search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்லர்"

    • தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.
    • ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும்.

    கொல்கத்தா:

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் களம் இறங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் கடைசி வரை களத்தில் தனி நபராக நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    தொடக்கத்தில் மெதுவாக பட்லர் விளையாடினார். முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.

    ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அதே நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் பட்லர் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    மறுமுனையில் இருந்த ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பார்த்துக் கொண்டு புத்தி சாலித்தனமாக ஆடினார். தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.

    ஐ.பி.எல். போட்டியில் பட்லர் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அவரது 2-வது சென்சுரி ஆகும் ஐ.பி.எல்.லில் அதிக சதம் அடித்த வீரர்களில் பட்லர் 2-வது இடத்தில் உள்ளார். கோலி 8 சென்சுரியுடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 6 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும். அவர் கிறிஸ் கெய்ல் (22 சதம்), பாபர் ஆசம் (11), விராட்கோலி (9), ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.

    கடைசி 6 ஓவரில் ராஜஸ்தான் 96 ரன் எடுத்தது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு அந்த அணி பஞ்சாப்புக்கு எதிராக கடைசி 6 ஓவரில் 92 ரன் எடுத்தது.

    இதே போல கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனும் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.

    • முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது.
    • கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.

    அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 19 (9) ரன்னில் அவுட்டாகினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    அதனை தொடர்ந்து பட்லர் -ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து. அதிரடியாக விளையாடி ரியான் பராக் 34 ரன்களில் அவுட்டாகினார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0, ரோவ்மன் போவல் 26, ரன்களில் அவுட்டாகினர்.

    இருப்பினும் தொடர்ந்து ஒற்றை ஆளாக நின்ற பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அபாரமான சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 107* (60) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (224) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் அணி சமன் செய்தது. இதற்கு முன் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அந்த சிக்சரை விட என்னுடைய சதத்தை ஹெட்மயர் கொண்டாடியது சிறப்பாக இருந்தது.
    • ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக விளையாடும் எனக்கு நிறைய ஆதரவுகள் இருக்கிறது.

    ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 183 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் 19.1 ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பட்லர் 9 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.

    இந்த சதத்தின் மூலம் பட்லர் தன்னுடைய 6-வது ஐபிஎல் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக தன்னுடைய 100-வது ஐபிஎல் போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் ராஜஸ்தானுக்கு அதிக ஆட்டநாயகன் (11) விருது வென்ற வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

    இந்நிலையில் அந்த தருணத்தில் சிக்சர் அடிப்பதற்கு ஹெட்மயர் செய்த உதவி பற்றி ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அந்த சிக்சரை விட என்னுடைய சதத்தை ஹெட்மயர் கொண்டாடியது சிறப்பாக இருந்தது. உண்மையாக அவர் தான் நீங்கள் ஒரு சிக்சர் அடிக்க வேண்டும். எனவே ஸ்டம்புகளுக்கு குறுக்கே சென்று பந்தை அந்த பகுதியில் அடியுங்கள் என்று என்னிடம் கூறினார்.

    சில நேரங்களில் கிரிக்கெட்டில் விளையாடும் உங்களுடைய தலையை பல்வேறு விஷயங்கள் அதிகமாக சுற்றும். ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக விளையாடும் எனக்கு நிறைய ஆதரவுகள் இருக்கிறது. அங்கே அனைவரும் நீங்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியில் பங்காற்றி இந்த சீசனை நன்றாக துவங்குவதற்கு வாழ்த்துகின்றனர்.

    இவ்வாறு பட்லர் கூறினார்.

    • சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பட்லர் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி விராட் கோலியின் சதத்தால் (ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்) 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் 2-வது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    அடுத்து பட்லர் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன்ரேட் 10 என்ற வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்தது. 10 ஓவரில் 95 ரன்கள் சேர்த்தது. பட்லர் 30 பந்தில் அரைசதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். 15-வது ஓவரின் 4-வது பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. சிராஜ் பந்தில் சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், ஜுரேல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர். 5-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. ஆனால் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பட்லர் 58 பந்தில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

    • கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகி உள்ளார்.
    • நெதர்லாந்து தொடரில் இயான் மார்கன் ரன் ஏதும் எடுக்கவில்லை.

    இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நெதர்லாந்து சென்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஆம்ஸ்டெல்வீனில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் இயான் மார்கன் 8 பந்துகள் மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் இந்த தொடரை முடித்துள்ளார்.

    • ஒருநாள் போட்டிகளில் முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.
    • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் பட்லர் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது.

    499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த போட்டியில் 162 ரன்கள் குவித்த பட்லர் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

    நெதர்லாந்து அணிக்கு எதிராக 498 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில், முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.

    அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியல்



    ஒரு போட்டியில் 3 வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது முறை ஆகும். ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே ஒரு இன்னிங்ஸில் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டன. இருமுறையும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அடித்தார்கள். 2015-ல் ஜோகன்னஸ்பர்க்கில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், அதே ஆண்டு வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் மூன்று சதங்கள் அடித்திருந்தன. இந்நிலையில் ஒரு இன்னிங்சில் 3 சதங்கள் அடிக்கப்பட்ட அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி 2-வது இடத்தை பிடித்தது.

    அதிக முறை 400- ரன்களுக்கு மேல் குவிந்த அணியின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (6 முறை) அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் (5 முறை) உள்ளது.

    இங்கிலாந்து இன்னிங்சின் முதல் 35 ஓவர்களில், 9 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன. 36-50 ஓவர்களில், இங்கிலாந்து 17 சிக்ஸர்களை அடித்தது. இதில் பட்லர் (10) லிவிங்ஸ்டன் (1) மலான் (1) சிக்சர்களும் அடித்தனர். ஒட்டுமொத்தமாக 26 சிக்சர்களை இங்கிலாந்து அணி அடித்தது. இது ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சராகும். இந்த பட்டியலிலும் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து ஆக்கிரமித்துள்ளது.

    ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணி பட்டியல்



    மொத்தமாக இங்கிலாந்து பவுண்டரிகள் (36 பவுண்டரிகள், 26 சிக்ஸர்கள்) மூலம் 300 ரன்களைக் குவித்தது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் பவுண்டரிகளில் மட்டும் 300+ ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது.

    பட்லர் சாதனைகள்

    இந்த போட்டியில் பட்லர் தனது சதத்தை வெறும் 47 பந்துகளில் எட்டினார். இது ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் அடித்த இரண்டாவது அதிவேக சதமாகும். இங்கிலாந்தின் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பட்லர்தான் இருக்கிறார். அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் 50 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் மூன்று முறை சதம் அடித்த ஒரே வீரர் அவர்தான்.

    பட்லர்



    பட்லர் 65 பந்துகளில் 150 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். 2015 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை அவர் (64 பந்துகளில்) படைத்தார்.

    இந்த போட்டியின் மூலம் லிவிங்ஸ்டனும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் லிவிங்ஸ்டன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் உள்ள ஏபி டிவில்லியர்ஸ் சாதனையை(16 பந்துகளில்) முடியடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் அதனை லிவிங்ஸ்டன் தவறவிட்டார். 13 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர் 17-வது பந்தில்தான் அரை சதம் கடந்தார்.

    46-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 32 ரன்கள் குவித்தார். அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டியில் ஒரே ஓவரில் இங்கிலாந்து எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக 2007-ம் ஆண்டு தி ஓவல் மைதானத்தில் யுவராஜ் சிங்குக்கு எதிராக டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசினார்.

    ×