search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்ணங்கள்"

    • பிரின்டிங் மெஷின்போன்றே இந்த கருவியினுள் பலவித நிறமிகள் கேட்ரிட்ஜ் வைக்கப்பட்டுள்ளன.
    • நூலுக்கு சாயமேற்றவேண்டிய அவசியமில்லை.

    திருப்பூர்,

    எம்ப்ராய்டரி பொறிக்கப்பட்ட ஆயத்த ஆடைகள், சந்தையில் அதிக மதிப்பு பெறுகின்றன. நவீன எம்ப்ராய்டரி எந்திரங்களை கொண்டு, பல வித வண்ணநூல், சீக்வென்ஸ், கற்களை பயன்படுத்தி ஆடைகளில் டிசைன்கள் பொறிக்கப்படுகின்றன.எம்ப்ராய்டரி மெஷினில், சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என பல வித வண்ண நூல்களை பொருத்தி, டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. ஸ்வீடன் நாட்டு நிறுவனம் எம்ப்ராய்டரி மெஷின்களில் இணைத்து பயன்படுத்தும் புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

    பிரின்டிங் மெஷின்போன்றே இந்த கருவியினுள் பலவித நிறமிகள் கேட்ரிட்ஜ் வைக்கப்பட்டுள்ளன.ஒரேயொரு வெள்ளை நூலை மட்டும் இந்த கருவியினுள் செலுத்தி, ஆடையில் பொறிக்கவேண்டிய டிசைனை உள்ளீடு செய்தால் போதும். நுண்ணறிவு மூலம் டிசைனுக்கு ஏற்ப மெஷினுக்குள் உள்ள வண்ணங்கள்,நூலின் மீது ஸ்ப்ரே செய்யப்படுகிறது. இந்த கருவியிலிருந்து வண்ண நூல் வெளிவந்து, எம்ப்ராய்டரி மெஷினுக்குள் நுழைந்து, ஆடையில் அழகிய டிசைனை மிக நுட்பமாக பொறிக்கிறது.

    இந்த தொழில்நுட்பத்தால், நூலுக்கு சாயமேற்றவேண்டிய அவசியமில்லை. அதனால் தண்ணீர் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது. சாயக்கழிவு உருவாவது தடுக்கப்படுகிறது.பல வண்ணநூல்களை கொண்டு செல்வதற்காக எம்ப்ராய்டரி மெஷின்களில், ஏராளமான ரீல்கள் இணைக்கப்பட்டிருக்கும். புதிய கருவியை பயன்படுத்தும்போது ஒரு ரீல் மட்டுமே போதுமானது.நிட்டெக் கண்காட்சியில் இடம்பெற்ற இத்தொழில்நுட்பம் தொழில்துறையினரின் வரவேற்பை பெற்றது.

    ×