என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழில்துறை"
- நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
- நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.
திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலை யில் கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலையிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான(ஜூன்) நூல் விலை ஆனது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர். இதன்படி தொடர்ந்து 5 மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
- வடமாநில தொழிலாளர்களைஎப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
திருப்பூர் :
தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டு துறை சார்பில் கோவை மண்டல அளவிலான வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் தொழிலாளர் நலத்துறை, போலீசார், தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடமாநில தொழிலாளர்களைஎப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில்துறையினர் பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டம் குறித்து அதில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், எளிதாக தரவுகளை கையாளும் வகையில், தமிழக அரசு வடமாநில தொழிலாளர்களுக்கு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.அனைத்து தன்னார்வ அமைப்புகள், தொழில்துறை உள்ளிட்டோரை அழைத்து கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது என்றார்.
- திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டிங் அசோசியேஷன் சங்கத்தின் 18ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- வாரா கடன் பற்றிய விழிப்புணர்வை வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர்.
வீரபாண்டி :
திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டிங் அசோசியேஷன் சங்கத்தின் 18-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருப்பூர் இடுவம்பாளையம் டெக்பா கலையரங்கத்தில் நடந்தது.
இதில் புதிய மிஷின்கள் வாங்க அரசு மானியம் பெறுவது குறித்த விளக்க உரையை (எப்.சி.ஏ) (எல்.எல்.பி.) அரசப்பன், மற்றும் வாரா கடன் பற்றிய விழிப்புணர்வை வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். தீர்மானத்தில், பிரின்டிங் தொழில் என்பது மதிப்பு கூட்டில் சிறு தொழில் நிறுவனங்கள் ஆகும். ஆகவே தமிழக அரசு தாங்கள் ஏற்றிருக்கும் மின் கட்டண உயர்வை விலக்கிக்கொள்ள வேண்டும். அனைத்து பிரிண்டிங் நிறுவனங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு அவர்களின் வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டும். திருப்பூரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு பிரிண்டிங் சேவை செய்திட வேண்டும். திருப்பூர் நகரின் வளர்ச்சிக்காக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் டெக்பா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் 2022-ம் ஆண்டுக்கான மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு அளவிலான டைஸ் மற்றும் கெமிக்கல் வியாபாரிகளின் மாநாட்டை திருப்பூரில் நடத்துவது, டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் திருப்பூரின் வெளியே குடோன் அமைப்பது. நீண்ட நாள் நிலுவை தொகையை விரைவில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் அதிக நாள் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல பொதுக்குழுக்கூட்டம் திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வால், கூடுதலாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் உயரும். ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்வு போன்றவையால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். வியாபாரிகள் 1 வாரம் முதல் அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் பொருட்களை வாங்கி ரொக்கப்பரிவர்த்தனை செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
- அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தமிழக மனிதவள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தொழில் துறை என்று அழைக்கப்பட்டு வந்த அரசுத் துறை இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை என்று அழைக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில், அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, தமிழக தொழில் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்து வருகிறார். இனி அவர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். அவர் வசம் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 5 மாதங்களில் ரூ.1.59 லட்சம் கோடி மதிப்பிலான பருத்தி ஆயத்த ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
- இறக்குமதியில் இந்தியா தனது பங்களிப்பை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
திருப்பூர் :
கொரோனா பாதிப்புக்கு பின் உலகளாவிய ஆயத்த ஆடை இறக்குமதியாளர்கள் சீன சார்பு நிலையை குறைத்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தைக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை சீனா இழந்து வருகிறது.
சீனாவின் சின்ஜியானில் உற்பத்தியாகும் பருத்தியில் தயாரித்த ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய 2021 முதல் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் சீன பருத்தி ஆடை ஏற்றுமதி வேகமாக சரிந்து வருகிறது. இதை சாதகமாக்கி வியட்நாம், வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை வசப்படுத்தி வருகின்றன.
நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் ரூ.1.59 லட்சம் கோடி மதிப்பிலான பருத்தி ஆயத்த ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.அதாவது 15.7 சதவீதத்துடன் வியட்நாம் முதலிடமும், 14.4 சதவீதத்துடன் வங்கதேசம் இரண்டாமிடமும் பெற்றுள்ளது. 13.1 சதவீத பங்களிப்புடன் சீனா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்திய பருத்தி ஆடை ஏற்றுமதி முன்னேற்றமடைந்து வருகிறது. கடந்த ஜனவரி -மே வரை ரூ. 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஆடை ரகங்கள் அமெரிக்காவில் இறக்குமதியாகியுள்ளன.
இது குறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-
அமெரிக்காவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில், இந்தியா தனது பங்களிப்பை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம். போட்டி நாடுகளுக்கும் நமக்கும் அமெரிக்காவில் பருத்தி ஆயத்த ஆடைகளுக்கு ஒரே வரி விகிதமே உள்ளது.
எனவே அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில் 15 சதவீத பங்களிப்பை பெற நாம் முயற்சிக்க வேண்டும். ஆண்டுதோறும் 3.5 லட்சம் கோடி மதிப்பிலான செயற்கை இழை ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. நம் நாடு 10 ஆயிரம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வருகிறது.தமிழக ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க சந்தை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடை உற்பத்தியாளர்கள் நூற்பாலை, சாய ஆலை என அனைத்து துறையினரும் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டால் மிகப்பெரிய வாய்ப்புகளை வசப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்