என் மலர்
நீங்கள் தேடியது "பிரகாஷ் ராஜ்"
- நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
- சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இன்று காலை அவருக்கான இறுதி சடங்குகள் நடைப்பெற்று அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தவெக தலைவர் விஜய், கார்த்தி , பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலியை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
- மக்களின் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.
- பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் கொடுத்து விட முடியுமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.
சிலர் விஜய்யை பவன் கல்யாணுடன் ஒப்பிடுவதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் கொடுத்து விட முடியுமா?
நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறும்போது மாற்று சக்தி என சீட் வாய்ப்பு கிடைப்பதகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
- சூதாட்ட விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது வழக்குப் பதிவு.
- நடிகர் பிரகாஷ் ராஜ் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்து பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், "ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு பற்றியும், நான் நடித்த விளம்பரம் பற்றியும் சர்ச்சை நிலவுகிறது. அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இப்போது பதில் சொல்ல வேண்டி உள்ளது. அந்த விளம்பரத்தில் நான் நடித்தது உண்மைதான். அது தவறு என்று சில மாதங்களிலேயே தெரிந்து கொண்டேன். ஆனால் அந்த விளம்பரத்திற்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் ஆகி இருந்ததால் இடையில் அவர்களை நிறுத்திவிடும்படி என்னால் கேட்க முடியவில்லை.
2017-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் சமூக வலைதளத்தில் எனது பழைய விளம்பரத்தை பயன்படுத்தினர். இதை எதிர்த்து நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதற்கிடையே தற்போது என் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. போலீசார் எனக்கு எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. நோட்டீஸ் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்," என்று அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்தார்.
- இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன.

விஷால்
நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி - விஷால்
அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

பிரகாஷ் ராஜ்
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "ஷாட் ஓகே... அடுத்து" என கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.
- தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரகாஷ் ராஜ்.
- இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் அவர் தீவிர அரசியல் விமர்சனம் செய்வது குறித்து பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ''சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்.

பிரகாஷ் ராஜ்
என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு அவர்கள் விலகுகிறார்கள். இது என் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நான் வருந்தவில்லை. அப்படிப்பட்டவர்களை இழக்க நான் தயாராகவே இருக்கிறேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போதுதான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறேன். எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூற விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது" என்றார்.
- நடிகை ரிச்சா சதாவின் பதிவு வருத்தமளிப்பதாக அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார்.
- தற்போது அக்ஷய் குமாரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் ராம் லீலா, சாக் அண்ட் டஸ்டர், மசான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் பதிவிற்கு "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார்.

ரிச்சா சதா
இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து தனது பதிவிற்கு வருத்தம் தெரிவித்து ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அக்ஷய் குமார்
இதனிடையே நடிகர் அக்ஷய் குமார், ரிச்சா சதாவின் "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என்ற பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து "இதைப் பார்க்கையில் வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப்படைகளுக்கு நன்றியின்றி இருக்கக் கூடாது. அவர்கள் இருப்பதால்தான் நாம் இன்று இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்ஷய் குமார். உங்களை விட நடிகை ரிச்சா சதா சொன்னது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருக்கிறது" என அக்ஷய் குமாரை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Didn't expect this from you @akshaykumar ..having said that @RichaChadha is more relevant to our country than you sir. #justasking https://t.co/jAo5Sg6rQF
— Prakash Raj (@prakashraaj) November 25, 2022
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து.
- கோவா திரைப்பட விழாவில் இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

நாடவ் லேபிட்
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தி காஷ்மீர் பைல்ஸ் - பிரகாஷ் ராஜ்
இந்நிலையில் நாடவ் லேபிட் தெரிவித்த கருத்து குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவமானம் இப்போ அதிகாரப்பூர்வமானது. சும்மா கேட்கிறேன் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிடைத்து வருகிறது.
தேர்வுக்குழு தலைவரின் கருத்துக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனர் அக்னிஹோத்ரி, ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என அவர் காட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் தனுஷ் தனது மகன்களுடன் அவதார்-2 படத்தை பார்த்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ்
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது. இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது.

அவதார்-2 படம் பார்த்த பிரகாஷ் ராஜ்
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் படத்தை பார்த்து ரசித்துள்ளார். இந்நிலையில் தனுஷை தொடர்ந்து அவதார் படத்தை தனது மகனுடன் பார்த்து ரசித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.
- இப்படத்தை தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட் சமீபத்தில் விமர்சித்தார்.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் 53-வது சர்வதேச கோவா திரைப்பட விழாவின் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தி காஷ்மீர் பைல்ஸ்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தின் இயக்குனரை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, "பதானை தடை செய்ய நினைத்தார்கள் ஆனால் அதன் வசூல் ரூ.700 கோடியை தாண்டியுள்ளது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முட்டாள்தனமான திரைப்படங்களில் ஒன்று. அதை தயாரித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியும்.
படத்தை பார்த்த சர்வதேச ஜூரி இப்படத்தை விமர்சித்தார். இந்த சூழலில் அப்படத்தின் இயக்குனர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை எனக் கேள்வி கேட்கிறார். ஆஸ்கர் இல்லை, ஒரு பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விவேக் அக்னிஹோத்ரி
இந்நிலையில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பல நக்சல்ஸ்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்துள்ளது. பார்வையாளர்களை குரைக்கும் நாய் என்ற ஒருவர், படம் வெளியாகி ஓராண்டு கழித்தும் கஷ்டப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.
A small, people's film #TheKashmirFiles has given sleepless nights to #UrbanNaxals so much that one of their Pidi is troubled even after one year, calling its viewer's barking dogs. And Mr. Andhkaar Raj, how can I get Bhaskar, she/he is all yours. Forever. pic.twitter.com/BbUMadCN8F
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) February 9, 2023
- நடிகர் கிச்சா சுதீப் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாக இன்று காலை தெரிவித்தார்.
- கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் சமீபத்தில் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக தெரிவித்திருந்தார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. இதையடுத்து இன்று பாஜக கட்சியில் கிச்சா சுதீப் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.

பசவராஜ் பொம்மை -கிச்சா சுதீப்
இதைத்தொடர்ந்து, பெங்களூரில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப் வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்
இன்று காலை கிச்சா சுதீப் பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக செய்தி அறிந்ததும் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கர்நாடகாவில் தோல்வி முகம் காண கூடிய மற்றும் நம்பிக்கையற்ற பா.ஜ.க.வால் பரப்பப்படும் போலியான செய்தியாக இது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். தற்போது இது உறுதியான நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதீப் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
- விழா நடந்து கொண்டிருந்த கல்லூரி முன்பு பா.ஜ.க. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் திரண்டனர்.
- போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பெங்களூரு:
நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் தொடர்ந்து பொது வெளியிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் சில முற்போக்கு சங்கங்கள் இணைந்து 'திரையரங்கு சினிமா சமுதாயம்' என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், பேராசிரியர் சந்திர சேகரய்யா, சமூக ஆர்வலர் கே.எல்.அசோக் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதுபற்றி தெரியவந்ததும் விழா நடந்து கொண்டிருந்த கல்லூரி முன்பு பா.ஜ.க. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் தனியார் அமைப்புகளுக்கு கல்லூரி நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து கல்லூரிக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பின்னர் விழா முடிந்து பிரகாஷ்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்றுவிட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த அறையில் பா.ஜ.க. மாணவர் அமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் பசு கோமியத்தை கொண்டு சுத்தம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
- நடிகர் பிரகாஷ் ராஜ் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் பா.ஜ.கவை பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறார்.
கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பிரகாஷ் ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.கவையும் பிரதமர் நரேந்திர மோடியும் விமர்சித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில். கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதனை அறிந்த மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாகத்திற்குள் நடத்தலாம் என கேள்வி எழுப்பியதோடு, நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கல்லூரிக்கு வரக்கூடாது என போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையாமல் இருக்க தடுப்பு அமைத்து பாதுகாப்பில் ஈடுப்பட்டதால் மாணவர்களுக்கு போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரியை விட்டு வெளியே சென்றதும் மாணவர்களில் சிலர் கோமியம் எடுத்து சென்று அவர் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.