என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகேஷ் பாபு"

    • தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு.
    • மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. தற்பொழுது இவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    அதில் சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் பகுதியாக சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனங்களில் விளம்பர தூதரான மகேஷ் பாபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    நடிகர் மகேஷ் பாபு ஏப்ரல் 27 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள இந்த இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மக்களிடம் பண மோசடி செய்துள்ளனர். ஒரே இடத்தை பல பேரிடம் விற்றுள்ளது. தகுதி மற்றும் ஒப்புதல் அளிக்காத வீடுகளை விற்றது என பல்வேறு குற்றச்சாட்டு இந்த இரு நிறுவனங்களின் மீது உள்ளது.

    இந்த நிறுவனங்களின் விளம்பர தூதராக மகேஷ் பாபு இருந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கிருஷ்ணா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் அறிவிப்பின்படி அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் செய்த பின்னர் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிருஷ்ணா இன்று உயிர்ழந்தார்.

    தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக காலமானர். நடிகர் கிருஷ்ணா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

     

    அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 

     

     

    இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.

    நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக காலமானார். நடிகர் கிருஷ்ணா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன்பின், தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    • தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா.
    • இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா சமீபத்தில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.


    மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.


    பின்னர் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.


    இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது. இதுவே உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சலும் தைரியமும் உங்கள் இயல்பு. எனது உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள்.


    நான் பார்த்த அனைத்தும் அப்படியே மறைந்துவிட்டன. ஆனால், இதுவரை நான் உணராத வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன். உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ அப்பா. மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.



    • தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பவித்ரா லோகேஷ்.
    • இவர் தன்மீது அவதூறு கருத்துக்கள் பரப்புவதாக புகார் அளித்துள்ளார்.

    பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தமிழில், 'கவுரவம்', 'அயோக்யா', 'க/பெ.ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரும் தெலுங்கு நடிகர் நரேஷும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாயின. நரேஷ், தமிழில் 'நெஞ்சத்தை அள்ளித்தா', 'பொருத்தம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்தபோது, நரேஷின் 3வது மனைவி ரம்யா, அவர்களை அடிக்கப் பாய்ந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    நரேஷ் - பவித்ரா லோகேஷ்

    நரேஷ் - பவித்ரா லோகேஷ்

    பவித்ரா லோகேஷ் கன்னடம், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும் நடிகருமான 60 வயதாகும் நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். பவித்ராவுக்கு 43 வயது ஆகிறது. இவரும் திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர்.

     

    பவித்ரா லோகேஷ்

    பவித்ரா லோகேஷ்

    இந்நிலையில் பவித்ரா லோகேஷ் ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ''சில சமூக ஊடகங்களில் என்னை கேலி செய்து அவதூறு தகவல்கள் பரப்பி வருகின்றன. எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு ஆபாச கருத்துகள் பதிவிடுகின்றனர். மார்பிங் செய்த புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக எஸ்எஸ்எம்பி28 திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படம் ஜனவரி 13, 2024 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக எஸ்எஸ்எம்பி28 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) தயாரிக்கிறார். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.


    எஸ்எஸ்எம்பி28

    எஸ்எஸ்எம்பி28

    குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் கலந்த என்டர்டெய்னர் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி 13, 2024 ஆண்டு வெளியாகவுள்ளதாக மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கவுள்ளார்.
    • இந்த படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கவுள்ளார்.


    மகேஷ் பாபு - ராஜமவுலி

    மகேஷ் பாபு - ராஜமவுலி

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.


    ராஜமவுலி - மகேஷ் பாபு

    ராஜமவுலி - மகேஷ் பாபு

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.
    • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகை அனுஷ்கா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.


    தற்போது இவர் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய பாடலான 'என்னடா நடக்குது'பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ராதன் வரிகளில் தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் 'எஸ்எஸ்எம்பி29'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த வெளியாகியுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.


    ராஜமவுலி - மகேஷ் பாபு

    ராஜமவுலி - மகேஷ் பாபு

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    மகேஷ் பாபு

    மகேஷ் பாபு

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
    • இதனை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.



    இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதனை வெளியிடவுள்ள பிரபலம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். 

    • துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.



    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.



    'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ×