என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெனால்ட்"
- பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது.
- பின்புற டிசைன் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் மிட் சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.
புதிய மாடல் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கார் 5 சீட்டர் வடிவில் அறிமுகமாகுமா அல்லது 7 சீட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், டஸ்டரின் 7 சீட்டர் வெர்ஷனான பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
புதிய பிக்ஸ்டர் மாடல் CMF-B ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 4.6 மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் இதன் வீல்பேஸ் பின்புற இருக்கைகளுக்கு ஏற்ற வகையில் அளவில் நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த காரின் புன்புற டிசைன் வழக்கமான டஸ்டர் போன்றில்லாமல் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.
எனினும், இதன் விலை மற்றும் உற்பத்தி செலவீனங்களை குறைவாக வைத்துக் கொள்ளும் நோக்கில், புதிய பிக்ஸ்டர் மாடலின் பாடி பேனல்கள், மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் டஸ்டர் மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய டஸ்டர் மாடல் மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார், எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மற்றும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- இரு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று முற்றிலும் புதிய ரெனால்ட் க்விட் EV ஆகும்.
- சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என அழைக்கப்படலாம்.
இந்திய சந்தையில் ஆறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரெனால்ட்-நிசான் அலையன்ஸ் சார்பில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். தற்போது இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று முற்றிலும் புதிய ரெனால்ட் க்விட் EV என்பது தெரியவந்துள்ளது.
டேசியா டஸ்டர் மாடலின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் க்விட் EV மாடல் சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரின் முகப்பு பகுதியில் கிரில் மூடப்பட்டு முற்றிலும் புதிய டிசைன் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் கிரில் பகுதியின் மத்தியில் அளவில் பெரிய DC லோகோ இடம்பெற்று இருக்கிறது. இதுவே காரின் சார்ஜிங் டாக் ஆகவும் செயல்படும் என்று தெரிகிறது. வெளிப்புற தோற்றத்தில் இந்த கார் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் அலாய் வீல் வித்தியாசமாகவும், ரூஃப் ரெயில் மற்றும் டோர் கிளாடிங்கில் புளூ அக்சென்ச்ட்கள் செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் க்விட் எலெக்ட்ரிக் மாடலில் 26.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 43 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய சந்தையில் புதிய க்விட் EV மாடல் பன்ச் EV, சிட்ரோயன் eC3, டியாகோ EV மற்றும் எம்.ஜி. கொமெட் EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.
- அதிக அம்சங்கள் நிறைந்த கேபின் உள்ளது.
- புதிய பவர்டிரெயின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் முற்றிலும் புதிய டஸ்டர் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மாடல் அதிநவீன ஸ்டைலிங், அதிக அம்சங்கள் நிறைந்த கேபின் மற்றும் புதிய பவர்டிரெயின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
புதிய காரின் வெளிப்புறம் ரக்கட் எஸ்.யு.வி. போன்ற தோற்றத்தை வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் Y வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புறம் மற்றும் பின்புறம் ரிவைஸ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் பின்புறத்தில் Y வடிவம் கொண்ட ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் பருத்த வீல் ஆர்ச்கள், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள், பில்லரில் மவுன்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள், எக்ஸ்டென்ட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர் மற்றும் முரட்டுத்தனமான பம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
காரின் உள்புறத்தில் 10.1 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி சரவுன்ட் கேமரா, ADAS சூட், Y வடிவம் கொண்ட ஏ.சி. வென்ட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், புதிய ஸ்டீரிங் வீல், ரிடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல், புதிய கியர் செலக்டர் டயல் உள்ளன.
பவர்டிரெயினை பொருத்தவரை சர்வதேச சந்தையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட், 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் எல்.பி.ஜி. வசதி வழங்கப்படுகிறது. இவற்றில் இரு ஆப்ஷன்கள் இந்திய சந்தையில் கிடைக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- 2024 மாடல்களில் புதிய அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.
- புதிய கார்களின் என்ஜின்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களை அப்டேட் செய்துள்ளது. அந்த வகையில் 2024 குவிட், டிரைபர் மற்றும் கைகர் மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. 2024 மாடல் புதிய நிறங்கள் மற்றும் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் புதிய அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இவைதவிர புதிய கார்களின் என்ஜின்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி 2024 ரெனால்ட் குவிட் மாடல் மூன்று டூயல் டோன் நிறங்கள்- ரெட், சில்வர் மற்றும் புளூ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் வழங்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ. 4 லட்சத்து 69 ஆயிரத்து 500 என துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 95 ஆயிரம் ஆகும்.
2024 கைகர் மாடலில் ஆட்டோ-ஃபோல்டு ORVMகள், ஆட்டோ டிம்மிங் IRVMகள், எல்.இ.டி. கேபின் லேம்ப்கள், ரியர் சீட் பெல்ட் ரிமைன்டர் போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 5 லட்சத்து 99 ஆயிரத்து 990 என துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆகும்.
ரெனால்ட் டிரைபர் மாடல் முற்றிலும் புதிய ஸ்டெல்த் பிளாக் நிற ஆப்ஷனில் கிடைக்கிறது. இதில் 7 இன்ச் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ரியர் சீட் பெல்ட் வார்னிங் வழங்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ. 5 லட்சத்து 99 ஆயிரத்து 500 என துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 74 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- லாயல்டி பலன்கள் வடிவில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- இந்த சலுகைகள் கார் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பின் படி ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், டிரைபர் மற்றும் கைகர் மாடல்களுக்கு தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி பலன்கள் வடிவில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகைகள் இம்மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும். ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் தள்ளுபடியாக ரூ. 25 ஆயிரம், எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் கார் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
2023 ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ஊரக பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெனால்ட் க்விட் மற்றும் டிரைபர் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் வரை எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் லாயல்டி பலன்களாக இரு மாடல்களுக்கும் ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
க்விட் மற்றும் டிரைபர் மாடலை வாங்கும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 12 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. க்விட் RXE மற்றும் அர்பன் நைட் எடிஷன் வேரியண்ட்களுக்கு லாயல்டி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகள் வாடிக்கையாளர் வசிக்கும் பகுதி, கார் மாடல், வேரியண்ட், நிறம், விற்பனை மையம் மற்றும் வாகனங்கள் இருப்புக்கு ஏற்றார்போல் வேறுபடும்.
- டேசியா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.
- இந்த கார் 7 சீட்டர் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ரெனால்ட்-இன் துணை பிராண்டு டேசியா அறிமுகம் செய்துள்ளது. புதிய டஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற சந்தைகளில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் 2025 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் இதுவரை பல்வேறு டேசியா, ரெனால்ட் மற்றும் நிசான் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.
இந்த காரின் முன்புறம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் டேசியா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், ரெனால்ட் பிராண்டிங்கில் அறிமுகமாகும் டஸ்டர் மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 7 சீட்டர் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
டேசியா டஸ்டர் மாடலில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் 1.2 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் ஸ்டார்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலை போன்றே புதிய டஸ்டர் மாடலும் 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- புதிய டஸ்டர் மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- புதிய டஸ்டர் மாடல் மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும்.
ரெனால்ட் நிறுவனம் தனது முற்றிலும் புதிய டஸ்டர் எஸ்.யு.வி.-யை நவம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த மாடல் 2025 ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
புதிய டஸ்டர் மாடலில் எண்ட்ரி லெவல் 120 ஹெச்.பி. பவர் திறன் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 140 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியானதில் சக்திவாய்ந்த டஸ்டர் மாடலாக இது இருக்கும்.
இதுதவிர முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர் மாடலின் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட வெர்ஷனும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இது பிக்ஸ்டர் எஸ்.யு.வி. என்று அழைக்கப்படலாம். இந்த கார் அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே புதிய டஸ்டர் மாடல் 2025-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இது தற்போது எஸ்.யு.வி. சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
- ரெனால்ட் நிறுவன கார் மாடல்களின் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.
- லிமிடெட் எடிஷன் என்பதால் கார்களின் 300 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது குவிட், கைகர் மற்றும் டிரைபர் மாடல்களின் அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்களின் விலை இவற்றின் ஸ்டான்டர்டு வேரியண்ட்களை விட அதிகம் ஆகும்.
லிமிடெட் எடிஷன் என்பதால், இந்த காரின் ஒவ்வொரு மாடலிலும் 300 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் கார்கள் ஸ்டெல்த் பிளாக் வெளிப்புற நிறமும், ஸ்டார்டஸ்ட் சில்வர் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.
இத்துடன் ஸ்மார்ட் மிரர் மாணிட்டர், மேம்பட்ட ஆம்பியண்ட் லைட்டிங், இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃப் பிளேட், படில் லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. ரெனால்ட் குவிட் அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 999 வரையிலும், கைகர் மற்றும் டிரைபர் மாடல்களின் லிமிடெட் எடிஷன் மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 வரையிலும் அதிகரித்து இருக்கிறது.
- சர்வதேச சந்தையில் இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும்.
- ரெனால்ட் ரஃபேல் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் உள்ளது.
ரெனால்ட் ரஃபேல் எஸ்யுவி மாடல் 54-வது பாரிஸ் ஏர் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் ஆகும். 1930 முதல் விமான உற்பத்தி பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ரஃபேல் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
1934-ம் ஆண்டு முதல் ரஃபேல் விமானம் கௌட்ரான் ரெனால்ட் உற்பத்தி செய்தது. இந்த மாடல் C460 பெயர் கொண்டிருக்கிறது. ஆஸ்ட்ரல் மற்றும் இ-ஸ்பேஸ் போன்ற ரெனால்ட் வாகனங்களின் பிளாட்ஃபார்மில் ரஃபேல் உருவாக்கப்படுகிறது. புதிய எஸ்யுவி மாடல் ஃபாஸ்ட்பேக் வடிவம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் கிளட்ச் இல்லா ஹைப்ரிட் பவர்டிரெயின் உள்ளது.
சர்வதேச சந்தையில் இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும். இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், 2024 வாக்கில் இந்த மாடல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு, ரெனால்ட் லோகோ கொண்டிருக்கிறகது.
இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், பொனெட்டில் இரண்டு கேரக்டர் லைன்கள், பொனெட் கிளாம்ஷெல் யூனிட் போன்று காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பரில் கூர்மையான கிரீஸ்கள், பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஸ்போர்ட் ரூஃப் ஸ்பாயிலர், பின்புறம் எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ரெனால்ட் லோகோ மற்றும் அழகிய ரஃபேல் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது.
முற்றிலும் புதிய ரெனால்ட் ரஃபேல் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவை ஒருங்கிணைந்து 194 ஹெச்பி பவர், பெட்ரோல் என்ஜின் மட்டும் 127 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- ரெனால்ட் நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4.8 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும்.
- ரெனால்ட் நிறுவனம் தனது கார்களை உலகின் 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. பத்து லட்சமாவது யூனிட்-ஆக ரெனால்ட் கைகர் ரேடியன்ட் ரெட் நிற மாடல் அமைந்தது. இந்த கார் சென்னையில் உள்ள ரெனால்ட் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் குவிட், கைகர் மற்றும் டிரைபர் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
மேலும் ரெனால்ட் நிறுவனம் தனது கார்களை SAARC, ஆசிய பசிபிக், இந்திய பெருங்கடல், தென்னாப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா என 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
"இந்திய சந்தையில் பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தி எனும் மைல்கல் ரெனால்ட் நிறுவனத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்திய சந்தைக்கு நாங்கள் கொடுக்கும் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாக அமைந்துள்ளது."
"எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து சுவார்ஸயம் நிறைந்த வாகனங்களை அறிமுகம் செய்து, எங்களது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்வோம்," என்று ரெனால்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் மமலிப்பலே தெரிவித்தார்.
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
- புதிய டஸ்டர் மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. 2013 வாக்கில் முதல் தலைமுறை டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்திய சந்தையில் இதன் இரண்டாவது தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. அந்த வகையில், மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் 2025 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஸ்பை படங்களின் படி மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் தோற்றத்தில் டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட் எஸ்யுவி போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இதில் மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், சதுரங்க வடிவிலான ஃபிளாட் பொனெட் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
பக்கவாட்டு பகுதிகளில் டஸ்டர் மாடலில் புல்-டைப் டோர் ஹேண்டில்களை கொண்டிருக்கிறது. இதன் ரியர் டோன் ஹேண்டில்கள் சி பில்லரில் இண்டகிரேட் செய்யப்பட்டு உள்ளது. மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடலில் தொடர்ந்து சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்களே வழங்கப்பட்டு இருக்கின்றன.பின்புறம் பூமராங் வடிவம் கொண்ட டெயில் லேம்ப், டுவின் பாட் ஸ்பாயிலர் உள்ளது.
புதிய ரெனால்ட் டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் அதிகளவு உள்நாட்டிற்கு ஏற்ற மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த கார் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் ஐந்து இருக்கைகள் வழங்கப்பட உள்ளன. இதே காரின் 7 சீட்டர் வெர்ஷனும் உருவாக்கப்படுகின்றன.
Photo Courtesy: cochespias
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய இ-ஸ்பேஸ் மாடல் ஐந்து மற்றும் ஏழு இருக்கை லே-அவுட்களில் கிடைக்கும்.
- சர்வதேச சந்தையில் புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாக இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடலின் முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஆறாவது தலைமுறை மாடலாக உருவாகி வரும் ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.
புதிய இ-ஸ்பேஸ் மாடல் எம்பிவி பாடி ஸ்டைல் கொண்டிருக்கிறது. அளவில் இந்த கார் 4.72 மீட்டர் நீளம், உள்புறம் 2.48 மீட்டர் நீளமாக உள்ளது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இ-ஸ்பேஸ் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் சி வடிவ டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர இந்த எஸ்யுவி மாடல் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், ஃபிளாட் ரூஃப்லைன், ஷார்க் ஃபின் ஆண்டெனா கொண்டிருக்கிறது.
ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் மைல்டு அல்லது ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த எஸ்யுவி மாடல் 1.2 லிட்டர் அல்லது 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவை முறையே 140 ஹெச்பி பவர், 200 ஹெச்பி என வெவ்வேறு செயல்திறன் வெளிப்படுத்தும் என தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்