என் மலர்
நீங்கள் தேடியது "இயர்பட்ஸ்"
- ஸ்வாட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்வாட் நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிதாக நெக்பேண்ட் ரக இயர்போனினை ஸ்வாட் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் இயர்போன் ஸ்வாட் நெக்கான் 101 என அழைக்கப்படுகிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் டார்க் புளூ மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்குகிறது. இதில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாது. நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த இயர்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் IPX67 தர வாட்டர் ப்ரூப் வசதி, 55 மில்லிசெகண்ட் லேடன்சி வழங்குகிறது. இது கேமிங்கின் போதும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும்.

ஸ்வாட் நெக்கான் 101 நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு மியூசிக், அழைப்புகள் உள்ளிட்டவைகளை போனை பார்க்காமலேயே இயக்க முடியும். தலைசிறந்த டிசைன் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் சௌகரியமான அனுபவத்தை வழங்குகின்றன.
இதன் இயர்போன்கள் காந்தம் மூலம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கிறது. மேலும் இதில் ப்ளூடூத் 5.0 வசதி மற்றும் டூயல் பேரிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன்களில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
- புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் தர ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். தற்போது இந்த மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதன் உற்பத்தி ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் மாடல்- ஒன்பிளஸ் 11 உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டின் துவக்க மாதங்களில் ஒன்பிளஸ் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், அடுத்த ஆண்டு இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஸ்டெம் வைத்த இன்-இயர் டிசைன் மற்றும் சிலிகாம் டிப்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இதில் 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி 45db வரை நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்கும்.
மற்ற டாப் எண்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை போன்றே இதிலும் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஆம்பியண்ட் மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். ஏற்கனவே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மூன்று மைக்ரோபோன்களை கொண்டு காலிங் மற்றும் ANC வசதிகளை வழங்கும் என கூறப்பட்டது. மேலும் இதில் ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
- போட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடல் ஏராளமான அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கிறது.
- புதிய இயர்பட்ஸ் அளவில் சிறியதாகவும், கவர்ச்சிகரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 மாடல் அசத்தல் தோற்றம், ENx, BEAST, IWP, மற்றும் ASAP போன்ற அதிநவீ தொழில்நுட்ப வசதிகள், தலைசிறந்த சவுண்ட், நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
பெபில் வடிவம் கொண்ட போட் ஏர்டோப்ஸ் 100 அளவில் சிறியதாகவும், தலைசிறந்த டிசைன் மற்றும் கேஸ் கொண்டிருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 சபையர் புளூ, ஒபல் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, IWP எனப்படும் (Insta Wake N Pair) அம்சம் கொண்டுள்ளது. இது கேஸ்-ஐ திறந்ததும் பயனர் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும்.

இதில் உள்ள பீஸ்ட் (BEAST) மோட் ப்ளூடூத் மூலம் அல்ட்ரா லோ-லேடென்சி ரியல் ஆடியோவை 50ms வேகத்தில் வழங்குகிறது. ஏர்டோப்ஸ் 100-இல் உள்ள கல்வேனிக் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ அதிவேகமாக சார்ஜ் செய்து விடும். இதன் மூலம் இயர்பட்ஸ்-ஐ ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
போட் ஏர்டோப்ஸ் 100 மாடலில் 10mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை சிறப்பான ஆடியோ மற்றும் டீப் பேஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள குவாட் மைக்ரோபோன்கள் மற்றும் ENX தொழில்நுட்பம் அழைப்பின் போதும் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. டச் கண்ட்ரோல் வசதி இருப்பதால், பாடல்கள், வால்யும் மாற்றுவது மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும்.
இந்த இயர்பட்ஸ்-இல் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வசதி உள்ளது. வானிலை, செய்திகள் மற்றும் கிரிகெட் ஸ்கோர் உள்ளிட்டவைகளை ஒன் டச் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் அறிந்து கொள்ளலாம். போட் ஏர்டோப்ஸ் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புதிய பட்ஸ் ப்ரோ 2 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் இயர்பட்ஸ் மாடல்களாக பட்ஸ் ப்ரோ சீரிஸ் இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ஸ் ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ரெண்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டு உள்ளது. இதில் புதிய ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது.
ரெண்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட ட்வீக் செய்யப்பட்ட டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஒவல் வடிவம் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆப்பிள் ஏர்பாட்ஸ் மாடலை நினைவூட்டும் வகையில் காட்சியளிக்கிறது. இதன் மேல்புறம் மேட் ஃபினிஷ், கீழ்புறம் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இந்த இயர்பட்ஸ் ஆலிவ் கிரீன் நிறம் கொண்டிருக்கிறது. இயர்பட்ஸ் கேசில் டைனாடியோ (Dynaudio) என்கிரேவிங் செய்யப்பட்டு உள்ளது. டைனாடியோ 1977 ஆண்டு துவங்கப்பட் டச்சு லவுட் ஸ்பீக்கர் பிராண்டு ஆகும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் டிரைவர்களை டைனாடியோ உருவாக்கி இருக்கிறதா அல்லது டியூனிங் போன்ற அம்சங்களை மட்டும் செய்திருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm டூயல் டிரைவர்கள், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த வசதி மூலம் சத்தத்தை 45 டெசிபெல்கள் வரை குறைக்க முடியும். மேம்பட்ட சவுண்ட் பிக்-அப் வழங்க இயர்பட்களில் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்படலாம். இத்துடன் LHDC 4.0 கோடெக் மற்றும் ஸ்பேஷியல் சரவுண்ட் சவுண்ட் அம்சம் வழங்கப்படலாம்.
புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ANC ஆன் செய்யப்பட்ட நிலையில், முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. ANC ஆஃப் செய்தால் அதிகபட்சம் ஒன்பது மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 32 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: 91Mobiles
- சோனி நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
- புதிய சோனி இயர்பட்ஸ் சூப்பர்லேடிவ் நாய்ஸ் கேன்சலிங் எனும் வசதியை கொண்டிருக்கிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லின்க்பட்ஸ் S WF-lS900N மாடல் சோனி நிறுவனத்தின் சிறிய மற்றும் எடை குறைந்த மாடல் ஆகும். இந்த இயர்பட்ஸ் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் இல்லா பொருட்களால் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவு குறைக்கப்படுகிறது.
இந்த இயர்பட்ஸ் எடை ஒவ்வொன்றும் 4.8 கிராம் கொண்டுள்ளன. அந்த வகையில், சோனி நிறுவனத்தின் எடை குறைந்த மற்றும் அளவில் சிறிய நாய்ஸ் கேன்சலிங் மாடல் ஆகும். இதில் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சோனி S WF-lS900N மாடலில் சூப்பர்லேடிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி உள்ளது. இது பேக்கிரவுண்ட் நாய்ஸ் மற்றும் ஆம்பியண்ட் சவுண்ட் மோட் உள்ளிட்வைகளை நீக்குகிறது.

புதிய சோனி இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. ANC மோட் ஆன் செய்யப்பட்ட நிலையில், இந்த இயர்பட்ஸ் ஆறு மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இதன் பேக்கப் 14 மணி நேரமாக அதிகரிக்கும். இதில் குயிக் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் இயர்பட்ஸ்-ஐ ஐந்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
இதன் சார்ஜிங் கேஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரமே ஆகும். இந்த இயர்பட்ஸ்-இல் உள்ள "நாய்ஸ் ஆஃப்" வசதி ANC மற்றும் ஆம்பியண்ட் சவுண்ட் மோட்களிடையே தானாக ஸ்விட்ச் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இதுதவிர ப்ளூடூத் 5.2, கூகுளின் ஃபாஸ்ட் பேரிங் அம்சம், இண்டகிரேட் செய்யப்பட்ட வி1 பிராசஸர் உள்ளது. இது மேம்பட்ட நாய்ஸ் கேன்சலிங் மற்றும் ஆடியோ தரத்தை வெளிப்படுத்த செய்கிறது.
இந்திய சந்தையில் புதிய சோனி S WF-lS900N இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகை நவம்பர் 21 ஆம் தேதி துவங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய சோனி லின்க்பட்ஸ் S WF-lS900N மாடல்- பிளாக், வைட் மற்றும் பெய்க் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- பிடிரான் நிவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய பிடிரான் இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரண்ட் கேஸ் மற்றும் எல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
பிடிரான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய "பாஸ்பட்ஸ் Nyx" ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்ட கேஸ் உடன் வழங்கப்படுகிறது. இதுவே இயர்பட்ஸ்-ஐ சார்ஜ் செய்யவும் பயன்படுகிறது. டிசைன் காரணமாக இந்த சார்ஜிங் கேசில் எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ் சார்ஜிங் அளவை காண்பிக்கிறது.
புதிய டூயல் கலர் இயர்பட்ஸ் பயனர் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 மில்லிமீட்டர் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் உள்ளன. இவை பேலன்ஸ்டு பேஸ், மிட்ரேன்ஜ் மற்றும் டிரெபில் வழங்குகிறது. இதன் லோ லேடன்சி 50 மில்லிசெகண்ட் ஆகும். இதனால் திரைப்படங்களை பார்க்கும் போது சிறப்பான அனுபவம் கிடைக்கும்.

பிடிரான் பாஸ்பட்ஸ் Nyx ப்ளூடூத் 5.1 மற்றும் டச் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் பேனலில் டச் செய்து அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது, மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். இந்த இயர்பட்ஸ் மோனோ மற்றும் ஸ்டீரியோ மோட்கள் இடையே சிரமமின்றி மாறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பாஸ்பட்ஸ் Nyx-ஐ முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் கூடுதலாக 23 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ்-ஐ ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இத்துடன் யுஎஸ்பி டைப் சி கனெக்டர் மற்றும் குயிக் சார்ஜ் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பிடிரான் பாஸ்பட்ஸ் Nyx மாடல் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 1299 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் பிடிரான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
- பிடிரான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
பிடிரான் பேஸ்பட்ஸ் Nyx மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனம் புதிய நெக்பேண்ட் இயர்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் தலைசிறந்த பேட்டரி பேக்கப் மற்றும் அழகிய டிசைன் கொண்டுள்ளது.
புதிய டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் மாடல் அல்ட்ரா-ஃபிலெக்சிபில் ஃபிட், பவர்ஃபுல் பேஸ், நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்போனில் ட்ரூடாக் DSP ENC காலிங் மற்றும் ஆப்ட்சென்ஸ் ரெட்யுஸ்டு லேடென்சி கேமிங் என இரண்டு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் ட்ரூடாக் அம்சம் அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ கேட்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆப்ட்சென்ஸ் அம்சம் கேமிங் செய்வோருக்கு ஏற்ற வகையில் அதிக உண்மைத்தன்மையான சவுண்ட் வழங்குவதோடு, 40 மில்லிசெகண்ட் வரை லோ லேடன்சி கொண்டுள்ளது. இந்த நெக்பேண்ட் இயர்போன் ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் மற்றும் 10 மில்லிமீட்டர் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டிராங் பேஸ் கொண்டிருக்கிறது. இந்த இயர்போன்கள் பத்து நிமிட சார்ஜிங் செய்தால் ஏழு மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
இதில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் IPX4 ஸ்பிலாஷ் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் தோள்களின் மீது கச்சிதமாக பொருந்திக் கொள்வதோடு, இயர்போன்களில் காந்த சக்தி உள்ளது. இதனால் இரு இயர்போன்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதில் உள்ள பில்ட்-இன் மைக் மற்றும் மல்டி-கண்ட்ரோல் பட்டன் மூலம் வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மியூசிக் மற்றும் அழைப்புகளை இயக்கலாம்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் நெக்பேண்ட் இயர்போன் தற்போது ரூ. 599 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 799 ஆகும். இதன் விற்பனை அமேசான் மற்றும் பிடிரான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
- ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது.
- இதே போன்று ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பரிவிலும் ஆப்பிள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருப்பதோடு, ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்ற சாதனங்கள் பிரிவிலும் ஆப்பிள் தொடர்ந்து அதிரடியான விற்பனையை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியிடப்பட்டது. இதன் காரணமாகவே ஏர்பாட்ஸ் ப்ரோ 2 விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்திற்குள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 2 கோடியே 38 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் சந்தையில் 30.9 சதவீத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவனம் 34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவற்றில் சுமார் 42 லட்சம் யூனிட்கள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 ஆகும். இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ மாடல் இந்த காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது.
- ஸ்வாட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் இந்திய 10mm டிரைவர் மற்றும் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் கொண்டிருக்கிறது.
- சிலிகான் மூலம் மிக மென்மையாக உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்போன் அனைவருக்கும் சவுகரியமாக இருக்கும்.
ஸ்வாட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. ஸ்வாட் நெக்கான் 101 மாடலை தொடர்ந்து புதிய 102 நெக்பேண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் வியரபில்ஸ் பிரிவுக்காக ஸ்வாட் நிறுவனம் கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் 10mm டிரைவர் கொண்டிருக்கிறது. இது HD ஸ்டீரியோ சவுண்ட், புதுவிதமான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் உள்ளது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்திக் கொடுக்கும். டிசைனை பொருத்தவரை புது நெக்பேண்ட் இயர்போன் சிலிகான் மூலம் மிக மென்மையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், இந்த இயர்போன் எவ்வித அசவுகரியத்தையும் ஏற்படுத்தாது. இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி மற்றும் எர்கோனோமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இவை அதிக நேரம் பயன்படுத்தும் போதும் சவுகரிய அனுபவத்தை வழங்கும். வலிமையான டிசைன் கொண்டிருப்பதால், உடற்பயிற்சிகளின் போதும் இந்த நெக்பேண்ட் இயர்போன் எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது.
புதிய நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போனை 40 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பவர் பட்டனை இரண்டு நொடிகள் அழுத்திப்பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி சேவையை இயக்கலாம். இதன் இயர்பட்களில் காந்த சக்தி கொண்ட மெட்டல் உள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் டூயல் பேரிங் வசதி உள்ளது.
ஸ்வாட் நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 899 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் ஸ்வாட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- ரியல்மி நிறுவனத்தின் துணை பிராண்டு டிசோ அக்சஸரீக்கள் விற்பனையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
- டிசோ பிராண்டின் புது இயர்பட்ஸ் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிசோ பிராண்டின் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசோ பட்ஸ் Z பவர் என அழைக்கப்படும் புது இயர்பட்ஸ் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த டிசோ பட்ஸ் Z ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். டிசோ பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புதிய டிசோ பட்ஸ் Z பவர் மாடலில் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பூஸ்ட் பிளஸ் அல்காரிதம், 88ms லோ லேடன்சி மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. செமி இன்-இயர் ரக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் என்ற வகையில், இந்த மாடல் ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர் டிப்களை கொண்டிருக்கிறது.

IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் டிசோ பட்ஸ் Z பவர் மாடலின் அம்சங்களை ஸ்டெம் பகுதியில் இருந்து இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 380 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் டிசோ பட்ஸ் Z பவர் மாடல் சார்ஜிங் கேஸ் சேர்த்து 30 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஒவ்வொரு இயர்பட்-ம் ஏழு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால் இந்த இயர்பட்ஸ்-ஐ பத்து நிமிடங்களுக்கு குயிக் சார்ஜ் செய்யும் போது மூன்று நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். லீஃப் கிரீன், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் பியல் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் டிசோ பட்ஸ் Z பவர் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புது ஸ்மார்ட்போன் தவிர இயர்பட்ஸ் மாடலும் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை ஜனவரி 4 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் ஒன்பிளஸ் நிறுவனம் இதே நாளில் தனது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலும் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல்கள் சர்வதேச வெளியீட்டுக்கு முன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
வெளியீட்டு தேதி மட்டுமின்றி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் 4000Hz அல்ட்ரா வைடு பேண்ட் நாய்ஸ் ரிடக்ஷன், 48db டீப் ஆக்டிவ் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதில் உள்ள டீப் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி 99.6 சதவீதம் வரை வெளிப்புற சத்தத்தை தடுக்கும். இதன் ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 10Hz முதல் 40KHz வரை உள்ளது.

டீசரின் படி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் அர்போர் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுக்கு ஒற்றுப் போகும் வகையில் உள்ளது. இயர்பட்ஸ் பெட்டியில் டைனாடியோ (DYNAUDIO) பிராண்டிங் மற்றும் டிசைன் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
இதுவரை வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm மற்றும் 6mm டூயல் டிரைவர்கள், ANC மோடில் அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப், ANC இல்லாத பட்சத்தில் 9 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்கும் என கூறப்பட்டது. இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இதன் பேட்டரி லைஃப் ANC மோடில் 22 மணி நேரமும், ANC பயன்படுத்தாத சமயத்தில் 38 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் ப்ட்ஸ் ப்ரோ 2 அறிமுகம் செய்யப்பட்டது.
- புது பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 54ms லோ லேடன்சி, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் உள்ளது.
ஒன்பிளஸ் 11 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பிரீமியம் இயர்பட்ஸ் மாடல் ஆகும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db டெப்த் மற்றும் 4000Hz விட்த் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் 54ms லோ லேடன்சி, மெலோடிபூஸ்ட் டூயல் டிரைவர்கள் 11mm வூஃபர், 6mm டுவீட்டர், டைனாடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள வூஃபரின் டோம் பகுதியில் க்ரிஸ்டல் பாலிமர் டைஃப்ரம் மற்றும் டோம், எட்ஜ் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை வெவ்வேறு ஃபிரீக்வன்சிக்களில் இணைப்பை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அம்சங்கள்:
ப்ளூடூத் 5.3 (LHDC 5.0/AAC/SBC/LC3)
டால்பி அட்மோஸ் ஸ்பேஷியல் ஆடியோ
11mm டைனமிக் டிரைவர் + 6mm டைஃப்ரம் டிரைவர்
பிரெஷர் சென்சிடிவ் கண்ட்ரோல்
டூயல் மைக்ரோபோன்
பைநௌரல் லோ-லேடன்சி ப்ளூடூத் டிரான்ஸ்மிஷன்
54ms லோ-லேடன்சி கேமிங்
வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55)
டூயல் கனெக்ஷன்
இயர்பட்களில் 60 எம்ஏஹெச் பேட்டரி
கேசில் 520 எம்ஏஹெச் பேட்டரி
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அப்சிடியன் பிளாக் மற்றும் ஆர்பர் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 899 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 820 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீன சந்தையில் இதன் விற்பனை ஜனவரி 9 ஆம் தேதி துவங்குகிறது. இதன் இந்திய விலை அடுத்த மாதம் 7 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.