என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொன்னையன்"
- பல்வேறு பொறுப்பு வாய்ந்த துறைகளில் அமைச்சராக இருந்து அனுபவம் வாய்ந்த பொன்னையன்தான் இப்படி சொல்லி இருக்கிறார்.
- அமித் ஷா சொன்னதை சுட்டிக்காட்டிய பொன்னையன் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியான நபர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்.
சும்மாவும் சொல்லவில்லை. யாரோ ஒருத்தர் சொன்னதும் இல்லை. தமிழகத்தில் சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு வாய்ந்த துறைகளில் அமைச்சராக இருந்து அனுபவம் வாய்ந்த பொன்னையன்தான் இப்படி சொல்லி இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் இருந்து பிரதமரை உருவாக்குவோம் என்று அமித்ஷா சொன்னதை சுட்டிக்காட்டிய பொன்னையன் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியான நபர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். அவர் இந்திய மற்றும் உலக அரசியலை தெரிந்தவர். விரல் நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வரக்கூடிய தகுதியுடன் இருக்கிறார்" என்று கூறி இருக்கிறார்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வும் சரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் சரி, சிறந்த முறையில் பணியாற்றினார்கள்.
- அண்ணாமலை, பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் தான், அவர் ஒன்றும் அகில இந்திய தலைவர் கிடையாது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வும் சரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் சரி, சிறந்த முறையில் பணியாற்றினார்கள். தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பு எங்களுக்கு மனப்பூர்வமாக இருந்தது. இஸ்லாமிய வாக்குகள் பா.ஜ.க. உடனான கூட்டணி காரணமாக சற்று அதிகமாகவே குறைந்திருக்கலாம். ஓரளவுக்கு பெண்கள் வாக்குகள் எங்களுக்குக் கிடைத்தன. பா.ஜ.க.வின் கொள்கை வேறு, எங்களுடைய கொள்கை வேறு. அ.தி.மு.க. என்பது சாதி, மத பாகுபாடுகளைப் பார்க்காத இயக்கம். எடப்பாடி பழனிசாமி அந்த வழியிலேயே செயல்படுகிறார். இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த பிரிவினராக இருந்தாலும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு ஈடேற்றவேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நோக்கம்.
ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை நாங்கள் கிஞ்சித்தும் ஏற்கவில்லை. பா.ஜ.க. வேறு. நாங்கள் வேறு என்பதை படிப்படியாக சிறுபான்மையினர் உணர்வார்கள். அதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அ.தி.மு.க. - பா.ஜ.க. நட்புறவு தொடர்கிறது. பிரதமர் மோடி நல்ல முறையில் நாட்டை ஆள்கிறார். பா.ஜ.க.வில் இருந்து நிர்வாகிகளை நாங்களாக எங்கள் கட்சிக்கு வரச் சொல்லவில்லை. இன்னொரு கட்சியில் இருக்கும் உட்கட்சி பிரச்சனைகளை தேடித்தேடி கண்டுபிடிப்பது எங்கள் வேலையும் அல்ல. அவர்கள் என்ன பேசினார்கள் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது.
பிரதமர் மோடியின் திறமைமிக்க ஆட்சியை நாங்கள் எப்போதுமே பாராட்டுகிறோம். தமிழ்நாட்டு நலனுக்கு மாறாக பா.ஜ.க. செயல்பட்டால் அதனை எதிர்ப்போம். அண்ணாமலை, பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் தான், அவர் ஒன்றும் அகில இந்திய தலைவர் கிடையாது. அவர் அவரது கட்சியை இங்கு வளர்க்கும் நோக்கில் செயல்படுகிறார். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை கண்டுகொள்ளும் தேவை எங்களுக்கு இல்லை. எங்கள் கட்சியில் 95.5 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக இருக்கின்றனர். அண்ணாமலை, ஓ.பி.எஸ்.சுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று கூறியிருந்தால், அவர் சற்று ஆராய்ந்து பேச வேண்டும். பா.ஜ.க. இங்கு எத்தனை தொகுதிகள் வென்றது, எவ்வளவு சதவீதம் வாக்குகள் பெற்றது, தமிழ்நாட்டில் தங்கள் நிலை என்ன என்பது கட்டாயம் தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு தெரியும். எனவே, அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒரே நிலையில் இல்லை.
- உள்ளாட்சி தேர்தலிலேயே பாரதிய ஜனதா தனியாகத்தானே நின்றது.
- தி.மு.க. நீங்கலாக எல்லாருமே எங்களுடன் இருந்தால், நாங்கள் வர வேற்கதானே செய்வோம்.
சென்னை:
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் அண்ணா நினைவிடத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி:-தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துள்ளார். ஏதாவது ஒருங்கிணைக்கும் முயற்சி ஏதும் நடக்கிறதா?
பதில்:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள இந்த பேரியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்துவது எம்.ஜி.ஆர். ஆவி, அண்ணாவின் ஆவி, அம்மாவின் ஆவி.
அந்த அடிப்படையிலே 1½ கோடி தொண்டர்களும் 94.5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும் தமிழக மக்களும் எடப்பாடி பழனிசாமி பின்னாலே அவரது தலைமையின் கீழ் இயங்குகிறார்கள். செயல்படுகிறார்கள்.
கேள்வி:- இந்திய தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவை ஏற்கவில்லை. இதை பின்னடைவாக ஏற்கிறீர்களா?
பதில்:- தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரைக்கும் சட்டரீதியாக அவர்களுக்கு சில கடமைகள் உண்டு. ஒரு அரசியல் கட்சியினுடைய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை கண்காணிக்க வேண்டியது நீதிமன்றம் அல்ல. சட்டரீதியாக.
அந்த அடிப்படையிலே அ.தி.மு.க. சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், ஆழமாக பார்த்து, சட்டத்துக்கு உட்பட்டு அந்தந்த கட்சிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. கடமையில் தவறி விட்டு, ஆரம்பத்தில் கோட்டை விட்டு விட்டு இப்போது நீதிமன்றத்தை கைகாட்டுவது, சட்டத்தை மீறிய செயல்.
தேர்தல் ஆணையம் கூறுகிற கூற்று அவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் போடப்பட்டிருக்கும் மனு சட்டத்துக்கு புறம்பான ஒன்று. அதை நீதிமன்றம் சரி செய்யும். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எல்லாமே நடக்கும்.
கேள்வி:- ஈரோடு தொகுதியில் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?
பதில்:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க.தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். இதை ஏற்கனவே ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது. அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. இதை எதிர்த்து வழக்கு போட்ட ஓ.பி.எஸ். இன்று வரை தடை உத்தரவு வாங்குவே இல்லையே.
கேள்வி:- ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. இரு அணியும் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை 2 தலைவர்களையும் சந்தித்து இருக்கிறாரே?
பதில்:- பாரதிய ஜனதா கட்சி வடநாட்டில் எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது, பாரதிய ஜனதாவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சிகளை பி.ஜே.பி. எப்படியெல்லாம் பிடித்தது என்பது உங்களுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
கேள்வி:- தேசிய ஜன நாயக கூட்டணி இப்போது இருக்கிறதா? உடைந்து விட்டதா?
பதில்:- உள்ளாட்சி தேர்தலிலேயே பாரதிய ஜனதா தனியாகத்தானே நின்றது. எனவே இந்த கேள்விக்கே பொருள் இல்லை.
கேள்வி:- பாரதிய ஜனதாவின் கூட்டணி அ.தி.மு.க.வுக்கு ஆபத்தா?
பதில்:- மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதனால் பி.ஜே.பி. எங்களோடு இருக்கலாம் அல்லவா? எங்களை விரும்பலாம் அல்லவா? எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா? காத்திருந்து பாருங்கள்.
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதை விரும்புகிறீர்களா? இல்லையா?
பதில்:- தி.மு.க. நீங்கலாக எல்லாருமே எங்களுடன் இருந்தால், நாங்கள் வர வேற்கதானே செய்வோம்.
கேள்வி:- ஈரோட்டில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அண்ணாமலை, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சை சந்தித்தாரா?
பதில்:- எனக்கு தெரிய அப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் இல்லை. இமய மலையில் இருந்து தமிழக மக்களை காக்க கூடிய ஆற்றல் பெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த தேர்தல் நடக்க வேண்டும் என்பது மக்களுடைய கருத்து. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளுடைய கருத்து.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட, எடப்பாடி பழனிசாமிதான் மிகச் சிறந்த முதலமைச்சராக தமிழகத்தில் செயல்பட்டார் என்று கூறுகிற நிலை இருக்கிறது.
கேள்வி:- தி.மு.க. நீங்கலாக ஓ.பன்னீர்செல்வம் இணைய வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்:- அவர் ஒரு தனி நபர். ஓ.பி.எஸ்.சுக்கு கட்சியே இல்லையே? அவர் ஒரு செல்லாக்காசு. ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்.
கேள்வி:- ஓ.பி.எஸ். நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள். வேட்பாளரை அறிவித்துள்ளாரே? பா.ஜனதா போட்டியிட்டால் வேட்பாளரை வாபஸ் வாங்குவோம் என்று அறிவித்து இருக்கிறாரே?
பதில்:- நீங்கள் கூட சுயேச்சையாக நின்று கொண்டு எங்களுக்கு ஒரு கட்சி இருக்கிறது என்று அறிவிக்கலாம். மக்கள் ஏற்க வேண்டும். சட்டம் ஏற்க வேண்டும். அவர் அணியை சட்டம் ஏற்காது.
கேள்வி:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் உங்களது நிலைப்பாடு என்ன? டி.டி.வி.தினகரன், சசிகலா வந்தால் ஏற்பீர்களா?
பதில்:- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைக்கு சொந்தக்காரர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேர்தல் விதிகள் முடிவு செய்து விட்டன. ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு முடிவு செய்து விட்டது. அதற்கு மேல் என்ன இருக்கிறது. ஒன்றுமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை.
- அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
சென்னை:
மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் தற்போது உறுப்பினராக கிடையாது. அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டி இருப்பது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். அதற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக இந்த கூட்டத்தை கூட்டலாம்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் அவருக்கு வேறு வழியும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும் போது, "அ.தி.மு.க.வில் 1 லட்சம் கிளைகள் உள்ளன. அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ளனர். பொதுக்குழுவிலும் அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.
- அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமனம்.
- அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேர் நியமனம்.
அ.தி.மு.க.இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னையன் மற்றும் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப் படுகிறார்கள்.
அதற்கு பதிலாக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டு உள்ளார். கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொது செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், ராஜன் செல்லப்பா, பாலகங்கா, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ்.மணியன் ,காமராஜ், ப.தனபால், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்