search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாத்ரீகர்கள்"

    • கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.
    • மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது.

    உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் பெண்ணும், அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

    இந்நிலையில் கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் நடைபாதையின் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கேதார்நாத்தில் கிட்டத்தட்ட 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவித்தனர்.

    மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து கேதார்நாத்தில் சிக்கித்தவிக்கும் 150 முதல் 200 யாத்ரீகர்கள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும், மேக வெடிப்பைத் தொடர்ந்து இதுவரை எந்த உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
    • கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    இதற்கிடையில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    • சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்‌ஷய திரிதியை அன்று தொடங்கியது.
    • சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோவிலில் இருந்து தொடங்கி உயரமான இடங்களில் அமைந்துள்ள மற்ற மூன்று கோவில்களுக்கு செல்வதுதான் சார் தாம் யாத்திரை.

    இந்த சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. அதன் பின்னர் நேற்றைய தேதி வரை சார் தாம் யாத்திரைக்கு யாத்ரீகர்களின் வருகையின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், " முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சார் தாம் யாத்திரையில் வரும் பக்தர்களின் சுமூகமான தரிசனத்திற்காக உத்தரகாண்ட் காவல்துறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நேற்று மே 18ம் தேதி வரை, சார் தாம் யாத்திரையில் சென்ற யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது " என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்ய மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

    • கங்கோத்ரிக்கு 3,33,9090 யாத்ரீகர்களும், யமுனோத்ரிக்கு 2,50,398 யாத்ரீகர்களும் வந்துள்ளனர்.
    • இமயமலைக் கோயில்களுக்கு இதுவரை சென்ற மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 18,01,209-ஆக உள்ளது.

    இமயமலையில் உள்ள சார் தாம் யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வந்துள்ளதனர்.

    இதுகுறித்து பத்ரிநாத்- கேதார்நாத் கோயில் கமிட்டியின் ஊடகப் பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் கூறியதாவது:-

    ஒரு மாதத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் சார்தாம் ஆலயங்களுக்கு வருகை தந்துள்ளனர். இதில், பத்ரிநாத்துக்கு 6,18,312 யாத்ரீகர்களும், கேதார்நாத்துக்கு 5,98,590 யாத்ரீகர்களும் வந்துள்ளனர்.

    இதேபோல், கங்கோத்ரிக்கு 3,33,9090 யாத்ரீகர்களும், யமுனோத்ரிக்கு 2,50,398 யாத்ரீகர்களும் வந்துள்ளனர்.

    மேலும், இமயமலைக் கோயில்களுக்கு இதுவரை சென்ற மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 18,01,209-ஆக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×