E எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் தற்போதைய K12C என்ஜினை போன்று இருக்காது. இந்த எனிஜினுடன் டொயோட்டா நிறுவனத்தின் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இதே தொழில்நுட்பம் தான் கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்களிலும் வழங்கப்பட்டது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் S-CNG பொருத்தப்பட்ட கார்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது.
    • சமீபத்தில் மாருதி சுசுகி பலேனோ மற்றும் XL6 கார்களின் S-CNG வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய ஆல்டோ K10 S-CNG வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆல்டோ K10 S-CNG விலை ரூ. 5 லட்சத்து 94 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஆல்டோ K10 S-CNG சேர்த்தால் இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தத்தில் 13 S-CNG கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்தும் ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன.

    புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 S-CNG மாடலில் 1.0 லிட்டர், K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 56 ஹெச்பி பவர், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கார் லிட்டருக்கு 33.85 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    "ஆல்டோ பிராண்டு எப்போதும், மாருதி சுசுகி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் கனவுகளுக்கு ஏற்ப எப்படி தங்களை மாற்றிக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அடையாளம். ஆல்டோ மாடல் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளுக்கு அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. மேலும் புதிய S-CNG மாடல் இதன் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும்."

    "இதுவரை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக S-CNG வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறோம். புதிய ஆல்டோ K10 மாடலில் S-CNG கிட் வழங்கி இருப்பதை அடுத்து, பலர் இந்த காரை வாங்க விரும்புவர். எஹ்கலின் S-CNG பிரிவு மிகவும் விசேஷமைக டிசைன் செய்யப்பட்டு, இந்திய சாலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது." என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த நிர்வாக அலுவலர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.

    ×