என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதிப்பில்"
- எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- மாவட்ட திட்ட இயக்குனர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ராஜாக்கமங்கலம்:
மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் வேம்பனூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள விவசாயம் விளை பொருட்கள் கிட்டங்கியை எம்.ஆர். காந்தி திறந்து வைத்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் அய்யப்பன், ஊராட்சி துணை தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா, ஊராட்சி உறுப்பி னர்கள் முன்னிலை வகித்த னர். மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அதே வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை ஊராட்சி தலைவர் முத்து சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்திற்கு மாவட்ட திட்ட இயக்குனர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகாபாய், ராஜா ஆறுமுக நயினார், பொறியாளர் கவிதா, தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கால்நடை மருத்துவர், அங்கன்வாடி பணியாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள், காவல் நிலைய ஊழியர்கள், ஊராட்சி செயலாளர் சசிகலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் தங்களை அர்ப்பணித்து கடமையை செய்ததற்காக அவர்களுக்கு ஊராட்சி தலைவர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விவசாய விளை பொருட்கள் கிட்டங்கியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விவசாயி பங்களிப்புடன் பயன்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பன்றிவாய்க்கால் கால் வாயை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் கட்டவேண்டும் என்றும், ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்றும், சாந்தபுரம் சாலை மேலசங்கரன்குழியில் நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெறும் கட்டுமானம் வேகமாக வேலையை முடிக்க வேண்டும் என்றும், ரோட்டு ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், நெல் அறுவடை செய்ய முடியாமல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவும், வீடுகளில் உள்ள கழிவு குப்பைகளை சாலை ஓரம் தெருக்களில் கொட்டாமல் ஊராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வழங்கவேண்டும் என்றும், தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் புதிய தெரு விளக்கு பொருத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவேண்டும் என்றும், கிராம சபையில் சிறப்பு தீர்மானங்களாக நிறை வேற்றபட்டது.
- கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு
- பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஏற்றக்கோடு மற்றும் குமரன்குடி ஊராட்சி பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைப்பது, நீர் நிலைகளை தூர்வாருவது, குடிநீர் வசதி உள்ளிட்ட பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட குளச்சல் திருவட்டார் சாலை முதல் கட்டைக்கால் சாலை வரை தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் கருந்தளம் அமைக்கப்பட்டி ருந்த பணியினை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிற்றார் பட்டணக்கால் கால்வாய் முதல் கூடளாகம் வரை மகாத்மா காந்தி தேசிக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் கால்வாய் தூர்வாரி மேம்படுத்தும் பணியினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குமரன்குடி ஊராட்சிக் குட்பட்ட கண்ணன்கரை விளை முதல் கொல்லன் விளை சாலை வரை பத்மநா பபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.99 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்ட சிமெண்ட் சாலை மற்றும் கட்டி முடிக்கப் பட்ட தடுப்புச்சு வர் பணியினை யும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் வடக்கநாடு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணி என மொத்தம் ரூ.71.69 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, கீதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பால்சன் (குமரன்குடி), ஹெப்சிபாய் கிறிஸ்டி (ஏற்றக்கோடு), உதவி பொறியாளர்கள் சஞ்சு பொன்ராஜன், கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை குமலன்குட்டை பகுதியில் நடைபெற்றது.
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை சாலை விரிவாக்க பணி
ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ரூ.6.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை குமலன்குட்டை பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர்சு. முத்துசாமி தலைமை தாங்கி சாலை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது நெடுஞ்சாலை துறை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை சாலை விரிவாக்க பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ.6.60 கோடி மதிப்பில் நடைபெறு–கிறது. இந்தப் பணி விரைந்து முடிக்கப்படும்.
இங்கு வரும் தண்ணீரை காரணம் முதலில் அதிகாரிகள் சொல்வது முதலில் காலியிடம் இருந்ததால் தண்ணீர் அங்கு போய் தேங்கி நின்றது. தற்போது கட்டிடம் வந்து விட்டதால் ரோட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தண்ணீரை வெளியே எடுத்து செல்வதற்காக சாக்கடை தண்ணீராக இருந்தாலும் சரி, மழை நீராக இருந்தாலும் சரி அதற்கான கழிவு நீர் கால்வாய் வசதி செய்யப்படுகிறது.
இவை முழுமையாக செய்யப்பட்டு அருகில் ஒரு ரோடு உள்ளது .அந்த ரோடு வழியாக தண்ணீர் திருப்பி விடப்படும். அந்த ரோடு மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளதால் இந்த தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான வழிவகைகளை அவர்கள் செய்வார்கள்.இதற்கான திட்டமும் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. குமலன் குட்டை கார்னரில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்டு குமலன் குட்டை பகுதியில் ஒரு ரவுண்டானா உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கவுன்சிலர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பவானி காளிங்கராயன் பாளையத்தில் அத்திக்கடவு அவிநாசி கூட்டு குடிநீர் திட்ட முடிவுற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.
- வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.
இதில் கொங்காடை ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடம் முதல் மாதேஸ்வரன் வீடு வரையிலும், தாமரைக்கரை கொங்காடை சாலை முதல் பட்டய பாளையம் வரை உள்ள சாலை, ஒன்னகரை முதல் முத்தூர் வன எல்லை வரையிலும் தாமரைக்கரை பெஜில் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்தல் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் தாமரைக்கரை பஸ் நிறுத்தம், பர்கூர் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பயணியர் நிழற்குடை, கடையிரட்டி பகுதியில் ஆழ்துளைக்கிணறு, தட்ட கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மேலும் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
இதில் மைக்கேல் பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகேயன், வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் மரியதாஸ் செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் பர்கூர் சிவக்குமார் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமதாஸ் மற்றும் விவசாயிகள் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேர் நிறுத்த இடம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
கோவில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தனது சொந்த பொறுப்பில் இதை அமைத்து கொடுக்க உள்ளார்.
இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேர்மன் விஜய்கண்ணன், கோவில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்