என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அமைச்சரவை"
- பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து இன்று மத்திய அமைச்சரவை அவசரமாக கூடுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு, 2025-2026-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
அதாவது குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 10.25 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை கிடைக்கும். குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படும்.
கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் 9.5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கும் அளிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு வரும் 2025-2026-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும்.
- பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
- ஊட்டச்சத்து அடிப்படையில் உரங்களை மானிய விலையில் வழங்க ஒப்புதல்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எத்தனால் கொள்முதல் செய்யும் முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரையிலான பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோக திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளின் மூலப் பொருட்களிலிருந்து எத்தனால் பெறப்படுகிறது. இந்த எத்தனாலுக்கான கொள்முதல் மற்றும் அதிகபட்ச விலைக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, சி வகையிலான எத்தனால் லிட்டர் ரூ.46.66 லிருந்து ரூ.49.41 ஆகவும், பி வகையிலான எத்தனாலுக்கான விலை லிட்டர் ரூ.59.08 லிருந்து ரூ.60.73-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறு, சர்க்கரைப்பாகு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் விலை லிட்டர் ரூ.63.45-லிருந்து ரூ.65.61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் 2022-23 ரபி பருவத்தில் அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 ஆம் ஆண்டு வரை ஊட்டச்சத்து அடிப்படையிலால் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அளவில் நைட்ரஜனுக்கு ரூ.98.02-ம், பாஸ்பரசுக்கு ரூ.66.93-ம், பொட்டாஷூக்கு ரூ.23.65-ம், சல்ஃபருக்கு ரூ.6.12-வும், மானியமாக வழங்கப்படும் என்று மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டிவியா தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
- நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3750-ல் இருந்து ரூ.6620 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூறியதாவது:
காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
துவரம் பருப்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தியது. பருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது.
நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3750-ல் இருந்து ரூ.6620 ஆக உயர்ந்துள்ளது.
சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது.
விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
- இதில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.315 ஆக உயர்த்த முடிவானது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2023-2024 ஆண்டு கரும்பு பருவத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 10 ரூபாய் உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால், குவிண்டாலுக்கு ரூ.305 ஆக இருந்த கரும்பு விலை, ரூ.315 ஆக உயர்கிறது.
இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது. 2014-2015 பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.210 ஆக இருந்த கரும்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை, தற்போது ரூ.315 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்க நிதி உதவி அளிக்கும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதாவை கொண்டுவர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
ஏற்கனவே உள்ள அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரிய சட்டம் நீக்கப்பட்டு, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பிரதமர் மோடி தலைமையில் 15 முதல் 25 பிரபல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய ஆட்சிமன்ற குழுவால் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வகிக்கப்படும் என தெரிவித்தார்.
- கட்சியின் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்தனர்.
- 2024 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. அதன் முக்கிய சித்தாந்தக் கொள்கைகளை வலியுறுத்தும் என தெரிகிறது.
அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 3ம் தேதி (திங்கட்கிழமை), மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மோடி ஆட்சியின் 9 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் குழுவின் கடைசி கூட்டம், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் இக்கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில், செப்டம்பரில், இதே மாநாட்டு மையத்தில் ஜி20 (G20) உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவை தேர்தலுக்கான கட்சியின் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். இக்கூட்டம் நடைபெற்ற மறுநாள் அமைச்சர்கள் குழு கூட்டம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
நேற்றைய கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஒரு வழிகாட்டுதல் திட்டத்தை உருவாக்குவது பற்றியும் அக்கட்சி எதிர்கொள்ளும் சவால்களை நெறிப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அமித் ஷா, நட்டா மற்றும் பா.ஜ.க. பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் அமைப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட விவாதங்களை நடத்தினர். ஆனால், இந்த கூட்டம் குறித்து கட்சி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
எனினும், அரசாங்கத்திலும், கட்சி அமைப்பிலும் சில மாற்றங்கள் நிகழலாம் என்ற யூகங்களை இந்த ஆலோசனைக் கூட்டம் வலுப்பெற செய்துள்ளது.
சமீபத்தில் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது பொது சிவில் சட்டம் (UCC) குறித்து ஆழமாக பேசிய பிரதமர் மோடியின் உரையின் பின்னணியில், 2024 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. அதன் முக்கிய சித்தாந்தக் கொள்கைகளை வலியுறுத்தும் என தெரிகிறது.
ஜூலை 3வது வாரத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த பின்னணியில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் அரசியல் ஆர்வலர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
- மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
- ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.
புதுடெல்லி:
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. அதன்பின், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி நேராக இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். இஸ்ரோ நிறுவனம் சென்ற பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து அவர், ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என அறிவித்தார்.
இந்நிலையில், சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கிய ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாட மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
- பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
- கடந்த முறை நடந்த கூட்டத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்குவது உஜ்வாலா திட்டம்.
- இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த 3 ஆண்டுகளில், கூடுதலாக 75 லட்சம் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்படும். இதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடியை விடுவிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்துடன் சேர்த்து, உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சமாக உயரும் என தெரிவித்தார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சில முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சில முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில், பாராளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்ட்டது. நாளை முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் பாராளுமன்ற கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலே மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிப்பு.
- மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்வு.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம், 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் யன்பெறுவார்கள்.
மேலும், மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.