என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னி தீர்த்தம்"

    • அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்க ளில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்று. காசிக்கு செல்லும் பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று ஐதீகம் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

    முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. இன்று கார்த்திகை மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பலர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் செய்து சென்றனர். இதனால் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.

    • நாளை அக்னிதீர்த்த கடலில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அமாவாசை அன்று, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகின்றது. இந்த நிலையில் தை அமாவாசையான நாளை (சனிக்கிழமை) ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோவிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் எளிதாக புனித நீராட செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.

    தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன.. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தை அமாவாசையையொட்டி நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

    இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருவார்கள். மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    இன்று மாசி மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
    • 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர்.

    புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். அதன்படி வைகாசி மாத அமாவாசையான இன்று (19-ந் தேதி) அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசை நாளான இன்று ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    • அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
    • பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளில் புனித நீராட குவிந்திருந்தனர்.

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைகால விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி முதல் விடப்பட்டது. கோடைகால விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வந்தது. இதேபோல் ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதியிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகின்றது.

    இதனிடையே கோடைகால விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக அக்னி தீர்த்த கடலில் புனித நீராட காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளில் புனித நீராட குவிந்திருந்தனர்.

    இவ்வாறு தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் 3-ம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.

    குறிப்பாக 2 கடல் சேருமிடமான அரிச்சல் முனை கடற்கரை சாலை வளைவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் ராமேசுவரம் கோவிலில் பக்தர்களின் வருகை இனி சற்று குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

    • அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
    • ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன.

    ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள். ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகேதான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

    தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
    • ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள்.

    அதன்படி இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதன்பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிய பக்தர்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், ரத வீதி உள்பட பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சியளித்தது.

    பக்தர்களின் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கடந்த 15-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டி ருந்தது.

    அமாவாசையான இன்று அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப் பாறையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறையினரின் சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சந்தன, சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    • 23-ந்தேதி சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8.30 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 4-வது நாளான இன்று காலை அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனிடையே ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் 5-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையான நாளை காலை 11 மணிக்கு கோவிலிலிருந்து ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. காலை 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து காலபூஜை நடைபெறும்.

    வழக்கமாக பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் நாளை ஆடி அமாவாசையாக இருப்பதால் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு அடைக்கப்படாமல் பகல் முழுவதும் திறந்து இருக்கும். இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவின் 7-வது திருநாள் நிகழ்ச்சியாக வருகின்ற 19-ந்தேதி அன்று இரவு வெள்ளி தேரோட்டமும் 9-வது திருநாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழாவில் 11-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் 12-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

    • கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம். கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.
    • சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்.

    ராவணனை கொன்றதால் ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை விரட்ட ராமேசுவரத்தில் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து ராமர் விடுபட்டார். இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    22 புண்ணிய தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும்:-

    மகாலட்சுமி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும்.

    சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் - சடங்குகளை செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.

    சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.

    சக்கர தீர்த்தம் - தீராத நோயும் தீரும்.

    சேது மாதவ தீர்த்தம் - செல்வம் கொழிக்கும்.

    நள தீர்த்தம் - இறையருளைப் பெற்று சொர்க்கத்தை அடையலாம்.

    நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.

    கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.

    கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    கந்தமான தீர்த்தம் - தரித்திரம் அகலும்.

    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், பில்லி சூனியப் பிரச்சினைகள் விலகும்.

    சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்

    சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளின் கோபத்தில் இருந்து விடுபடலாம்.

    சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

    சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்.

    கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் - பிறவிப்பயனை அடையலாம்.

    கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம், இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் சென்று 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

    • புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம்.
    • அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    புனித தீர்த்தங்களான காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடு துறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக் கட்டம், பவானி முக்கூடல், பாப நாசம், சொரி முத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் செய்வார்கள்.

    நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ் கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.

    பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.

    ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன.

    பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள்.

    ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகே தான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    லவகுச குளத்தில் நீராடுங்கள்

    கோயம்பேடு தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்து வந்த போது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார்.

    அவரின் திருவருளால் லவகுசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம். ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும், மன சஞ்சலம் நீங்கும், பித்ருக்களின் அசீர்வாதம் கிடைக்கும்.

    ஆடி அமாவாசை நாளில், குசலவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

    21 பிண்டங்கள்

    பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக செய்யப்படும் வழிபாட்டை சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

    • அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்
    • முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

    அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கி செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

    அதன் மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுபோன்ற பித்ரு வழிபாட்டு தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன் ஸ்ரீசங்கமேஸ்வரையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்வது வழக்கமாகும்.

    காகத்திற்கு உணவிடுங்கள்

    அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.

    அமாவாசை அன்று மட்டும் அல்ல , தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அம்மாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்..

    திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.

    இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சிறந்தது.

    பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல..காய்கறிகள் தானமாக தரவேண்டும் , குறிப்பாக பூசணிக்காய்..ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

    பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும். அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள். முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    • அமாவாசையில் ஆடி அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகின்றது.
    • கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள்.

    அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

    அமாவாசையில் ஆடி அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகின்றது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும், பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகின்றது.

    ஆடி, அமாவாசையன்று, `பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

    காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்' எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும்.

    யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்' செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.

    கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப்பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.

    அந்த பெண் இந்த புடவையை பயன்படுத்திக்கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆடி அமாவாசையன்று மறக்காமல் உங்கள் மூதாதையருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள். மறைந்த மூதாதையர்களின் ஆசி, உங்களுக்கு நிரம்பகிடைக்கட்டும்.

    ×