என் மலர்
நீங்கள் தேடியது "மின்சார ரெயில்கள்"
- பொன்னேரி-கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- இன்று முதல் 12ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இன்று முதல் 12ஆம் தேதி வரை பொன்னேரி-கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 2 ரெயில்கள் சென்னை பீச் வரை தான் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
- கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழுவதுமாக ரத்து
* சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15, 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் - பொன்னேரி, மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - சென்ட்ரல், மாலை 3.56 மணிக்கு எண்ணூர் - சென்ட்ரல், காலை 11.35, மதியம் 1.40 மணிக்கு சென்ட்ரல்- மீஞ்சூர், மாலை 4.14 மணிக்கு மீஞ்சூர் - சென்ட்ரல், மதியம் 2.40 மணிக்கு கடற்கரை - பொன்னேரி, மாலை 4.47 மணிக்கு பொன்னேரி - கடற்கரை, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- ஆவடியில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 4.25 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் பயணிகள் ரெயில் ரத்துசெய்யப்படுகிறது.
- சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழுவதுமாக ரத்து
* மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 1, மாலை 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதேதேதிகளில் காலை 12.35, மதியம் 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 12.40, 2.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதேதிகளில் மதியம் 2.30, மாலை 3.15, 4.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதேதேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 4.25 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் பயணிகள் ரெயில் ரத்துசெய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* செங்கல்பட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்துசெய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 60 சதவீத மின்சார ரெயில்களில் மட்டுமே 12 பெட்டிகள் உள்ளன.
- மீதமுள்ள 40 சதவீத ரெயில்கள், 9 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் உள்ளது. சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி வழித்தடங்களில் சுமார் 500 மின்சார ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்ளுக்கு செல்வோர் அதிக அளவில் மின்சார ரெயில்களில் பயணம் செய்வார்கள் என்பதால் கூட்டம் அதிகம் காணப்படும்.
சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரெயில்களை தவிர, மற்ற அனைத்து ரெயில்களும் 12 பெட்டி மின்சார ரெயில்களாக இயக்கப்படுகின்றன.
ஆனால், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 60 சதவீத மின்சார ரெயில்களில் மட்டுமே 12 பெட்டிகள் உள்ளன. மீதமுள்ள 40 சதவீத ரெயில்கள், 9 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அனைத்து மின்சார ரெயில்களையும் 12 பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இதற்கான பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, 'மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் செல்ல வசதியாக, அனைத்து மின்சார ரெயில்களும் 12 பெட்டிகளாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
12 பெட்டிகள் நிற்கும் வகையில், பெரும்பாலான மின்சார ரெயில் நிலையங்களில் நடைமேடைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் முடிந்துள்ளது. சில ரெயில் நிலையங்களில் நடக்கும் பணிகளும் விரைவில் முடிந்து விடும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மின்சார ரெயில்களும், 12 பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
- இரும்புப் பாதை சிக்னல் பழுது காரணமாக ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்.
- அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரெயில்கள் நிறுத்தம்.
சென்னை:
சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இரும்புப் பாதை சிக்னல் பழுது காரணமாக ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னைக்கு வேலைக்கு வரும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
- ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்வே வாரியம், அம்ரித் பாரத் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
- மேம்படுத்துதல் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.
சென்னை:
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயில் 90 ரெயில் நிலையங்கள் புதுப்பித்து மேம்படுத்தப்பட உள்ளன.
இந்த 90 ரெயில் நிலையங்களை கண்டறிந்து அங்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுவதற்கான ஒப்பந்தங்களை ஆலோசகர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் விலை ரூ.11.22 கோடியாகும்.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகணேசன் கூறியதாவது:-
ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்வே வாரியம், அம்ரித் பாரத் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்காக தெற்கு ரெயில்வே டெண்டர் விடுவதற்காக ரூ.881.42 கோடி நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறது. தெற்கு ரெயில்வேயின் 6 மண்டலங்களின் கீழ் வரும் 90 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
சென்னை கோட்டத்தில், கிண்டி, பரங்கிமலை, கடற்கரை, பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், சூலூர்பேட்டை, அரக்கோணம், மாம்பலம், திருத்தணி, ஜோலார்பேட்டை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய 15 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த மேம்படுத்துதல் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன. பிளாட்பாரங்களின் உயரத்தை அதிகரிப்பது, பயணிகள் நடந்து செல்லும் நடை மேம்பாலங்களை அகலப்படுத்துதல், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் 2-வது நுழைவுவாயலை ஏற்படுத்துதல், ரெயில் நிலையங்களின் கட்டமைப்பின் உட்புறங்களை மேம்படுத்துதல், கழிப்பறைகளை புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் 150-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயிலும், இன்றும், 13-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
- சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் இடையே இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 14-ந்தேதி(புதன்கிழமை) வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, இந்த நாட்களில் சில மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரெயில், ஆவடிக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் ரெயில்களும், அதேபோல் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயிலும், இன்றும், 13-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு செல்லும் ரெயில், திருவள்ளூரில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரெயில்கள் நாளை(திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
ஆவடியில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயில், சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 10.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் இன்றும், 13-ந்தேதியும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் ரெயில் வரும் 14-ந்தேதி ஆவடியில் இருந்து இயக்கப்படும்.
சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் ரெயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே இரவு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் பணிமனையில் தண்டவாளம் மற்றும் மின்சார பராமரிப்புப் பணி இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.10, 9.30, 9.40, 10.05, 10.20, 11, 11.20, 11.40, 11.59 மணிக்கும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 9.20, 9.50, 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று மறுமார்க்கமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 9.50, 10.45, 11.20, 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே இரவு 9.10, 9.20, 9.40, 10.05, 10.30, 11, 11.59 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 9.55, 10.10, 10.30, 10.50, 11.15, 11.45 மணிக்கும், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இரவு 10.15, 10.45, 11.40 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.மேலும் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இரவு 9.10, 10.10 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும், திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே இரவு 8 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும், இன்று தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- புறநகர் மின்சார ரெயில்களில் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
- மின்சார ரெயில்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் ‘மெமு’ வகை ரெயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடத்திலும் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். நெரிசல் மிகு நேரங்களில் திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். இச்சம்பவத்தில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சிகிசை பெற்று வந்த பிரீத்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, தாம்பரம், ஆவடி வழித்தடங்களில் உள்ள மின்சார ரெயில் நிலையங்களிலும் திருட்டு சம்பவங்களும், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாடு குறித்து சமீபத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், ரெயில்வே கோட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையின் மண்டல பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாம்பரம், ஆவடி, வேளச்சேரி ரெயில் பணிமனை மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புறநகர் மின்சார ரெயில்களில் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவில் போதிய ஆட்கள் உடனடியாக நியமிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
எனவே, மின்சார ரெயில்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் 'மெமு' வகை ரெயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கான பெட்டிகள் ரெயில்களின் நடுப்பகுதியில் ஒரே பெட்டியாக ஒதுக்கீடு செய்தால் ரெயில்வே பாதுகாப்பு பணிக்கு வசதியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல், ரெயில்களின் பெட்டிகளிலும், ரெயில் நிலையங்களிலும் உரிய மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 4 நாட்களாக புறநகர் பகுதியில் இருந்து வரும் மக்கள் நெரிசலில் பயணிக்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
- கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சென்னை:
சென்னை பெருநகரத்தோடு புறநகர் மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில்கள் உள்ளன.
சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரெயில்கள் மூலம் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.
தொழில், கூலி வேலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மின்சார ரெயில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் மின்சார ரெயில்களின் கால அட்டவணையை 14-ந்தேதி முதல் மாற்றி சென்னை கோட்டம் வெளியிட்டது. அதில் பல்வேறு ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டன. அதே நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை குறைக்கப்பட்டன. திருவள்ளூர்-ஆவடி இடையே 8 சேவையும், கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை 9-ம், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 9 சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
4 வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மின்சார ரெயில் சேவை திடீரென குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த 4 நாட்களாக புறநகர் பகுதியில் இருந்து வரும் மக்கள் நெரிசலில் பயணிக்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது. கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். புறநகர் ரெயில் சேவையை குறைத்தது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்கத்தில் சில ரெயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் ஏற்கனவே குறைவான சேவை இருப்பதால் அந்த மார்க்கத்தில் குறைக்கவில்லை. ரெயில் சேவையை குறைத்து உள்ளதால் பயணிகள் மிக மோசமான பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் விட வேண்டும். திருவள்ளூர்-வேளச்சேரி மற்றும் திருவள்ளூர்-தாம்பரம் இடையே பஸ் பயணத்தை மேற்கொண்டால் அதிக போக்குவரத்து செலவை எதிர்கொள்ள வேண்டும். ஆதலால் இந்த மார்க்கத்தில் மின்சார ரெயில்களை அதிகப்படுத்தினால் உதவியாக இருக்கும்.
அரக்கோணத்தில் இருந்து கடற்கரை நிலையம் வழியாக வேளச்சேரி சென்ற மின்சார ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கடற்கரை-வேளச்சேரி இடையே மட்டும் இயக்கப்படுகிறது.
இதேபோல திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் சேவையில் ஆவடி-மூர்மார்க்கெட், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்க்கெட் இடையே நிறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பயணிகள் நலச்சங்க பிரதிநிதி சென்னை கோட்ட மேலாளரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், "ரெயில்வே கால அட்டவணையில் புதிய ரெயில்கள் எதுவும் இடம்பெறவில்லை. கூடுதலாக சேவை வழங்கப்படவில்லை. மாறாக குறைத்திருப்பது பயணிகள் நலனில் அக்கறை இல்லாததை வெளிகாட்டுகிறது.
கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரையிலான நள்ளிரவு சேவை நிறுத்தப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது. எனவே கடற்கரை-அரக்கோணம் சேவையை மீண்டும் விட வேண்டும். இதில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு பணி முடிந்து வீடு திரும்ப வசதியாக இருந்தது.
வில்லிவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருந்து திருவள்ளூர், திருநின்றவூர் பகுதிக்கு செல்ல இது உதவியாக இருந்தது. அந்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. மின்சார ரெயில் சேவை பயன் அளித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "பயணிகள் பயன்பாட்டை கணக்கிட்டுதான் ரெயில் சேவை அதிகரிப்பது, குறைப்பது தீர்மானிக்கப்படும். 4 வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணிகள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணி 2 மாதங்கள் நடைபெற உள்ளது. அவை முடிந்த பின் சேவை அதிகரிக்கப்படும்" என்றார்.
இதற்கிடையில் மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டியில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அவ்வப்போது அசம்பாவித செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மின்சார ரெயில்களுக்கும் தேவையான அளவு பெண் போலீசார் இல்லாததால் குற்றங்களை குறைக்க முடியவில்லை என்ற கருத்து போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.
- பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
- திருவள்ளூர்- சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 11.10 மணிக்கும், பகல் 12.35 மணிக்கும் இயக்கப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரக்கோணம் ரெயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தால் நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே இயங்கும் 9 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு மாற்றாக பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதியில் சென்னை சென்ட்ரல் புறநகர்- கடம்பத்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 8.20 மணிக்கும், காலை 11 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக கடம்பத்தூர்-சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 10.25 மணிக்கும், காலை 11.35 மணிக்கும், பிற்பகல் 1.25 மணிக்கு இயக்கப்படும்.
அதேபோல் சென்னை சென்ட்ரல் புறநகர்-திருவள்ளூர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 9.10 மணிக்கும், காலை 10 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவள்ளூர்- சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 11.10 மணிக்கும், பகல் 12.35 மணிக்கும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தண்டவாள பகுதிகளில் ராட்சத கிரேன் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- பணிகள் தொடங்கிய பிறகே ரெயில் சேவையில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்கிற முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்குவதை தடுப்பதற்காக வெள்ளத் தடுப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் ரெயில் நிலைய பாலங்களையொட்டிய பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சனைகளால் மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதில் சவால்கள் இருந்து வந்தன. ரெயில்வே தண்டவாளங்களின் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டன. இந்த இடங்களில் தண்டவாளத்துக்கு கீழே மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது எப்படி? என்கிற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளை தொடங்குவதற்கு ரெயில்வே நிர்வாகத்துடன் உரிய முன் அனுமதி பெற வேண்டியது இருந்ததால் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ரெயில்வே நிர்வாகத்துடன் பேசி தண்டவாளத்துக்கு கீழ் மழைநீர் வடிகால் பணிகளை அமைப்பது தொடர்பான அனுமதியை கேட்டுப்பெற்றுள்ளனர்.
இதன்படி எழும்பூர் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் ஒருபுறத்தில் இருந்து இன்னொரு புறத்திற்கு மழைநீரை கொண்டு செல்வதற்கான வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இந்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். இதை தொடர்ந்து இந்த பணிகள் தொடங்கி தொடர்ச்சியாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள காந்தி இர்வின் சாலை பாலம் பகுதியில் தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பகுதியில் சுற்றியுள்ள இடங்களில் பணிகள் 90 சதவீத அளவுக்கு முடிவடைந்துள்ளன. தண்டவாளத்தின் குறுக்கே சுமார் 50 மீட்டரில் தூர்வாரும் கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.
இந்த பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. மழை வெள்ளப் பாதிப்பை தடுக்க கட் மற்றும் கவர் என்கிற தொழில்நுட்ப முறையில் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மழைநீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காணப்படும்.
இதற்காக தண்டவாள பகுதிகளில் ராட்சத கிரேன் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கடற்கரை மின்சார ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடற்கரையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில்கள் பணிகள் தொடங்கி முடியும் வரை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை மின்சாரம் ரெயில் சேவை தடைபட உள்ளது.
அதே போன்று எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகமும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் 6 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படும்.
இதே போன்று கணேச புரம் பகுதியிலும் தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியிலும் ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டு ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட உள்ளது.
புறநகர் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் தடைபட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த பணிகள் தொடங்கிய பிறகே ரெயில் சேவையில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்கிற முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.